ஐடி ஊழியர்களே..! இந்திய ஐடி துறையின் தந்தை யார் தெரியுமா..?

இந்திய ஐடி சேவை துறை கடந்த 20 வருடத்தில் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது மட்டும் அல்லாமல் தற்போது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கீட்டை வகித்து வருகிறது. மேலும் ஐடி மற்றும் டெக் துறையின் வளர்ச்சி மூலம் பல கோடி மக்களின் வாழ்க்கை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

ஆனால் இது அனைத்திற்கும் வதை போட்டவர் தான் இந்திய ஐடி துறையின் தந்தை அழைக்கப்படும் ஃபகர் சந்த் கோலி. யார் இவர்..? ஃபகர் சந்த் கோலி-யை இந்திய ஐடி துறையின் தந்தை போற்றுவதற்கு என்ன காரணம்..?

ஐடி ஊழியர்களே..! இந்திய ஐடி துறையின் தந்தை யார் தெரியுமா..?

ஃபகர் சந்த் கோலி 1924 ஆம் ஆண்டு மார்ச் 19 இல் பிரித்தானிய இந்தியாவின் பெசாவரில் பிறந்தார். இப்போது இது இன்றைய பாகிஸ்தான். பெசாவரிலேயே பள்ளி கல்வியை முடித்து, லாகூரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் அரசு ஆண்கள் கல்லூரியில் தனது BA மற்றும் BSc (Honours) பட்டத்தோடு, தங்கப் பதக்கத்தை வென்றார்.

ஃபகர் சந்த் கோலி கல்லூரியின் இறுதி ஆண்டில் இருந்த போது அவரது தந்தை இறந்தார். இதனால் இந்தியக் கடற்படைக்குச் சேர விண்ணப்பித்தார், இதேவேளையில் கனடாவின் குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் உதவித்தொகைக்காகவும் படிப்பதற்காகவும் விண்ணப்பித்தார்.

இங்கு தான் இவருடைய வாழ்க்கை மாறியது, 1948 இல் கனடாவின் குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் தனது இளம் அறிவியல் படிப்பை முடித்தார். பின்னர் இவர் கனேடிய ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் ஒரு வருடம் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து பின்னர் 1950 இல் அமெரிக்காவின் மாசசூசிட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் மின் பொறியியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றார்.

முதுநிலைப் பட்டம் பெற்ற பின்னர் 3 வருடம் அமெரிக்காவில் இரு முக்கியமான நிறுவனத்தில் பணியாற்றிய பின்பு தாய் நாட்டின் மீதான ஆசை வந்தது. இதனால் 1951ல் இந்தியா திரும்பினார், ஃபகர் சந்த் கோலி.

அமெரிக்காவில் இருந்து வந்த கையோடு டாடா குழுமத்தின் டாடா எலக்ட்ரிக் நிறுவனத்தில் 1967 வரையில் பல உயர் பதவியில் பணியாற்றினார். 1966ல் Tata Consulting Engineers நிறுவனத்தில் CDC 3600 mainframe கம்பியூட்டரில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றார். இங்குத் தான் ஃபகர் சந்த் கோலி-யின் 2வது இன்னிங்கஸ் துவங்கியது.

ஐடி ஊழியர்களே..! இந்திய ஐடி துறையின் தந்தை யார் தெரியுமா..?

JRD டாடா-வின் வேண்டுகோள் மூலம் 1969ல் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தை உருவாக்க உதவினார், இந்த நிறுவனத்தின் வாயிலாகத் தான் மும்பை - புனே மத்தியிலான மின்சார விநியோகத்தைப் புதிய தொழில்நுட்பத்துடன் கட்டுப்படுத்தியது டாடா எலக்ட்ரிக் நிறுவனம்.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் முதல் வெற்றியை தொடர்ந்து 1972ல் Burroughs Corporation-க்கான மென்பொருள் சேவைக்காக ஒப்பந்தம் செய்தது மூலம் ஃபகர் சந்த் கோலி டிசிஎஸ் நிறுவனத்தின் முதல் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார்.

ஃபகர் சந்த் கோலி தலைமையில் தான் டிசிஎஸ் அடுத்த 30 வருடம் இயங்கியது, இவரின் வழிகாட்டுதல் மூலம் தான் இந்திய ஐடி சேவை துறை இந்திய நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் சேவை அளிக்கத் துவங்கியது. 1995-96 வரையில் நாஸ்காம் அமைப்பின் தலைவராகவும் இருந்தார் ஃபகர் சந்த் கோலி.

ஐடி சேவைத் துறை வளர்ச்சியை வலிமைப்படுத்தக் கல்லூரி அளவில் பல முயற்சிகளைக் கொண்டு வந்தார், பல வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பேராசிரியர்களைத் தேர்வு செய்வது முதல், பாட திட்ட அளவு வரைவிலஸ் பணியாற்றினார். இதன் மூலம் வெளிநாடுகளுக்கான ஐடி சேவையில் நிலையான கட்டமைப்பை உருவாக்க வழிவகுத்தது.

ஐடி ஊழியர்களே..! இந்திய ஐடி துறையின் தந்தை யார் தெரியுமா..?

இப்படி இந்திய ஐடி சேவைத் துறையில் மட்டுமே 30 ஆண்டுகள் பணியாற்றியது மட்டும் அல்லாமல் வர்த்தகம், கல்வி, வேலைவாய்ப்பு, ஆசிரியர்கள் என ஒட்டுமொத்த எக்கோசிஸ்டத்தையும் ஃபகர் சந்த் கோலி உருவாக்கிய காரணத்தால் இவர் இந்திய தகவல் தொழில்நுட்ப துறையின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

F. C. Kohli என அழைக்கப்படும் ஃபகர் சந்த் கோலி தனது 96வது வயதில் மறைந்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+