இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக விளங்கும் டாடா குழுமம் பல துறையில் சாதித்தாலும் புதிய யுக வர்த்தகத்தில் பெரிய அளவிலான வெற்றி அடைய முடியாமல் தவிக்கிறது. அதிலும் குறிப்பாக டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் பெரும் கனவான டிஜிட்டல் வர்த்தக பிரிவு டிசிஎஸ் போல் பெரும் வெற்றியை பதிவு செய்யும் எனத் திட்டமிட்டுப் பல பெரும் தலைகளை அடுத்தடுத்து நியமித்தார். ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது மட்டும் அல்லாமல் புதிய முதலீடுகளுக்கும் தற்காலிக தடை விதிக்கும் அளவுக்கு நிலைமை சமீபத்தில் மாறியது. இதற்கிடையில் கடந்த 2 வருடத்தில் டாடா டிஜிட்டல் பிரிவில் இருந்து பல பெரும் தலைகள் வெளியேறியது பெரும் சோகத்தைக் கொடுத்தது.
இந்த நிலையில் டாடா டிஜிட்டல் பிரிவு மீண்டும் ஒரு பெரிய தலைமை மாற்றத்தைச் சந்தித்துள்ளது. டாடா டிஜிட்டல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான நவீன் தஹில்யானி, பதவியேற்று ஒரு வருடத்திற்குள் பதவி விலகியுள்ளார்.

2024 பிப்ரவரியில் பதவியேற்ற அவர், டாடா நியூ சூப்பர்ஆப் உள்ளிட்ட டிஜிட்டல் திட்டங்களை மறுசீரமைப்பு செய்ய முயன்றார். ஆனால் இது கைகொடுக்கவில்லை. டாடா குழுமம் தனது டிஜிட்டல் வர்த்தகத்தில் நிலையான தலைமையை உருவாக்குவதில் தொடர்ந்து சவால்களை எதிர்கொள்கிறது.
நவின் தஹில்யானி இப்போது பிரிட்டனைத் தளமாகக் கொண்ட ப்ரூடென்ஷியல் நிறுவனத்தில் பிராந்திய தலைமைப் பதவியை ஏற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவீன் தஹில்யானி முன்னதாக டாடா ஏஐஏ லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர், டாடா டிஜிட்டல் பிரிவின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பிரதீக் பாலின் வெளியேற்றத்திற்குப் பிறகு இந்தப் பதவியை ஏற்றிருந்தார். அவரது திடீர் வெளியேற்றம், டாடா குழுமத்தின் டிஜிட்டல் பிரிவு வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
நவீன் தஹில்யானி இடத்தில் அடுத்து டாடா டிஜிட்டல் பிரிவின் தலைமை நிதியியல் அதிகாரியான ஹர்தீப் சிங் குரூ பொறுப்பு ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் டாடா சன்ஸ் குரூப் CFO சௌரப் அகர்வால்-க்கு நெருங்கியவர் எனவும் தெரிகிறது.
டாடா குழுமம் டிஜிட்டல் துறையில் பல வணிகங்களையும் பிராண்டுகளையும் வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறது. டாடா டிஜிட்டல் பிரிவில் ஆன்லைன் சில்லறை வணிகம், ஈகாமர்ஸ், டிஜிட்டல் மருந்தகம் மற்றும் பின்டெக் சேவைகளை மக்களுக்கு நேரடியாக அளித்து வருகிறது. இதில் முக்கியமாக டாடா நியூ சூப்பர்ஆப் மூலம், டாடா குழுமத்தில் இருக்கும் பல பிராண்டுகளை ஒருங்கிணைத்து, மக்களுக்கு ஷாப்பிங் செய்ய ஒரே தளத்தை கொடுக்கிறது.
டாடா நியூ (Tata Neu): டாடா குழுமத்தின் முதல் சூப்பர்ஆப் ஆகும். இது டாடா குழுமத்தின் பல பிராண்டுகளையும் சேவைகளையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கிறது. பயனர்கள் ஒரே ஆப்-ல் ஷாப்பிங், பயணம், பின்டெக் மற்றும் பிற சேவைகளை அணுக முடியும்.
டாடா கிளிக் (Tata Cliq): பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் பொருட்களுக்கான ஈகாமர்ஸ் தளமாகும். ஆடைகள், காலணிகள் மற்றும் பாகங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்கிறது.
பிக்பாஸ்கெட் (BigBasket): இந்தியாவின் முன்னணி மளிகை பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் நிறுவனமாகும். மளிகைப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை ஆன்லைனில் விற்கிறது.
டாடா 1mg (Tata 1mg): டிஜிட்டல் மருந்தகமாக செயல்படுகிறது. மருந்துகள், சுகாதார பொருட்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளை ஆன்லைனில் வழங்குகிறது.
இந்த 5 ஆம் முக்கிய பிரிவாக இருந்தாலும் டாடா குழுமத்தின் பிற முக்கிய பிராண்டுகளான வெஸ்ட்சைட் (Westside), உற்சா (Utsa), மியா (Mia), டாடா பிளே (Tata Play), ஸ்டார் பஜார் (Star Bazaar), லேண்ட்மார்க் (Landmark), டாடா சோல்ஃபுல் (Tata Soulfull) ஆகிய பிரிண்டுகளின் பொருட்கள் சூப்பர் ஆப் மூலம் இணைக்கப்பட்டு விற்கப்படுகிறது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications