அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கைக்கு பின்பு யாருமே புதிதாக முதலீடு செய்யாத போது அதானி குழுமத்தில் சுமார் 1.87 பில்லியன் டாலர் ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது.
அதானி குழுமத்தின் ப்ரோமோட்டர் குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் எஸ்.பி. அதானி குடும்ப அறக்கட்டளை வியாழக்கிழமை பிளாக் டீல் வாயிலாக அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & SEZ, அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய 4 நிறுவனங்களின் பங்குகளை அமெரிக்காவை சேர்ந்த GQG Partners என்னும் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது.
இந்த GQG Partners நிறுவனத்திற்கு பின்னால் இருப்பது ஒரு இந்தியர் யார் இவர்..?
அதானி குழுமம்
அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & SEZ, அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய 4 நிறுவனங்களில் 21 கோடி பங்குகளை அமெரிக்காவில் முதலீட்ட அலோசனை வழங்கும் GQG Partners Inc நிறுவனம் சுமார் 15,446 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
ஆஸ்திரேலிய பங்குச்சந்தை
இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே ஆஸ்திரேலிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள GQG Partners பங்குகள் 3.5 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. ஆனால் அதானி குழும பங்குகள் இன்று பெரிய அளவில் உயர்ந்தது. இந்த உயர்வுக்கு முக்கியமான காரணம் ராஜீவ் ஜெயின். யார் இவர்..?
அதானி குழும பங்குகள்
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அதானி குழும பங்குகளின் நிலவரம்
- அதானி எண்டர்பிரைசஸ் - 16.97 சதவீதம் உயர்வு
- அதானி போர்ட்ஸ் - 9.81 சதவீதம் உயர்வு
- அதானி பவர் - 4.99 சதவீதம் உயர்வு
- அதானி டிரான்ஸ்மிஷன் - 5.00 சதவீதம் உயர்வு
- அதானி கிரீன் எனர்ஜி - 5.00 சதவீதம் உயர்வு
- அதானி டோட்டல் கேஸ் - 5.00 சதவீதம் உயர்வு
- அதானி வில்மார் - 4.99 சதவீதம் உயர்வு
- ஏசிசி லிமிடெட் - 5.11 சதவீதம் உயர்வு
- அம்புஜா சிமெண்ட்ஸ் - 5.70 சதவீத உயர்வு
- NDTV - 4.98 சதவீதம் உயர்வு
யார் இந்த ராஜீவ் ஜெயின் ?
ராஜீவ் ஜெயின் GQG பார்ட்னர்ஸின் இணை நிறுவனர், சேர்மன் மற்றும் தலைமை முதலீட்டு அதிகாரி ஆவார். மேலும் ராஜீவ் ஜெயின் ஷார்ப்பான முதலீட்டு முடிவுகள், பாரம்பரிய முதலீட்டு திட்டத்தில் இருக்கும் சவால்களை கடந்து முதலீடு செய்து பெரிய லாபத்தை பார்ப்பதில் பெயர் பெற்றவர்.
இந்தியர்
இந்தியாவில் பிறந்து வளர்ந்த ராஜீவ் ஜெயின், 1990 இல் மியாமி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பதற்காக அமெரிக்கா சென்றார். அவர் 1994 இல் Vontobel Asset Management போர்ட்ஃபோலியோ மேலாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு ராஜீவ் ஜெயின் கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பின்னர் ராஜீவ் ஜெயின் ஜூன் 2016 இல் GQG பார்ட்னர்ஸ் நிறுவனத்தை இணைந்து நிறுவினார்.
முதலீட்டு
ராஜீவ் ஜெயின் Linkedin ப்ரொபைல் தரவுகள் படி, அவர் GQG பார்ட்னர்ஸ் நிறுவனத்தில் போர்ட்ஃபோலியோ மேலாளராகவும், GQGயின் நீண்ட கால பங்கு உத்திகளுக்கான ஆய்வாளராகவும் பணியாற்றுகிறார். ட்விட்டர் கணக்கு இல்லாத மற்றும் டிவியில் அரிதாகவே தோன்றும் ராஜீவ் ஜெயின், தனது வளர்ச்சி பங்கு நிதிகளில் முதலீடு செய்வதற்கு மிகவும் எளிமையான சூத்திரத்தைப் பின்பற்றுகிறார் ஆடம்பரமான முதலீடுகல் எதுவும் இல்லை, தைரியமான மற்றும் பாரம்பரிய முதலீடுகள் மட்டுமே.
ராஜீவ் ஜெயின்
அதானி குழுமத்தில் முதலீடு செய்தது குறித்து GQG Partners சேர்மன் மற்றும் தலைமை முதலீட்டு அதிகாரி ராஜீவ் ஜெயின் பேசுகையில், எங்களுடைய நிறுவனம் அதானி குழுமத்தின் நிதி தரவுகளை முழுமையாக ஆய்வு செய்து, ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை குற்றச்சாட்டுகளுக்கு தொடர்பு இல்லாமல் இருந்தது உறுதி செய்த பின்பு தான் முதலீடு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications