டெல்லி: இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது நடப்பு ஆண்டில் யாருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பாரத ரத்னா விருது பெறுபவர்களுக்கான போட்டியில் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டாவின் பெயரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயரும் இடம் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இருவருக்குமே மத்திய அரசு பாரத ரத்னா விருந்து விருது வழங்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக பாரத ரத்னா விருது பார்க்கப்படுகிறது. நாட்டிற்காக சேவை செய்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதுவரை பாரத ரத்னா விருதுநினை 53 பேர் பெற்றுள்ளனர். அரசியல் , தொழில், கலை ,அறிவியல், இலக்கியம் உள்பட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக சேவை செய்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட வருகிறது.

முதன் முதலில் 1954 ஆம் ஆண்டு தான் பாரத ரத்னா விருது அறிமுகம் செய்யப்பட்டது. பொதுவாக பாரத ரத்னா விருது பெறுபவர்கள் குறித்த பட்டியல் குடியரசு தினத்தை ஒட்டி வெளிவரும். குடியரசு தினத்திற்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் இந்த ஆண்டு யாருக்கு பாரத ரத்னா விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அண்மையில் மறைந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகிய இருவருமே இந்த பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபரான ரத்தன் டாடா திடீரென காலமானார். ரத்தன் டாடாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மகாராஷ்டிரா அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பிலும் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளின் தரப்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. அதே வேளையில் தலித்துகளின் தலைவரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான கன்சிராமின் பெயரும் பாரத ரத்னா விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
ஜோதிராவ் புலே, சாவித்திரிபாய் புலே , பீகாரின் முதல் முதலமைச்சர் ஸ்ரீ கிருஷ்ணா சிங், மண்டல் கமிஷனுக்கு வித்திட்ட பிபி மண்டல் உள்ளிட்டோரியின் பெயரும் இந்த பரிந்துரை பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது. பொதுவாக பாரத ரத்னா விருதை பிரதமர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்வார். ஒரு ஆண்டில் அதிகபட்சம் மூன்று பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
முதன்முறையாக இந்தியாவில் பாரத ரத்னா விருது 1954ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. சி ராஜகோபாலாச்சாரி ,சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சிவி ராமன் ஆகிய மூவரும் 1954 ஆம் ஆண்டு இந்த விருதை பெற்றனர். இதுவரை 53 தனிநபர்கள் பாரத ரத்னா விருது பெற்றுள்ளனர், இதில் 18 பேருக்கு அவர்களின் இறப்புக்குப் பிறகு இந்த விருது வழங்கப்பட்டது.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications