சிங்கப்பூர்: இந்தியாவை சேர்ந்த பலரும் வெளிநாடுகளில் சென்று தொழில் புரிந்து மிகப்பெரிய அளவில் செட்டில் ஆகி இருக்கின்றனர். அப்படி சிங்கப்பூர் நாட்டில் செட்டிலாகிய குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அந்நாட்டு பில்லினியர்களுள் ஒருவராக உருவெடுத்துள்ளார்.
கிஷின் ஆர்கே இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்.இவர் வயது 42. ஆர்பி கேபிடல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் நிறுவனராகவும் இருந்து வருகிறார். இவர் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்போடு சிங்கப்பூரின் இளம் பணக்காரர் என்ற பட்டத்தை பெற்றிருக்கிறார். இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் மேக்னெட் என அழைக்கப்படும் ராஜ்குமார் ஹிராநந்தானியின் ஒரே வாரிசு தான் கிஷின்.

பரம்பரை சொத்து மூலம் வந்த பணம் மட்டும் இல்லாமல் தன்னுடைய சொந்த உழைப்பு ஆகிய இரண்டின் மூலமும் அவர் சிங்கப்பூரின் இளம் பணக்காரராக உயர்ந்திருக்கிறார். தன்னுடைய 12 வயதிலேயே ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்தவர் தான் கிஷின். தன்னுடைய தந்தையின் வழிகாட்டுதலின் பேரில் 12 வயதாகும்போதே கிஷின் சொந்தமாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கினார். அப்பொழுது அவருக்கு கிடைத்த அனுபவம் தான் ரியல் எஸ்டேட் துறையில் நுழைய வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது.
18 வயதாகும்போது தன்னுடைய பெற்றோர் தனக்கு பரிசாக வழங்கிய ஒரு சொத்தை விற்பனை செய்து அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு ஆர்பி கேபிடல் என்ற பெயரில் 2006 ஆம் ஆண்டில் ஒரு நிறுவனத்தை தொடங்கினார். தன்னுடைய தந்தையே ராயல் ஹோல்டிங் என்ற பெயரில் மிகப்பெரிய ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தாலும் அதில் இணையமாமல் சொந்தமாக தொழில் தொடங்கினார்.
தனக்கென ஒரு துறையை தேர்வு செய்து அதில் படிப்படியாக வெற்றி பெற தொடங்கினார். ரியல் எஸ்டேட் தொழில் அவருக்கு இயல்பாகவே வந்தது சிங்கப்பூர் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் தன்னுடைய ரியல் எஸ்டேட் தொழிலை விரிவாக்கம் செய்தார். தற்போது இவருடைய சொத்து மதிப்பு 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்து இருக்கிறது இந்திய ரூபாயின் மதிப்பில் பார்க்கும் போது இவருடைய சொத்து மதிப்பு 95 கோடி ரூபாய்.
ஆர் பி கேப்பிடல் மட்டும் இல்லாமல் தந்தையின் ராயல் ஹோல்டிங் நிறுவனத்திலும் இவருக்கு பெரும் பங்கு இருக்கிறது. இரண்டு நிறுவனங்களையும் கவனித்து கொள்ளும் இவர் அண்மையில் ஒரு தளத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில் ரியல் எஸ்டேட் துறையில் தான் வெற்றி அடைந்திருந்தாலும் உணவக பிரிவில் தொழில் தொடங்கி வெற்றி அடைய வேண்டும் என்ற கனவு தனக்கு நீண்ட நாட்களாக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். போர்ப்ஸ் 2025 ஆம் ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் சிங்கப்பூரிலிருந்து இடம்பெற்ற 50 வயது உட்பட்ட ஆறு பேரில் கிஷினும் ஒருவர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications