சோசியல் மீடியாவில் மிகப் பெரிய தொழில்முனைவோராக அறியப்படுபவர் முகேஷ் பன்சால். தொழில்முனைவோர்களுடன் அவர் நடத்தும் கலந்துரையாடல் பாட்காஸ்ட்டாக ஒலிபரப்பப்பட்டு மிகவும் பிரபலமடைந்தது.
ஐஐடி கான்பூரில் படித்தவரான முகேஷ் பன்சால் தொடக்கத்திலேயே தொழிலில் இறங்கவில்லை. முதலில் அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள டெலாய்ட்டே நிறுவனத்தில் சில பல ஆண்டுகள் வேலை பார்த்தார். தொழில் அனுபவத்தைப் பெறுவதற்காக பன்சால் சிலிக்கான் வேலி கம்பெனிகள் சிலவற்றிலும் வேலை பார்த்தார். அதன் பின்னர் தான் அவர் சுயமாகத் தொழில் தொடங்க முடிவு செய்தார்.

2007 ஆம் ஆண்டில் பேஷன் இ-காமர்ஸ் நிறுவனமான மிந்த்ராவை முகேஷ் பன்சாலும் அவரது நண்பர்கள் ஆஷுதோஷ் லாவானியா, வினீத் சக்ஸேனா ஆகியோரும் இணைந்து தொடங்கினர். தொடக்கத்தில் மிந்த்ரா ஒரு பரிசளிக்கும் தளமாகத்தான் இருந்தது. ஆனால் சில வருடங்களுக்குள் இந்தியாவின் மிகப் பிரபலமான பேஷன் இ-காமர்ஸ் பிளாட்பார்மாக மிந்த்ரா உருவெடுத்தது.
வர்த்தகத்தில் மிந்த்ரா உயரஉயரச் செல்லச்செல்ல பிற பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்களின் கவனத்தை கவர்ந்தது. இறுதியில் மிந்த்ராவை பிளிப்கார்ட் ரூ.2,730 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது.
அதன் பின்னர் பிளிப்கார்ட்டின் காமர்ஸ் மற்றும் அட்வர்டைசிங் பிசினஸ் ஹெட்டாக பதவி ஏற்றார்.
அவரது முயற்சியால் இந்த இ-காமர்ஸ் பிளாட்பார்ம் ரூ.41,354 கோடி வருவாயை ஈட்டியது. மிந்த்ராவை நிறுவிய முகேஷ் பன்சால் இப்போது க்யூர் ஃபிட் என்ற ஒரு ஹெல்த் அண்டு ஃபிட்னஸ் கம்பெனியின் சிஇஓவாக இருக்கிறார்.
க்யூர் ஃபிட் விரைவிலேயே வளர்ச்சியடைந்ததை, தொடர்ந்து மிகவும் பிரபலமான ஜிம் செயின் கல்ட் டாட் ஃபிட் உள்பட பிற நிறுவனங்களை கையகப்படுத்தத் தொடங்கியது. கல்ட் டாட் ஃபிட் நிறுவனத்துக்கு இந்தியாவில் நூற்றுக்கணக்கான கிளைகள் உள்ளன. அத்துடன் ஈட் ஃபிட் என்ற நிறுவனத்தையும் க்யூர் ஃபிட் வாங்கியது.
முகேஷ் பன்சாலின் ஜிம் செயினின் வெற்றியில் டாடா டிஜிட்டல் கவரப்பட்டது. இந்த ஆர்வத்தின் விளைவாக, க்யூர் ஃபிட் மற்றும் கல்ட் ஃபிட் கணிசமான நிதியை டாடா டிஜிட்டலிடமிருந்து பெற்றன. இது பன்சாலின் வணிகத்தை புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்றது.
டாடா முதலீடு செய்த ரூ.620 கோடியுடன் கல்ட்.ஃபிட் மற்றும் க்யூர் ஃபிட் நிறுவனங்களின் மதிப்பை ரூ.12,411 கோடியாக உயர்த்தியது. முகேஷ் பன்சாலின் நிகர மதிப்பு ரூ.4200 கோடியைத் தாண்டியது.
முகேஷ் பன்சால் உத்தராகண்ட்டின் ஹரித்துவாரைச் சேர்ந்தவர். ஐஐடி கான்பூரில் அவர் பிடெக் பட்டப்படிப்பை முடித்தார். சாதாரண நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர் முகேஷ் பன்சால். அவரது பட்டப்படிப்புக்குப் பின்னர் Deloitte நிறுவனத்தில் ஒரு சிஸ்டம் அனலிஸ்ட்டாக இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தார்.
பின்னர் அவர் NexTag, eWanted, Centrata, newScale ஆகிய கம்பெனிகளிலும் சில ஆண்டுகள் வேலை பார்த்தார். இந்த நிறுவனங்கள் அனைத்தும் சிலிக்கான் வேலியில் தொடங்கப்பட்ட ஆரம்பகால ஸ்டார்ட்அப்கள் ஆகும். இந்த ஸ்டார்ட்அப்களில் பார்த்த வேலைதான் முகேஷ் பன்சாலுக்கு சுயமாகத் தொழில் தொடங்குவதற்கான நம்பிக்கையும் அனுபவத்தையும் கொடுத்தன.
Story Written by: I. Jayachandran
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications