இந்தியாவின் மிகப்பெரிய உணவு டெலிவரி சேவை நிறுவனமான Zomato இந்த வாரம் துவக்கத்தில் பச்சை நிற சீருடைகளை அணிந்த டெலிவரி ஊழியர்கள் சைவ உணவை மட்டுமே டெலிவரி செய்யும் ப்யூர் வெஜ் மோட் மற்றும் ப்யூர் வெஜ் ப்ளீட் அறிமுகம் செய்து பெரும் சர்ச்சையில் மாட்டிக்கொண்டார்.
இந்த சர்ச்சை முடிந்து அடுத்த சில மணிநேரத்தில் Zomato சிஇஓ தீபேந்தர் கோயலின் 2வது திருமண செய்தி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபேந்தர் கோயல் மெக்சிகோ நாட்டை சேர்ந்த தொழிலதிபர் மற்றும் மாடல் அழகியான கிரேசியா முனோஸ் என்பவரை 2வது முறையாகத் திருமணம் செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ஸ்டார்ட்-அப் களத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Zomato நிறுவனர் தீபேந்தர் கோயல் சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணத்தை நடத்தியுள்ளதாகவும், இருவரும் தங்கள் தேனிலவுக்கு பிப்ரவரி மாதம் இந்தியா திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் Zomato நிறுவனர் தீபேந்தர் கோயல் முதல் மனைவி யார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
தீபேந்தர் கோயல் முதல் மனைவி பெயர் கஞ்சன் ஜோஷி என்பவர் ஆவார். இவர்கள் இருவரும் ஐ.ஐ.டி. டெல்லியில் கணிதம் மற்றும் கணினி அறிவியல் பிரிவில் படித்த போது இருவரும் கல்லூரித் தோழர்கள். தீபேந்தர் கோயல் துரத்திக் துரத்தி காதலித்து திருமணம் செய்துகொண்டு உள்ளார்.
ஃபோர்ப்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தீபேந்தர் கோயல் தனது கல்லூரி கால காதல் மற்றும் திருமண வாழ்க்கை பற்றி பகிர்ந்து கொண்டார். கல்லூரி படிப்பு காலத்தில், தனது வகுப்பில் படித்த கஞ்சன் ஜோஷியை பார்த்து ஈர்க்கப்பட்ட தீபேந்தர் கோயல், சுமார் ஆறு மாதங்கள் அவரது நண்பராக பழகி, பின்னர் காதலை வெளிப்படுத்தி திருமணம் செய்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.
தற்போது கஞ்சன் ஜோஷி டெல்லி பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக பணியாற்றுகிறார்.


Click it and Unblock the Notifications