பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான சேபியின் தலைவராக இருக்கும் மாதபி புரி புச், ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளால் தற்போது சர்ச்சையின் மையத்தில் சிக்கியுள்ளார். ஆகஸ்ட் 10-ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையில், மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோர் அதானி குழுமத்தின் பண மோசடி செயல்பாடுகளுடன் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. வெளியான அறிக்கையின்படி, இந்த தம்பதியினர் பெர்முடா மற்றும் மொரிஷியஸ் போன்ற இடங்களில் மறைக்கப்பட்ட பங்குகளை வைத்திருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மாதபி புரி புச் மற்றும் அவருடைய கணவர் இருவரும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கையை மறுத்துள்ளனர். ஆகஸ்ட் 10-ஆம் தேதி இரவு ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கை வெளியானது.

இதைத்தொடர்ந்து நள்ளிரவிலேயே அதற்கு பதில் அளித்த மாதபி புச் மற்றும் அவரது கணவர் தங்களுடைய பெயரை கெடுக்க முயற்சிப்பதற்காகவே, இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மேலும் ஹிண்டன்பர்க் மீது ஏற்கனவே செபி ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு பதிலடி தரவே இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த காலங்களில் தங்களுடைய அனைத்து தகவல்களையும் தெரிவித்துள்ளதாகவும், யார் வந்து கேட்டாலும் இந்த ஆவணங்களை வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
யார் இந்த மாதபி புரி புச்?: தற்போதைய சர்ச்சைகள் இருந்த போதிலும், மாதபி புரி புச்சின் வாழ்க்கை குறிப்பிடத்தக்கதாகவே உள்ளது. 1966-ஆம் ஆண்டில் பிறந்து மும்பையில் வளர்ந்த மாதபி புச், கணிதம் மற்றும் நிதி சார்ந்த துறையில் தனக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளார். ஐஐஎம் அகமதாபாத்தில் MBA பட்டம் பெற்றார். நிதித் துறையில் அவரது பயணம் 1989-இல் ஐசிஐசிஐ வங்கியில் சேர்ந்தபோது தொடங்கியது.
ஐசிஐசிஐ பேங்கில் மாதபி புச்சின் பதவிக்காலம் சந்தைப்படுத்தல் அதிகாரியில் தொடங்கி பிற பணிகளையும் ஏற்று பணிபுரிந்துள்ளார். 2009-ஆம் ஆண்டில் ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸின் நிர்வாக இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றும் முதல் பெண்மணியானார் மாதபி.
அவரது வழிகாட்டுதலின் கீழ், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. அவரது அணுகுமுறையின் காரணமாக வங்கியின் செயல்பாடுகள் மேலோங்கி இருந்ததது.
ஐசிஐசிஐயை விட்டு வெளியேறிய பிறகு, மாதபி புச் சர்வதேச அளவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தினார். ஷாங்காயில் உள்ள நியூ டெவலப்மென்ட் வங்கியின் ஆலோசகராகப் பணியாற்றினார் மற்றும் தனியார் பங்கு நிறுவனமான கிரேட்டர் பசிபிக் கேப்பிட்டலின் சிங்கப்பூர் அலுவலகத்தை வழிநடத்தினார். இந்தப் பாத்திரங்கள் அவருக்கு உலகளாவிய நிதிச் சந்தைகள் பற்றிய விவரங்களை அவருக்கு வழங்கின.
இந்தியாவுக்கு திரும்பிய பிறகு, மாதபி புச் ஐடியா செல்லுலார் லிமிடெட் மற்றும் என்ஐஐடி லிமிடெட் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களில் நான் எக்ஸிக்யூட்டிவ் ரோல்களில் பணியாற்றினார். அவரது பல்வேறு அனுபவங்கள் 2017-இல் சேபியின் முழுநேர உறுப்பினராக நியமிக்கப்பட காரணமாக அமைந்தது.
அங்கு அவர முக்கிய துறைகளை நிர்வகிக்கும் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அப்போதைய சேபி தலைவர் அஜய் தியாகியுடன் துழைத்து பணியாற்றியதனால் அவருடைய செல்வாக்கு மேலும் உயர்ந்தது.
செபியில் தலைமை: மார்ச் 2022-இல், செபியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை மாதபி புச் உருவாக்கினார். SEBI தலைவராக, மாதபி மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு தொடர்பான முக்கிய துறைகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications