டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ -வாக சுமார் 6 வருடம் இந்திய ஐடி துறையை அசத்திய ராஜேஷ் கோபிநாதன் இன்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
ராஜேஷ் கோபிநாதன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து தமிழரான கே கிருதிவாசன்-ஐ டாடா குழுமம் புதிய டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரியாக அறிவித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் இவருடைய பணி மார்ச் 16 ஆம் தேதி முதலே துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
யாரப் இந்த கிருதிவாசன்..? டிசிஎஸ் நிறுவனம் சார்ந்து இதுவரையில் வெளியுலகில் அதிகம் அறியப்படாத கிருதிவாசன் சிஇஓ-வாக உயர்ந்துள்ளார். டாடா சன்ஸ் சந்திரசேகரன் உடன் இப்படியொரு தொடர்பா..?
கே கிருதிவாசன்
கே கிருதிவாசன் டிசிஎஸ் நிறுவனத்தின் பிரசிடென்ட் மட்டும் அல்லாமல் வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீடு (BFSI) வணிக பிரிவின் உலகளாவிய தலைவராக உள்ளார். டிசிஎஸ் நிறுவனத்திற்கு அதிகம் பண வருவாயை அளிக்கும் மிக முக்கியமான பிரிவு, இதேபோல் டிசிஎஸ் சாம்ராஜ்ஜியத்தின் பேஸ்மென்ட்-ம் BFSI பிரிவு தான்.
34 ஆண்டுகள்
கே கிருதிவாசன் டிசிஎஸ் நிறுவனத்தில் சுமார் 34 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். மார்ச் 16 ஆம் தேதி முதல் கிருதிவாசன் டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக பொறுப்பேற்கிறார். இதன் மூலம் டிசிஎஸ் இனி கிருதிவாசன் தலைமையில் வேகமாக வளர உள்ளது.
திருச்சி டூ டிசிஎஸ் சிஇஓ
கே கிருதிவாசன் திருச்சி மாவட்டத்தின் மேளசிந்தாமணி பகுதியில் இருக்கும் ஈ.ஆர் மேல்நிலை பள்ளியில் தான் பள்ளி கல்வியை 1975 முதல் 1981 வரையில் முடிந்தார். இதை தொடர்ந்து கோயம்புத்தூர்-ல் இருக்கும் கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பிஈ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் 1981 - 1985 பெற்றார். இதை தொடர்ந்து ஐஐடி கான்பூர் கல்லூரியில் M tech, Industrial and management Engineering பிரிவில் பட்டம் பெற்றார்.
என் சந்திரசேகரன்
டாடா சன்ஸ் தலைவரான என் சந்திரசேகரன் கோயம்புத்தூர்-ல் இருக்கும் கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் 1983 ஆம் ஆண்டு அப்ளைய்டு சையின்ஸ் பிரிவில் பட்டம் பெற்றார். அப்படி பார்த்தால் என் சந்திரசேகரன் அவர்களின் ஜூனியர் மாணவர் தான் கே கிருதிவாசன். இருவருக்கும் இப்படி ஒரு தொடர்ப்பு உள்ளது சுவாரஸ்யமானது.
முக்கிய பதவிகள்
டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி நியமனம் செய்யப்பட்ட கிருதிவாசன், டிசிஎஸ் ஐபரோஅமெரிக்கா, டிசிஎஸ் அயர்லாந்தின் இயக்குநர்கள் குழு மற்றும் டிசிஎஸ் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் ஏஜியின் மேற்பார்வைக் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications