2025ல் பிறந்த முதல் பீட்டா குழந்தை.. அதென்ன பீட்டா குழந்தை?

2025ஆம் ஆண்டு பிறந்ததோடு உலகில் புதிதாக ஒரு தலைமுறையும் பிறந்திருக்கிறது. ஆம் 2025ஆம் ஆண்டில் இருந்து பிறப்பவர்கள் இனி ஜென் பீட்டா தலைமுறையினர் என்றே அழைக்கப்படுவார்கள்.

தற்போது குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு இடைபட்ட காலத்தில் பிறந்தவர்களுக்கு என ஒரு பெயர் வழங்கப்பட்டு அவர்கள் அந்த தலைமுறையை சார்ந்தவர்கள் என அழைக்கப்படுகின்றன.

 2025ல் பிறந்த முதல் பீட்டா குழந்தை..  அதென்ன பீட்டா குழந்தை?

அந்த வகையில் 2025ஆம் ஆண்டில் இருந்து பிறப்பவர்கள் ஜென் பீட்டா தலைமுறையினர் ஆவர். இந்தியாவின் முதல் ஜென் பீட்டா ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை 12.03 மணிக்கு பிறந்த பெண் குழந்தை ஆகும்.
மிசோரம் மாநிலம் எய்ஸ்வாலில் பிறந்த அந்தப் பெண் குழந்தைக்கு ஃப்ராங்கி ரெமுராடிகா ஜடேங் எனப் பெயர் சூட்டியுள்ளனர். நாட்டின் முதல் ஜென் பீட்டா குழந்தையை பெற்றெடுத்தது பெருமையாக இருக்கிறது என அந்த குழந்தையின் தாயார் தெரிவித்துள்ளார்.

ஜென் பீட்டா என்ற பெயரை முதலில் வரையறுத்தது ஆராய்ச்சியாளர் மார்க் மெக் கிரிண்டில் தான். இவர் 2025 ஆம் ஆண்டு முதல் 2039 ஆம் ஆண்டு வரை பிறக்கும் குழந்தைகள் 'ஜென் பீட்டா' குழந்தைகள் என அழைக்கப்படுவார்கள் என்கிறார். இவர்கள் மில்லனியல்ஸ் என்றழைக்கப்படும் ஜென் y (1981-1996 பிறந்தவர்கள்) அல்லது ஜென் z (1997 - 2010 பிறந்தவர்கள்) பெற்றோர்களுக்குப் பிறப்பவர்களாக இருப்பார்களாம்.

2035 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகையில் 16 சதவீதம் பேர் 'ஜென் பீட்டா' தலைமுறையினராக இருப்பார்கள் என அவர் கூறுகிறார். இவர்கள் பங்களிப்பு சர்வதேச அளவில் சமூக, பொருளாதார சூழலில் முக்கியத்துவம் வகிக்கும் என்று மெக் கிரிண்டில் கணித்துள்ளார். ஜென் பீட்டா தலைமுறையினர் குறித்து தனது பிளாக்கில் எழுதி இருக்கும் மெக் கிரிண்டில் , முற்றிலும் தொழில்நுட்பத்தால் சூழப்பட்ட காலத்தில் இவர்கள் வாழ்வார்கள் என்கிறார்.

கல்வி, வேலை, பொழுதுபோக்கு என எல்லாவற்றிலும் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் காலத்தில் ஜென் பீட்டா தலைமுறையினர் வாழ்வார்கள் என்றும் முற்றிலும் டிஜிட்டல் வாசிகளாக இவர்கள் இருப்பார்கள் என்றும் கணிக்கிறார். மேலும் இவர்கள் 22ஆம் நூற்றாண்டுக்குள் நுழையும் வாய்ப்பை பெறுவார்கள் என்றும் அதற்கு தொழில்நுட்ப மற்றும் மருத்துவ துறை வளர்ச்சி காரணமாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

உலகளவில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு இடையே பிறந்தவர்களுக்கு என பெயர்கள் இருக்கின்றன. அந்த வகையில்:

இழந்த தலைமுறை (Lost Generation) : 1883 முதல் 1900 வரை பிறந்தவர்கள். இவர் முதல் உலக போரை சந்தித்த மக்களாக இருப்பார்கள்.

சிறந்த தலைமுறை (Greatest Generation) : 1901 முதல் 1927 வரை பிறந்தவர்கள். இவர்கள் இரண்டாம் உலக போரை சந்தித்தவர்களாக இருப்பர்.

அமைதியான தலைமுறை (Silent Generation ): 1928 முதல் 1945 வரை பிறந்தவர்கள். இவர்கள் "Lucky Few" என்றும் அழைக்கிறார்கள். இரண்டாம் உலக போரின் பிந்தைய காலத்தில் பிறந்தவர்கள். இவர்கள் கொரிய போர் மற்றும் வியட்நாம் போர், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் சுதந்திர போரை கண்டவர்களாக இருப்பர்.

பேபி பூமர்ஸ்(Baby Boomers) : 1946 முதல் 1964 வரை பிறந்தவர்கள். போருக்கு பின்னர் பல்வேறு நாடுகளும் சுதந்திரமாக வளர்ச்சி அடைய காலத்தை சந்தித்தவர்கள்.

ஜெனரேஷன் X (Generation X): இவர்கள் 1965 முதல் 1980 வரை பிறந்தவர்கள். சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். பொருளாதார முன்னேற்றத்தில் கவனம் செலுத்துபவர்கள். புதிய தொழில்நுட்பங்களுக்கு அறிமுகமான தலைமுறை என்பதால் அதற்கேற்ப தங்களை தகவமைத்து கொண்டவர்கள்.

மில்லனியல்ஸ் அல்லது ஜெனரேஷன் Y( Millennials or Generation Y): - 1981 முதல் 1996 வரை பிறந்தவர்கள். இவர்கள் டிஜிட்டல் யுகத்தின் முன்னோடிகள் என அழைக்கப்படுகின்றனர். அன்றாட வாழ்க்கையுடன் டிஜிட்டல் தொழில்நுட்பங்களும் இணைய தொடங்கிய தலைமுறை இது. கூட்டு முயற்சிக்கு பெயர் போனவர்கள் இவர்கள்.

ஜெனரேஷன் Z (Generation Z ): 1997 முதல் 2010 வரையிலான காலத்தில் பிறந்தவர்கள். டிஜிட்டல் யுகத்தினர் என இவர்களை அழைக்கலாம்.

ஜெனரேஷன் ஆல்பா ( Generation Alpha): 2011 முதல் 2024 வரை பிறந்தவர்கள். உயர் தொழில்நுட்பத்தால் இணைக்கப்பட்ட உலகில் வாழ்பவர்கள். முழுக்க முழுக்க தொழில்நுட்ப மையமாகி வரும் உலகை நோக்கி செல்பவர்கள்.

ஜெனரேஷன் பீட்டா (Generation Beta): 2025 முதல் 2039 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் பிறந்தவர்கள். செயற்கை நுண்ணற்வின் ஆதிக்கம் நிறைந்த உலகில் வாழப் போகிறவர்கள்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+