இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு சந்தை வளர்ச்சி அடையும்போது மக்களின் வருமானமும் உயரும், இதனால் குறிப்பிட்ட கால இடைவேளையில் மக்களின் சராசரி வருமானத்தின் அளவீடுகள் மாறுபடும். இதனாலேயே உலகில் ஒவ்வொரு நாடும் தனிநபர் வருமான அளவீட்டைத் தொடர்ந்து கணக்கெடுத்து வருகிறது.
இதன் மூலம் இந்தியாவில் மிடில் கிளாஸ் மக்கள் என்ற அளவீடு தொடர்ந்து மாற்றம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா என்ற தளம் இந்திய மக்களின் வருமானம் குறித்த முக்கிய அறிகையை வெளியிட்டு உள்ளது, இது 2021 உலகச் சமத்துவமின்மை தரவுகள் அடிப்படையில் இருந்து தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆய்வின் படி இந்தியாவில் டாப் 1 சதவீத மக்கள் மாதம் 3.7 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் பணக்காரர்கள் எனப் பிரித்துள்ளது. ஆதாவது ஒரு தனிநபர் வரிக்கு முன்பு மாதம் 3,70,000 ரூபாய் சம்பாதித்தால் இந்தியாவில் 1 சதவீத பணக்காரர்கள் பட்டியலில் இருப்பவர் எனத் தெரிவித்துள்ளது.
இதேபோல் போல் ஒரு தனிநபர், வரிக்கு முன்பு மாதம் 1,00,000 ரூபாய் சம்பாதித்தால், அவர் இந்தியாவில் டாப் 3 சதவீத பணக்காரர்கள் பட்டியலில் இருப்பவர் எனத் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மாதம் 64,380 ரூபாய் சம்பாதித்தால் டாப் 5 சதவீத மக்கள் எனத் தெரிவித்துள்ளது.
இதே தொடர்ந்து மாதம் 25000 ரூபாய் சம்பாதிக்கும் மக்கள் டாப் 10 சதவீத அளவீட்டில் இருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளது. இந்தப் பிரிவினரைத் தான் மிடில் கிளாஸ் மக்களாக வகைப்படுத்தப்படுகின்றனர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் 25000 ரூபாய்க்கு மேல் 1 ரூபாய்ச் சம்பாதித்தாலும் நீங்கள் இந்திய மக்கள் தொகையில் சுமார் 90 சதவீத மக்களை விடவும் அதிகமாகச் சம்பாதிக்கிறீர்கள் என்பது பொருள்.
இப்ப சொல்லுங்க நீங்கள் எந்தப் பிரிவில் இருக்கிறீர்கள்..? உங்க பதிலை மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க. இதேவேளையில் இந்தியாவில் அதிகப்படியான மக்களின் வருமானம் கணக்கில் வருவது இல்லை என்பது நீண்ட கால விவாத பொருளாகவே உள்ளது.
அதிலும் குறிப்பாகச் சாலையோர கடைகள், தின்பண்ட கடைகள், டீ கடைகள், தினசரி சம்பளத்தில் பணியாற்றும் பலர் உதாரணமாகக் கட்டுமான ஊழியர்கள், எலக்ட்ரிஷன், ப்ளம்பர், கார் ஓட்டுநர்கள் போன்றோரின் வருமானம் வரி கணக்கிற்குள் வருவது கிடையாது என வாதம் உள்ளது. ஆனால் இது சிறிய அளவீடு மட்டுமே என்பது பலருக்கும் உணர்வது இல்லை.

இந்திய மக்கள் தொகையில் 1 சதவீதம் பேர் மாதம் 3.7 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள் எனில் சுமார் 1.4 கோடி மக்கள் நாட்டின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் உள்ளனர். ஆனால் 90 சதவீத மக்கள் 25000 ரூபாய்க்குக் கீழ் சம்பாதிக்கின்றனர், இதுதான் நாட்டின் மிகப்பெரிய சமத்துவமின்மை பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications