சனிக்கிழமை, அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஷார்ட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான சேபியின் தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோர், கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானியிடமிருந்து பெரும் முதலீடுகளைப் பெற்ற ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் பங்குகளை வைத்திருப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
அதானி குழுமத்தின் பங்குகளை முறைகேடாக உயர்த்தியதில் முக்கிய பங்கு வகித்த கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானிக்கு சொந்தமான மொரிஷியஸ் நிறுவனத்தில் செபி தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவருக்கும் பங்கு உள்ளதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மாதவி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் இருவரும் கடுமையாக மறுத்துள்ளனர்.

ஹிண்டன்பர்க் அறிக்கையின்படி, மாதபி புரி புச் சேபி தலைவராக நியமிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அதாவது 2017-ஆம் ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி அன்று, அவரது கணவர் மொரிஷியஸ் நிதி நிர்வாக நிறுவனமான ட்ரைடன் டிரஸ்ட்டை தொடர்பு கொண்டு, தங்களின் முதலீடு குறித்து கேட்டறிந்தார். இந்த முதலீடு குளோபல் டைனமிக் ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட் (GDOF) என்ற ஃபண்டில் முதலீடு செய்வதற்காக என்றும் கூறப்படுகிறது.
தவால் புச் யார்?: தவால் புச் தற்போது பிளாக்ஸ்டோன் மற்றும் அல்வாரெஸ் & மார்சல் நிறுவனங்களில் மூத்த ஆலோசகராக உள்ளார். மேலும் கில்டன் வாரியத்தில் இயக்குனராகவும் பணியாற்றுகிறார். அவர் டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT-D) முன்னாள் மாணவர் ஆவார். இவர் 1984-ஆம் ஆண்டில் இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றார்.
முன்னதாக, அவர் யூனிலீவரில் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றினார் மற்றும் அதன் முதன்மை கொள்முதல் அதிகாரியாக இருந்தார் என்ற விவரங்கள் அவரது LinkedIn பயோடேட்டா மூலம் தெரிகிறது.
ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது?: ஹிண்டன்பர்க் நிறுவனத்தால் மேற்கோள் காட்டப்பட்ட தகவல்களின்படி, தவால் புச்சின் நிகர சொத்து மதிப்பு 10 மில்லியன் டாலர்கள். அவர் யூனிலீவர் நிறுவனத்தில் இருந்தபோது, வினோத் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், தவால் புச் பிளாக்ஸ்டோனில் மூத்த ஆலோசகராக இருந்தபோது, அந்த நிறுவனம் மைண்ட்ஸ்பேஸ் மற்றும் நெக்ஸஸ் செலக்ட் டிரஸ்ட் ஆகியவற்றை ஆதரித்து, சேபி IPO அனுமதி அளித்தது என்றும் ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாதபி புரி புச் மற்றும் அவருடைய கணவர் இருவரும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கையை மறுத்துள்ளனர். ஆகஸ்ட் 10-ஆம் தேதி இரவு ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கை வெளியானது.
இதைத்தொடர்ந்து நள்ளிரவிலேயே அதற்கு பதில் அளித்த மாதபி புச் மற்றும் அவரது கணவர் தங்களுடைய பெயரை கெடுக்க முயற்சிப்பதற்காகவே, இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மேலும் ஹிண்டன்பர்க் மீது ஏற்கனவே செபி ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு பதிலடி தரவே இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த காலங்களில் தங்களுடைய அனைத்து தகவல்களையும் தெரிவித்துள்ளதாகவும், யார் வந்து கேட்டாலும் இந்த ஆவணங்களை வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications