கோவிட்-19 தொற்று காலத்தில் அனைவரும் வீட்டில் முடங்கியிருக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். அச்சமயத்தில் அலுவலகம் முதல் பள்ளிக் கல்லூரி என அனைத்தும் மூடப்பட்டிருந்தது.
இதனால் பெற்றோர்கள் அனைவருக்கும், கோவிட் தொற்று பயம் ஒருபுறமிருக்க, அவர்களின் குழந்தைகளின் கல்வி குறித்து கவலை அடைந்தனர். அதனையடுத்து ஆன்லைன் மூலம் கல்வி முறை அனைத்து பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.
இந்த ஆன்லைன் கல்விமுறையை கோவிட்-19 தொற்றுக்கு முன்பே பல தனியார் கல்வி நிறுவனங்கள் வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் Byju's நிறுவனம் மிகப்பிரம்மாண்டமானதாக இருந்தது.
தொற்றுக் காலங்களில் பல பெற்றோர்களும் அவரகளின் குழந்தையின் ஆன்லைன் கல்வித்தளமான Byju's இடம் கல்வி கற்பதை பெருமையாகவும் எண்ணினர்.
Byju’s-ஐ உருவாக்கியது யார்?
Byju's நிறுவனத்தை பைஜூ ரவீந்திரன் என்பவரால் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு Forbes வெளியிட்ட 100 இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் இவர் இடம்பிடித்துள்ளார். அன்றைய காலகட்டத்தில் இவரின் நிகர சொத்து மதிப்பானது 3.5 பில்லியன் டாலர் என Forbes வெளியிட்ட அறிக்கையில் வெளியிட்டது.
Byju’s வளர்ச்சிக்கான காரணம்!
Byju's இந்த அளவிற்கு முன்னேற அதன் இணை நிறுவனர் மற்றும் இயக்குநருமான திவ்யா கோகுல்நாத் முக்கிய பங்காற்றியுள்ளார். இவர் முதன் முதலில் Byju's நிறுவனத்தில் தனது முதல் பணியை ஆசிரியராகச் சேர்ந்தார். அதன்பின் அவரின் கடின உழைப்பு, புது யுக்திகள் மூலம் இணை நிறுவனராக குறுகிய காலத்தில் பதவி உயர்வை அடைந்துள்ளார்.
யார் இந்த திவ்யா கோகுல்நாத்!
திவ்யா கோகுல்நாத் நடுத்தர குடும்பத்தில் பிறந்த, புத்திக் கூர்மையும் உடைய பெண். இவர் தனது கல்லூரிப் படிப்பை பெங்களூரில் உள்ள RV பொறியியல் கல்லூரியில் பயின்றுள்ளார். அவர் 2007 ஆம் ஆண்டு பைஜூ நிறுவனத்தின் தலைவரான ரவீந்தரன் பைஜூவை சந்தித்தார்.
காதலித்து திருமணம்
அதனையடுத்து இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். 2008 ஆம் ஆண்டு முதலே திவ்யா கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். அதன்பின் தன் கணவர் ரவீந்திரன் பைஜூவுடன் இணைந்து 2011 இல் Byju's உருவாக்கி, அதன் முன்னேற்றங்களுக்கு கடுமையாக உழைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி கோவிட்-19 காலங்களில் Byju's இன் பிராண்டிங், மார்க்கெட்டிங், மேலாண்மை போன்ற முக்கிய பொறுப்புக்களை ஏற்று நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளார்.
மார்ச் 2022 இல் திவ்யா கோகுல்நாத் Federation of Indian Chambers of Commerce & Industry's எட்டெக் தலைவராக பணியாற்றவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
திவ்யா கோகுல்நாத்தின் சொத்து மதிப்பு!
Kotak Hurun ஒவ்வொரு வருடமும் வெற்றிகரமான பெண்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் சொத்து மதிப்பை ஆய்வு செய்து ரிப்போர்ட் வெளியிட்டு வருகிறது. அதன் படி திவ்யா கோகுல்நாத்-தின் நிகர சொத்து மதிப்பானது சுமார் ரூ. 4,550 கோடியாக இருப்பதாக Kotak Hurun அறிக்கை தெரிவித்துள்ளது.
போர்ப்ஸ்
இந்தியா EDTECH துறை மிகவும் மோசமான நிலையில் இருக்கும் காரணத்தால் பல நிறுவனங்கள் வர்த்தகத்தை மூடியும், ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும் உள்ளனர்.
இந்த நிலையில் பைஜூஸ் நிறுவனத்தின் நிறுவனர்களான Byju Raveendran மற்றும் Divya Gokulnath ஆகியோரின் தற்போதைய சொத்து மதிப்பு 2.5 பில்லியன் டாலராக உள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications