அமெரிக்க நிறுவனங்கள் தொடர்ந்து விடாப்பிடியாக இந்தியர்களை உயர்மட்ட பதவிகளில் அமர்த்தி வருகிறது. ஏற்கனவே அமெரிக்கா நிறுவனங்களில் சிஇஓ-வாக இருப்போர் பட்டியல் நீண்டு கொண்டு இருக்கும் நிலையில் புதிதாகப் பெண் ஒருவர் அமெரிக்கா நிறுவனத்தின் சிஇஓ-வாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்-ஐ தலைமையிடமாகக் கொண்டு உலகளாவிய விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு நிறுவனமாக விளங்கும் ஓகில்வி (Ogilvy), இந்தியாவில் பிறந்த தேவிகா புல்சந்தனி-யை அதன் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது.
ஒகில்வி வட அமெரிக்காவின் குளோபல் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வரும் தேவிகா புல்சந்தனி, ஆண்டி மெயின் பதவியில் நியமிக்கப்பட உள்ளார் என ஒகில்வி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
யார் இந்தத் தேவிகா புல்சந்தனி..?
தேவிகா புல்சந்தனி அமிர்தசரஸில் பிறந்தவர், இவர் டேராடூனில் உள்ள வெல்ஹாம் பெண்கள் பள்ளியில் முடித்தார். தேவிகா புல்சந்தனி தனது ஆரம்பகால வாழ்க்கையை அதிகளவில் அமிர்தசரஸ்-ல் கழித்தார்.
கல்லூரி
மும்பையில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் உளவியலில் பட்டம் பெற்றார், பின்னர்த் தகவல் தொடர்புகளில் முதுகலைப் பட்ட படிப்பிற்காக அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். தகவல் தொடர்புகளில் முதுகலைப் பட்டத்தை 1992 ஆம் ஆண்டுப் பெற்றார்,
McaCann நிறுவனம்
அமெரிக்காவில் படிப்பை முடித்துப் பல நிறுவனத்தில் பல முக்கியப் பதவிகளில் இருந்தாலும் 2012 முதல் 2021 வரையில் McaCann நிறுவனத்தில் பணியாற்றினார், இக்காலக்கடத்தில் EVP பதவியில் இருந்து President பதவிக்கு உயர்ந்தார். மெக்கான் நிறுவனத்தில் மட்டும் 26 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
குளோபல் சிஇஓ
இந்நிலையில் மார்ச் 2021ல் McaCann நிறுவனத்தை வீட்டு ஓகில்வி நிறுவனத்தில் சேர்ந்த தேவிகா புல்சந்தனி தற்போது குளோபல் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதன் மூலம் மாற்றொரு அமெரிக்க நிறுவனம் இந்தியரின் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது.
93 நாடுகள்
தேவிகா புல்சந்தனி இப்புதிய பதவியில் 93 நாடுகளில் உள்ள 131 அலுவலகங்கள் மற்றும் அதன் விளம்பரம், மக்கள் தொடர்புகள், அனுபவம், ஆலோசனை மற்றும் சுகாதாரப் பிரிவுகளில் படைப்பு நெட்வொர்க்கின் வணிகத்தின் அனைத்து அம்சங்களுக்கும் அவர் பொறுப்பாவார்.
WPP செயற் குழு
Ogilvy உலகளாவிய முன்னணி சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பு குழுவான WPP இன் ஒரு பகுதியாகும். அவர் WPP இன் செயற் குழுவிலும் சேர உள்ளார் தேவிகா புல்சந்தனி. 2022 ஆம் ஆண்டில், ஓகில்வி கேன்ஸில் ஆண்டின் உலகளாவிய நெட்வொர்க்கை வென்றார்.
இந்திரா நூயி
தேவிகா புல்சந்தானி ஒகில்வியின் உலகளாவிய தலைவராவார், உலகளாவிய ஏஜென்சி நெட்வொர்க்கை நடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். பெப்சிகோ நிறுவனத்தில் இந்திரா நூயி தொடர்ந்து அமெரிக்க நிறுவனத்தின் உலகளாவிய வர்த்தகத்தை இந்திய பெண் ஒருவர் நிர்வாகம் செய்கிறார்.


Click it and Unblock the Notifications