மனோஜ் மோடி. இந்த பெயரை நாம் அதிகம் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் இவர் மெல்ல ரிலைடயன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவராக வலம் வரத் தொடங்கி இருக்கிறார்.
Recommended Video
இவர் அதிகம் வெளியில் தலை காட்டமாட்டாராம். கார்ப்பரேட் பார்டிகளில் கூட அதிகம் பங்கெடுக்கமாட்டாராம். அந்த அளவுக்கு ரிசர்வ் டைப்பாம்.
சரி இவர் அம்பானிக்கு எப்படிங்க? என்று கேட்டால்... அட கிட்டத்தட்ட அம்பானிக்கு அவர் தாங்க வலது கை எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
13 பில்லியன் டாலர்
சமீபத்தில் ரிலையன்ஸ் குழுமம், கொரோனா காலத்திலும் முதலீட்டு மழையில் நனைந்ததே நினைவிருக்கிறதா. ஃபேஸ்புக், கே கே ஆர், ஜெனரல் அட்லாண்டிக், முபதாலா, விஸ்டா ஈக்விட்டி.... அந்த முதலீடுகள் வழியாக, சுமார் 13 பில்லியன் டாலரைத் திரட்டி இருக்கிறது ரிலையன்ஸ். இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் மனோஜ் மோடி தான் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் இவரைப் பற்றி ரிலையன்ஸ் குழுமம் இன்னும் வாய் திறக்கவில்லை.
மூன்று தலைமுறை
மனோஜ் மோடியும், முகேஷ் அம்பானியும் கல்லூரி காலத்து தோஸ்துகளாம். மனோஜ் மோடி திருபாய் அம்பானி காலத்தில் இருந்தே ரிலையன்ஸில் வேலை பார்த்து வருகிறார். இப்போது முகேஷ் அம்பானியின் கீழும், முகேஷ் அம்பானியின் மகன் மகள் வரை 3-வது தலைமுறையின் கீழும் ரிலையன்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
டீல் அசுரன்
ஒரு டீலை எடுப்பது, அசுரத் தனமாக ரிலையன்ஸுக்கு சாதகமாக மாற்றுவது, திரைக்குப் பின்னிருந்து டீலை முடிப்பது, முடித்த டீலை சூடு ஆறாமல் நிறைவேற்றுவது தான் மனோஜ் மோடி ஸ்டைலாம். இதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் மேற்கோண்ட பல டீல்களே சாட்சி.
என் வேலை இது தான்
"நான் பேரம் பேசுவதில்லை. எனக்கு ஸ்ட்ராட்டஜி எல்லாம் தெரியாது. எனக்கு ஒரு தொலைநோக்கு பார்வை கூட கிடையாது என்பதை என்னோடு பணியாற்றுபவர்களுக்கு தெரியும். நான் என்னோடு வேலை பார்ப்பவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறேன். அவர்களுக்கு வழிகாட்டுகிறேன். ஒருவலையை இன்னும் சிறப்பாக எப்படி செய்யலாம் எனச் சொல்கிறேன்" அது தான் என் வேலை என ஒரு போது மனோஜ் மோடி பேசினாராம்.
உண்மை இது தான்
"ரிலையன்ஸில் எங்கள் கொள்கை மிகவும் எளிது தான். எங்களோடு வேலை பார்க்கும் எல்லோரும் பணம் பார்க்க வேண்டும். அப்போது தான் வியாபாரம் நீடித்து நிலைக்கும்" என டீல் அசுரன் மனோஜ் மோடி சொன்னதாக தி பிரிண்ட் வலைதளத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது. பின்ன பணம் பார்க்காமலா மனோஜ் மோடிக்கு ரிலையன்ஸில் இத்தனை செல்வாக்கு..!
மனோஜ் மோடியுடன் மீட்டிங்கா
ரிலையன்ஸ் ஜியோவையும், ரிலையன்ஸ் ரீடெயிலையும் ஒரு பக்கா நிறுவனமாக மாற்ற பல டெக்னாலஜி கம்பெனிகளை வளைத்தது ரிலையன்ஸ். செயற்கை நுண்ணறிவு தொடங்கி - ப்ளாக் செயின் வரை பல துறை சார்ந்த நிறுவனங்களை தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டது. மனோஜ் மோடியுடன் ஒரு மீட்டிங் வந்துவிட்டால், அந்த டீல் கிட்டத்தட்ட முடிந்ததாக அர்த்தம் என 4 ஸ்டார்ட் அப் கம்பெனி அதிகாரிகள் சொல்லி இருக்கிறார்கள் என்றால் மனோஜ் மோடி எவ்வளவு பெரிய ஆள் என பார்த்துக் கொள்ளுங்களேன்.
சூரரைப் போற்று
சூரரைப் போற்று சூர்யா படத்தின் கதை ஜி ஆர் கோபிநாத்தின் கதை. அந்த கோபிநாத் தான் இந்திய விமான சந்தையை கலங்கடித்த ஏர் டெக்கன் உரிமையாளர். 2010-ம் ஆண்டு கோபிநாத் தன் கார்கோ ஏர்லைன் கம்பெனியில் ஒரு கணிசமான பங்கை ரிலையன்ஸுக்கு விற்று இருக்கிறார். "மனோஜ் மோடி சரியான திறமை சாலி, ஸ்மார்ட், அற்புதமாக பேரம் பேசுவார். ரிலையன்ஸ் கம்பெனிக்கு எவ்வளவு சாதகமான டீலைக் கொண்டு வர முடியுமோ அவ்வளவு சாதகமாக டீலைக் கொண்டு செல்வார்" என புகழ்ந்து தள்ளுகிறார் கோபிநாத்.
ரிலையன்ஸ் ரீடேயில்
கடந்த சில ஆண்டுகளாக, ரிலையன்ஸ் கம்பெனியில் எல்லா பெரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் இடத்திலும் இருக்கிறார் மனோஜ் மோடி. ரிலையன்ஸ் ரிடெயிலை இந்தியாவின் சிறு நகரங்களுக்கும் கொண்டு சென்றதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டாம். ரிலையன்ஸ் ஜியோ வந்த பின் மனோஜ் மோடி இன்னும் வளர்ந்துவிட்டாராம்.
அத்தனை நெருக்கம்
எந்த அளவு வளர்ந்து இருக்கிறார் என்றால், ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த கட்ட திட்டங்கள் என்ன என்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரியுமாம். மனோஜ் மோடியும், முகேஷ் அம்பானியும் அப்படி ரகசியத்தை பாதுகாத்தார்கள் என்கிறது பிரிண்ட் பத்திரிகை. அப்படி என்றால் அவர் முகேஷ் அம்பானிக்கு எவ்வளவு குளோஸ் என நீங்களே அளவெடுத்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட ஆட்கள் இருப்பதால் தானே, ரிலையன்ஸ் போன்ற ஒரு பெரிய வணிக சாம்ராஜ்யம் இன்னும் 25 வயது இளைஞனைப் போல செயல்படுகிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications