இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான கௌதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானியின் திருமணம் வரும் பிப்ரவரி 7, 2025 அன்று நடைபெற உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிரயாகராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மகனின் திருமணத்திற்காக நாள் குறிக்கப்பட்டதைத் தெரிவித்தார்.
ஜீத் அதானி மற்றும் திவா ஜெய்மின் ஷா ஆகியோருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட 2 வருடம் ஆன நிலையில் தற்போது திருமணத்திற்கான நாள் குறிக்கப்பட்டு உள்ளது. அதானி வீட்டுக்கு மருமகளாகப்போகும் திவா ஜெய்மின் ஷா யார்..? கௌதம் அதானியின் மகன் ஜீத் அதானி இப்போது என்ன செய்கிறார்..?

யார் இந்த ஜீத் அதானி?: 1997 ஆம் ஆண்டு பிறந்த ஜீத் அதானி, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் அப்ளைய்டு சையின்ஸ் பள்ளியில் பட்டம் பெற்று 2019 ஆம் ஆண்டு அதானி குழுமத்தில் இணைந்தார். தற்போது அதானி குழுமத்தில் தனது சகோதரர் கரண் போல ஜீத் அதானியும் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
ஜீத் அதானி அதானி குழுமத்தில் தலைமை நிதியியல் அதிகாரி அலுவலகத்தில் தனது பணியைத் துவங்கினார். தற்போது இந்த சாம்ராஜ்ஜியத்தின் நிதி, மூலதன சந்தைகள், ரிஸ்க் & கவர்னென்ஸ் உள்ளிட்ட துறைகளில் தலைமை வகிக்கிறார்.
இதோடு ஜீத் அதானி தற்போது அதானி ஏர்போர்ட்ஸ் பிரிவுக்கும் தலைமை தாங்குகிறார். அதானி குழும வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு சூப்பர் ஆப்-ஐ உருவாக்கும் நோக்கில் அதானி டிஜிட்டல் லேப்ஸ் என்ற திட்டத்தையும் ஜீத் அதானி தான் வழிநடத்துகிறார்.
யார் இந்த திவா ஜெயின் ஷா..?: ஜீத் அதானி, பிரபல வைர வியாபாரி ஜெயின் ஷாவின் மகள் திவா ஜெயின் ஷாவுடன் திருமணம் செய்து கொள்ள உள்ளார். குஜராத் மாநில அகமதாபாத்தில் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மிகவும் பிரைவேட்டாக குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் நடைபெற்ற விழாவில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திவா ஜெயின் ஷா மற்றும் அவரது குடும்பத்தினர் பொது வெளியில் அதிகம் தோன்றாதவர்கள் என்றாலும், அவரது தந்தை ஜெயின் ஷா வைரத் தொழிலில் புகழ்பெற்ற நபராவார்.
முகேஷ் அம்பானியின் சம்பந்தியும் வைர வியாபாரி தான், மூத்த மகள் ஆகாஷ் அம்பானியின் மனைவி ஸ்லோகா மேத்தாவின் தந்தை ஒரு வைர வியாபாரி ஆவார்.
ஜீத் அதானியின் திருமணம் குறித்து சமூக ஊடகங்களில் பரவலான வதந்திகள் பரவி வந்தன. சர்வதேச பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான நிகழ்ச்சியாக இருக்கும் என்றும் பிரபல அமெரிக்கா பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் இந்த திருமணத்தில் பாடுவார் என்றும் கூறப்பட்டன. ஆனால், இந்த ஊகங்களை கௌதம் அதானி மறுத்துள்ளார், இதோடு ஜீத் அதானியின் திருமணம் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் எளிமையாகவும் பாரம்பரிய முறையிலும் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications