சமீபத்தில் பல பன்னாட்டு நிறுவனங்களின் உயர்மட்ட நிர்வாகம் இந்தியர்கள் சிஇஓ-வாக நியமிக்க அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அடோப், கூகுள், மைக்ரோசாபட் நிறுவனத்தைத் துவங்கி சமீபத்தில் டிவிட்டர் பார்க் அகர்வால் நியமனத்தைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு ஆடம்பர பேஷன் பிராண்டான Chanel இந்தியரை குறிப்பாகப் பெண் ஒருவரை சிஇஓ-வாக நியமித்து அதிரடி காட்டியுள்ளது.
லீனா நாயர் - Chanel CEO
உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் யூனிலீவர் நிறுவனத்தின் தலைமை மனித வள அதிகாரியான லீனா நாயர் தற்போது உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்கும் Chanel நிறுவனத்தின் குளோபல் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
லீனா நாயர் தனது பணியை வருகிற ஜனவரி 2022 முதல் துவங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த லீனா நாயர்...
யூனிலீவர் நிறுவனத்தில் சுமார் 30 வருடம் பணியாற்றி வரும் லீனா நாயர் 1992ஆம் ஆண்டு மேனேஜ்மென்ட் ட்ரைனியாக இந்த நிறுவனத்தில் சேர்ந்தார். இதன் பின்பு 1993-96 வரையில் லிப்டன் இந்தியாவின் தொழிற்சாலை மேலாளர் ஆகவும், 1996-97 வரையில் பணியாளர் உறவு மேலாளர் பதவியிலும், 1997-2000 வரையில் மேலாண்மை மேம்பாட்டு திட்டமிடல் மேலாளராகவும், 2003-04 வரையில் ஹோம் அண்ட் பர்சனல் கேர் பிரிவின் ஜெனரல் மேனேஜராகவும், 2007 -2012 வரையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் தென் ஆசியாவின் நிர்வாகத் தலைவராகவும் 2013-16 வரையில் நிர்வாகப் பிரிவின் குளோபல் தலைவராகவும், 2016ல் யூனிலீவர் நிறுவனத்தின் CHRO பதவியை எட்டிப்பிடித்துள்ளார்.
CHRO பதவி
இவர் CHRO பதவியில் இருந்த போது ஊழியர்கள் நலனில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தியுள்ளார், இதனால் நிர்வாகத்திலும், உற்பத்தியிலும் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுள்ளது மறுக்க முடியாது.
Chanel நிறுவனத்தின் சிஇஓ-வாக லீனா நாயர் நியமிக்கப்பட்டதற்குப் பலர் இணையத்தில் பாராட்டி வரும் நிலையில் சில முக்கியத் தலைவர்களும் பாராட்டியுள்ளனர்.
இந்திரா நூயி
பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் சிஇஓ-வுமான இந்திரா நூயி தனது டிவிட்டரில் லீனா உன்னுடைய வளர்ச்சியைப் பார்க்கும் போது பெருமையாக உள்ளது, உன்னுடைய திறமைக்கு ஏற்ற பதவி இது. எல்லோரும் கவனிக்க வேண்டிய தலைவர் லீனா என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா
இந்தியா நூயி-ஐ தொடர்ந்து இந்திய வர்த்தக உலகின் டிவிட்டர் ஸ்டாரான ஆனந்த் மஹிந்திரா இந்திய சீஇஓக்கள் என்னும் நல்ல வைரஸ் சிலிக்கான் வேலி-யில் மட்டும் அல்ல தற்போது பபேஷன் துறையிலும் வந்துள்ளது, வாழ்த்துக்கள் லீனா, தொடர்ந்து எங்களைப் பெருமைப்படுத்துங்கள் என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பள்ளி பருவ புகைப்படம்
இதுமட்டும் அல்லாமல் 52 வயதாகும் லீனா நாயர் தான் கோலாப்பூர் ஹோலி கிராஸ் கான்வென்ட் பள்ளியில் பிடித்த போது எடுத்த போட்டோவை தனது ஆசிரியரான ஜீவ் சலால் என்பவர் வகுப்பில் உயரமான பெண் என்று லீனா நாயரின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளதாக ஒருவர் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார், இதை லீனா நாயர் லைக் செய்து உள்ளார்.


Click it and Unblock the Notifications