தமிழ்நாட்டின் முன்னணி நிறுவனமான டிவிஎஸ் குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகத்தில் கடந்த ஆண்டு முக்கியமான மாற்றம் நடந்தது. இந்தியாவில் அடுத்தடுத்து முன்னணி நிறுவனங்களின் நிர்வாகம் வாரிசு கைகளுக்கு மாறிய காலக்கட்டத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தில் இரு முக்கிய மாற்றம் நடந்தது.
டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவரான வேணு சீனிவாசன் அவர்களின் மகன் மற்றும் மகளுக்கு முக்கிய நிர்வாக பொறுப்பு டிவிஎஸ் குழுமத்தில் அளிக்கப்பட்டது. வருடத்திற்கு 69,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் டிவிஎஸ் குழுமத்தின் தலைவரான வேணு சீனிவாசனின் மகள் லக்ஷ்மி வேணு. தலைவர் பதவியே ஏற்ற பின்பு லக்ஷ்மி வேணு-வின் இந்தியா முழுவதும் பிரபலமானர்.

லக்ஷ்மி வேணு இந்திய கார்ப்பரேட் உலகில் மிகவும் திறமையான, அதிகம் படித்த மற்றும் திறமையான கார்ப்பரேட் தலைவர்களில் ஒருவர் ஆவார். லக்ஷ்மி வேணு யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர், இதோடு வார்விக் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மேலாண்மையில் முனைவர் பட்டம் பெற்றவர்.
தற்போது லக்ஷ்மி வேணு டிவிஎஸ் குழுமத்தின் சுந்தரம் கிளேட்டன் (SCL) நிறுவனத்தை வழிநடத்துகிறார். சுந்தரம் கிளேட்டன் நிறுவனம் சர்வதேச சந்தைகளில் விரிவாக்கம் அடைய முக்கிய காரணமானவர் லக்ஷ்மி வேணு. இது மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் சுந்தரம் கிளேட்டன் ஒரு ஃபவுண்டரி அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் லக்ஷ்மி வேணு.
லக்ஷ்மி வேணு சமீபத்தில் டிவிஎஸ் குழுமத்தின் வாகன உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உயர்த்தப்பட்டார். கம்மின்ஸ், ஹூண்டாய், வோல்வோ, Paccar மற்றும் டெய்ம்லர் ஆகிய முன்னணி நிறுவனங்களுடனான வர்த்தக உறவுகளை அவர் தலைமையிலான நிர்வாகம் மேம்படுத்தியுள்ளது.

ஆட்டோமொபைல் துறையில் பெண் தலைவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் வேளையிலும் லக்ஷ்மி வேணு அவரது கடின உழைப்பு நிறுவனத்தின் விற்பனை மற்றும் லாப எண்ணிக்கையில் பிரதிபலிக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டில் வெறும் 83 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம் தற்போது 722 கோடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் 2021ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.75.84 கோடியாக இருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் 2276 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
லக்ஷ்மி வேணு-வின் தாயார் மல்லிகா சீனிவாசன் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் ஆவார், TAFE குழுமத்தை மல்லிகா சீனிவாசன் தனியாக நிர்வாகம் செய்து வருகிறார். மல்லிகா சீனிவாசன் ஒரு பொருளாதார பட்டதாரி. லக்ஷ்மி வேணு டாஃபே மோட்டார்ஸ் மற்றும் டிராக்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனராகவும் உள்ளார்.


Click it and Unblock the Notifications