இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஹரேஷ் ஜொகானி, அவருடைய சகோதரர்களுக்கு 20,000 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 21 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வந்துள்ளது.
யார் இந்த ஷரேஷ் ஜொகானி , இந்த வழக்கின் பின்னணி என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

யார் இந்த ஹரேஷ் ஜொகானி?: குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஹரேஷ் ஜொகானி வைர வியாபாரம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் கொடி கட்டி பறக்கும் ஒரு தொழிலதிபர். அமெரிக்காவில் செட்டிலாகி பல கோடி மதிப்பிலான சொத்துக்களுக்கு அதிபராக இருப்பவர்.
ஜொகானி சகோதரர்கள் குடும்பத்தினர் பாரம்பரியமாக வைர வியாபாரம் செய்து வருகின்றனர். குஜராத் மட்டுமின்றி அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வரை இவர்களுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.
மொத்தம் 5 சகோதரர்கள் கொண்ட குடும்பத்தில் சசி ஜொகானி என்பவர் 1969ஆம் ஆண்டு 22 வயதாகும் போது அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்துவிட்டார். அங்கே தொழில் செய்து வந்த நிலையில் நஷ்டம் ஏற்பட்டது.
எனவே ஹரேஷ் மற்றும் பிற சகோதரர்களையும் அமெரிக்கா அழைத்து வந்து தொழிலில் ஈடுபட செய்தார். ஹரேஷ் ஜொகானி வைர தொழில் மூலம் கிடைத்த லாபத்தில் ரியஸ் எஸ்டேட்டிலும் இறங்கினார்.
சுமார் 17,000 அபார்ட்மெண்டுகளை வாங்கி விற்பனை செய்தார். இதனால் தொழில் சாம்ராஜ்யம் விரிவடைந்தது. இவர்களும் அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட்டனர்.
2003இல் தொடரப்பட்ட வழக்கு: இந்நிலையில் ரியல் எஸ்டேட்டுக்கான ஜே கே பிராபர்டி நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்து ஹரேஷ் ஜொகானி தன்னையும் மற்ற சகோதரர்களையும் கட்டாயப்படுத்தி விலக செய்ததாகவும் அதற்கான இழப்பீடு வழங்கவில்லை என்றும் கூறி சசி ஜொகானி 2003ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அவர்களும் கூட்டாளிகள் என்பதற்கு எழுத்துப்பூர்வ ஆவணம் எதுவுமில்லை என ஹரேஷ் ஜொகானி பதில் வாதம் செய்தார். 21 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் 5 நீதிபதிகள் அமர்வு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
கூட்டாளிகள் என்பது ஆவணம் இல்லை: சகோதரர்களும் நிறுவனத்தின் கூட்டாளி என்பது எழுத்துப்பூர்வ ஆவணம் இல்லை என்றாலும் வாய் வழி ஒப்பந்தத்தை ஹரேஷ் ஜொகானி மீறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.
குஜராத்தை சேர்ந்த வர்த்தகர்கள், பெரும்பாலும் வாய்வழி ஒப்பந்தத்தின் அடிப்படையில் வர்த்தகம் செய்கின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டினர். மேலும் ஹரேஷ் ஜொகானி, பாதிக்கப்பட்ட நான்கு சகோதரர்களுக்கு 20,000 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தனர்.
பிரச்னைக்குரிய தெற்கு கலிபோர்னியா சொத்தில் சகோதரர்களுக்கு உரிய பங்கினை வழங்கவும் ஆணையிட்டனர்.
Story Written by : Devika


Click it and Unblock the Notifications