யார் இந்த மைக்கெல் டி பத்ரா..? இவர் தான் அடுத்த ஆர்பிஐ துணை ஆளுநர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல், கடந்த டிசம்பர் 2018-ல் சொந்த காரணங்களை முன்னிட்டு ராஜினாமா செய்தார்.

அவரைத் தொடர்ந்து ஆர்பிஐ துணை ஆளுநர் விரல் ஆச்சார்யா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பாடம் எடுக்கப் போய்விட்டார்.

உர்ஜித் படேலின் இடத்தை, முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி சக்திகாந்த தாஸ் நிரப்பினார்.

 நியமனம்

நியமனம்

விரல் ஆச்சார்யாவின் இடம் நிரப்பப்படாமல் இருந்தது. அந்த இடத்துக்கு தான் இப்போது மைக்கெல் டி பத்ராவை நியமித்து இருக்கிறார்கள். யார் இவர். இதற்கு முன் என்ன செய்து கொண்டு இருந்தார். இவரின் கல்வித் தகுதி என்ன..? இதுவரை மைக்கெல் டி பத்ரா அவர்கள், ஆர்பிஐயில் என்ன செய்து கொண்டு இருந்தார். வாருங்கள் பார்ப்போம்.

 தற்போது

தற்போது

மைக்கெல் டி பத்ரா தற்போது, மத்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கைத் துறையில் செயல் இயக்குநராக பதவியில் இருக்கிறார். ஐஐடி மும்பையில் முனைவர் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் Fellow-வாக இருக்கிறார். 1985-ம் ஆண்டிலேயே ஆர் பி ஐ-ல் இணைந்துவிட்டார்.

 பல பதவிகள்
 

பல பதவிகள்

மத்திய ரிசர்வ் வங்கியில் சேர்ந்ததில் இருந்தே பல முக்கிய பதவிகளில் பணியாற்றி இருக்கிறாராம். மத்திய அரசின், சர்வதேச நிதிகளுக்கான பொருளாதார பகுப்பாய்வு மற்றும் கொள்கைத் துறை (Department of Economic analysis and Policy incharge of International finance) ஆலோசகராக பணியாற்றி இருக்கிறாராம்.

 2005 முதல்

2005 முதல்

இந்தியாவில் ஒவ்வொரு முறையும், வங்கிகளுக்கான வட்டி விகிதங்களைக் குறைப்பது மற்றும் உயர்த்துவது போன்ற வேலைகளை, மத்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கைத் துறை தான் பெரிய அளவில் முன்னெடுத்து வருகின்றன. அந்த துறையில் கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து நம் மைக்கெல் டி பத்ரா வேலை பார்த்து வருகிறாராம்.

 பெரிய ஆள் தான்

பெரிய ஆள் தான்

மைக்கெல் டி பத்ரா பணக் கொள்கை விவகாரங்களில் ஒரு மேதை என புகழும் அளவுக்கு செய்திகள் வெளியாகி இருக்கின்றன. கடந்த 2019-ம் ஆண்டில் மத்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதங்களைக் குறைக்க 3 முறை தொடர்ச்சியாக ஆதரவாக வாக்களித்தவராம். அதோடு கடந்த டிசம்பர் 2019-ல் ஆர்பிஐ வட்டி விகிதங்களைக் குறைக்கக் கூடாது என வாக்களித்தவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் வந்த பிறகாவது நிதியப் பொருளாதாரத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் சரி.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

who is michael Debabrata patra

Michael Debabrata patra is going to be the the next deputy governor of RBI. Who is he? What he did in his career.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X