யார் இந்த லிண்டா? எலான் மஸ்க் வைத்த சஸ்பென்ஸ்.. இவர்தான் டிவிட்டரின் புதிய சிஇஓ..?

மைக்ரோ பிளாகிங் பிரிவில் முடி சூடா மன்னாக இருந்த டிவிட்டர் நிறுவனத்தில் பேச்சு சுதந்திரம் குறித்து எழுந்த விவாதம் எலான் மஸ்க்-ஐ 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட கதை அனைவருக்கும் தெரியும்.

டிவிட்டர் வாங்கிய நாளில் இருந்து எலான் மஸ்க் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. ஒருப்பக்கம் டிவிட்டர் தளத்தில் குவிந்துக்கிடைக்கும் பிரச்சனைகளும், அதிகப்படியான செலவுகளும் அவருடைய பாக்கெட்-ஐ ஓட்டை போட்டு வந்த இதே நேரத்தில் டெஸ்லா பங்குகளின் விலை சரிவு பெரும் பிரச்சனையாக இருந்தது. இதற்கிடையிலும் எலான் மஸ்க் ஸ்பேஸ்எக்ஸ் புதிய மற்றும் பெரிய ராக்கெட்-ஐ சோதனை செய்தார்.

யார் இந்த லிண்டா? எலான் மஸ்க் வைத்த சஸ்பென்ஸ்.. இவர்தான் டிவிட்டரின் புதிய சிஇஓ..?

இந்த நிலையில் தனது நிறுவனங்களின் செயல்பாடுகளை எளிமையாக பிற நிறுவனங்களில் செய்வது போல் டிவிட்டரிலும் சிஇஓ பதவியை எலான் மஸ்க் ராஜினாமா செய்து, இப்பதவியில் பெண் தலைவர் ஒருவரை நியமிக்க உள்ளார்.

எலான் மஸ்க் தனது டிவிட்டர் பதிவில் தான் ராஜினாமா செய்யப்போவதையும், யார் அந்த புதிய சிஇஓ என பெயரைக் குறிப்பிடாமல் அவர் ஒரு பெண் என்றும், இன்னும் ஆறு வாரங்களில் சிஇஓ பதிவியேற்று பணியை தொடங்குவார் என்றும் தெரிவித்து இருந்தார்.

ஆனால் வழக்கம் போல் சந்தையில் யார் அந்த புதிய சிஇஓ என்ற தகவல் கசிந்துள்ளது. எலான் மஸ்க் செய்த ட்வீட் தற்போது வைரலாகி இருக்கும் வேளையில் யார் அந்த புதிய சிஇஓ என்ற தகவலை கண்டுப்பிடிக்கும் பணிகள் தீவிரமானது.

இந்ச நிலையில் அமெரிக்காவில் பிரபலமான மாஸ் மீடியா மற்றும் எண்டர்டெயின்மென்ட் நிறுவனமான என்பிசி யுனிவர்சல்-ன் விளம்பரப் பிரிவின் தலைவரான லிண்டா யாக்காரினோ (Linda Yaccarino) அடுத்த டிவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. Linda Yaccarino குறித்து முக்கியமான விஷயங்கள்.

யார் இந்த லிண்டா? எலான் மஸ்க் வைத்த சஸ்பென்ஸ்.. இவர்தான் டிவிட்டரின் புதிய சிஇஓ..?

லிண்டா யாக்காரினோ LinkedIn ப்ரொபைல் படி, 2011 முதல் NBC யுனிவர்சல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது தற்போது சேர்பர்சன் பதவியில் இருந்துக்கொண்டு உலகளாவிய விளம்பரம் மற்றும் கூட்டாண்மை பிரிவை நிர்வாகம் செய்து வருகிறார். இதற்கு முன், கேபிள் பொழுதுபோக்கு மற்றும் டிஜிட்டல் விளம்பர விற்பனைப் பிரிவின் தலைவராக பணியாற்றினார்.

லிண்டா யாக்காரினோ Turner நிறுவனத்தில் 19 ஆண்டுகள் பணியாற்றினார். Turner நிறுவனத்தை விட்டு வெளியேறும் போது நிர்வாக துணைத் தலைவர்/சிஓஓ பதவியில் விளம்பர விற்பனை, மார்கெட்டிங் மற்றும் கையகப்படுத்துதல் பிரிவுக்கு தலைமை தாங்கினார்.

லிண்டா யாக்காரினோ அமெரிக்காவின் பென் ஸ்டேட் யுனிவர்சிட்டியின் முன்னாள் மாணவர், இப்பல்கலைக்கழகத்தில் லிப்ரல் ஆர்ட்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன்ஸ் பிரிவில் பட்டம் பெற்றார்.

இதேவேளையில், அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக எல்லா இர்வின் நியமிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. Ella Irwin தற்போது டிவிட்டர் நிறுவனத்தின் டிரஸ்ட் மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் பிரிவின் தலைவராக உள்ளார். இவரின் பதவி உயர்வுக்குப் பிறகு எலான் மஸ்க்குடன் மிகவும் நெருங்கி பணியாற்றி வருகிறார். இதனால் இவரும் சிஇஓ-வாக நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

ட்விட்டரில் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் நியமிக்கப்படுபவர் யார் என்ற கேள்விக்கான பதில் வெளியாகாத நிலையில் பல கணிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த வகையில் லிண்டா யாக்காரினோ, எல்லா இர்வின் ஆகியோரை தொடர்ந்து இப்பட்டியல் நீண்டு வருகிறது.

டிவிட்டர் ஊழியர்கள் வெளியிட்ட தரவுகள் அடிப்படையில் யாஹூ நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ மரிசா மேயர், யூடியூப் சிஇஓ Susan Wojcicki, எலான் மஸ்க்-ன் Neuralink நிறுவனத்தின் உயர் அதிகாரியான Shivon Zilis, ஸ்பேஸ்எக்ஸ் தலைவர் Gwynne Shotwell, டெஸ்லா சேர்பர்சன் Robyn Denholm ஆகியோரும டிவிட்டர் சிஇஓ பதவிக்கு வரகூடிய சாத்தியம் கொண்ட பெண் தலைவராகும்.

யார் இந்த லிண்டா? எலான் மஸ்க் வைத்த சஸ்பென்ஸ்.. இவர்தான் டிவிட்டரின் புதிய சிஇஓ..?

ஆனால் சந்தை நிலவரத்தின் படி தற்போது டிவிட்டர் வருவாயில் அதிக கவனம் செலுத்தும் காரணத்தால் Linda Yaccarino நியமிக்கப்படுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+