நியூயார்க்: 'ஓபன்ஏஐ' நிறுவனத்தின் இணை இயக்குநரும், சிஇஓ-வுமான சாம் ஆல்ட்மேன், அதிரடியாக சிஇஓ பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பது தொழில்நுட்ப உலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இடைக்கால சிஇஓவாக மிரா முராட்டி நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த அதிரடி மாற்றத்திற்கு பிறகு யார் இந்த முராட்டி? என்று பலரும் தேட தொடங்கியுள்ளனர்.
இந்த உலகில் மனிதன் உருவாகி சில காலம்தான் ஆகிறது. அதுவும் பரிணாமமடைந்து கொஞ்ச காலத்திலேயே நாம் கண்டுபிடித்த விஷயங்கள் அசாத்தியமானவையாக இருக்கிறது. இந்த கண்டுபிடிப்புகளின் தொடர்ச்சியாக தற்போது நாம் அடைந்திருக்கும் உச்சம்தான் 'செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்'.

மனிதர்களுக்கு தேவையான தகவல்கள், மனிதன் செய்யும் வேலைகள் ஆகியவற்றை இதுவே செய்துவிடும். இதை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்க உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் ஆகியோர் கடந்த 2015ல் ஒன்று சேர்ந்து OpenAI எனும் தனியார் செயற்கை நுண்ணறிவு தனியார் ஆராய்ச்சி ஆய்வகத்தை தொடங்கினார்கள். இப்படியாகதான் கடந்த 2022ம் ஆண்டு ChatGPT களத்திற்கு வருகிறது.
மனிதர்களின் வேலையை எளிதாக்கும் என்று சொல்லப்படும் இது, எதிர்காலத்தில் மனிதர்களின் வேலையை பறிக்கவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை சாம் ஆல்ட்மேன்தான் கண்டுபிடித்தார். இதன் பணிகள், பயன்பாடுகள், எப்படி பயன்படுத்துவது? எதுவெல்லாம் செய்யும், இதில் இருக்கும் பிரச்னைகள் என அனைத்தையும் உலகுக்கு தெரியப்படுத்த நாடு நாடாக சுற்றி பயணித்தார்.
ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை இவர் ஓபன்ஐ நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். காரணம் முழுமையாக தெரியவில்லை என்றாலும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் இயக்குநர்கள் அடங்கிய குழுவில் இவர் உண்மையாக செயல்படவில்லை என்கிற தகவல்கள் மட்டும் கசிந்திருக்கின்றன.
இதனையடுத்துதான் இடைக்கால சிஇஓவாக மிரா முராட்டி நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நியமனத்திற்கு பிறகு யார் இந்த முராட்டி? என்று பலரும் தேட தொடங்கியுள்ளனர். 34 வயதாகும் முராட்டி அடிப்படையில் ஒரு பொறியாளர். இவர் கடந்த 2018ம் ஆண்டுதான் OpenAI நிறுவனத்தில் துணைத் தலைவராக உள்ளே வந்தார். ஆனால் அவர் ஆற்றிய பணிகள் கொஞ்சம் நஞ்சமல்ல.
ChatGPT வளர்ச்சியை சரியான நேரத்தில் உறுதி செய்வது, மைக்ரோசாப்ட் உடனான OpenAI இன் உறவை நிர்வகிப்பது, அமெரிக்காவிலும், ஐரோப்பாவில் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுக் கொள்கையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தது, தொழில்நுட்ப நிபுணத்துவம், வணிகப் புத்திசாலித்தனம், ஒரே நோக்கங்களை கொண்ட ஊழியர்களை ஒன்று சேர்ப்பது என பல தளங்களில் திறம்பட செயலாற்றியுள்ளார்.
இவரது பணியை பாராட்டிய மைக்ரோசாப்டின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, "நாங்கள் இதுவரை கண்டிராத சில அற்புதமான AI தொழில்நுட்பங்களை உருவாக்க மிரா உதவியுள்ளார்" என்று பாராட்டியுள்ளார். மிரா என்கிற பெயரை கேட்டவுடன் பலருக்கும் இருந்த சந்தேகம், இவர் இந்தியாவை சேர்ந்தவரா? என்பதுதான். கிடையாது! இவரது பூர்வீகம் அல்பேனியா. பிறந்தது அல்பேனியாவாக இருந்தாலும் வளர்ந்தது கனடாவில்தான்.
‛சாட்ஜிபிடி'யை கண்டுபிடித்த நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் நீக்கம்! ஷாக் பின்னணி! ‛ஓபன் ஏஐ' அதிரடி
கல்லூரி காலகட்டத்தில் இவர் ரேஸ் கார்களின் டிசைன்களை வடிவமைத்திருக்கிறார். இது தவிர விண்வெளி, ஆட்டோமோட்டிவ், விர்ச்சுவல் ரியாலிட்டி (விஆர்) மற்றும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டி (ஏஆர்) ஆகிய துறைகளிலும் பணிபுரிந்துள்ளார். ஓபன்ஏஜ நிறுவனத்திற்கு வருவதற்கு முன்னரே அவர் எலான் மஸ்க் உடன் பணியாற்றியுள்ளார். அதேபோல இத்தாலியன், அல்பேனியன் மற்றும் ஆங்கிலம் என இவருக்கு மூன்று மொழிகள் சரளமாக தெரியும். இத்தனை துறையிலும் பணியாற்றிய அனுபவத்தோடுதான் அவர் ஓபன்ஏஐ-ல் நுழைந்தார்.
இந்நிறுவனத்தின் இடைக்கால சிஇஓவாக ஆவதற்கு முன்னர் தொழில்நுட்ப பிரிவின் தலைவராக பணியாற்றியுள்ள இவர், செயற்கை தொழல்நுட்பத்தில் வட்டார மொழிகளை கையாள்வதில் பிரச்னை இருக்கிறது என்றும், தவறான தகவல்கள் சில நேரங்களில் இதன் மூலம் தரப்படுகிறது என்பதையும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். எனவே இதனை சரி செய்வதில் இவர் தலைமையிலான குழு தற்போது தீவிரமாக பணியாற்றி வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications