டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தனிச்செயலாளர்களுள் ஒருவராக நிதி திவாரி என்ற இளம் ஐஎஃப்எஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்கனவே இரண்டு பேர் தனிச்செயலாளர்களாக இருக்கும் நிலையில் நிதி திவாரி என்பவரும் கூடுதலாக அந்த பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் வயதிலேயே பிரதமரின் தனிச் செயலாளர் என்ற பொறுப்புக்கு உயர்ந்து அனைவருக்கும் முன் உதாரணமாக மாறி இருக்கிறார்.
நிதி திவாரி தற்போது பிரதமர் அலுவலகத்தில் துணை செயலாளராக பணியாற்றி வருகிறார், அவருக்கு தான் தற்போது பிரதமரின் தனி செயலாளர் என்ற புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய தொழிலாளர் மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ளது. நிதி திவாரி பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்ற தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்தவர். வாரணாசியில் இருக்கும் மெக்மூர்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் இவர்.

சிவில் சர்வீசஸ் தேர்வில் ஆர்வம் கொண்டு அதற்காக தீவிரமாக பயின்றார். அப்படி படித்து கொண்டிருக்கும் போதே வணிகவரி பிரிவில் உதவி ஆணையராக பணி கிடைத்தது. இருந்தாலும் விடாமல் முயன்று சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதினார். 2013 ஆம் ஆண்டில் சிவில் சர்வீசஸ் தேர்வில் 96ஆவது இடத்தை பிடித்தார். இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவுத் துறையில் பணி செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் பல்வேறு துறைகளிலும் சிறப்பாக பணியாற்றிய இவருக்கு 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. இவரின் பணி திறமையை பாராட்டி அரசு 2023 ஆம் ஆண்டு பிரதமர் அலுவலக துணை செயலாளராக பதவி உயர்வு வழங்கியது. நிதி திவாரியை பொறுத்தவரைஉ வெளியுறவு மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான முக்கிய இலாகாக்களை கையாண்டவர்.
வெளியுறவு துறை அமைச்சகத்தில் சர்வதேச பாதுகாப்பு விவகாரப் பிரிவில் பணியாற்றினார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் கீழ் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அணுசக்தி மற்றும் பாதுகாப்பு விவகாரம் உள்ளிட்ட முக்கியமான வெளியுறவு விவகாரங்களை இவர் கவனித்துக் கொண்டுள்ளார். இது தவிர இந்தியா ஜி 20 நாடுகளின் கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தியது, அதனை சிறப்பாக நடத்தி முடித்ததில் நிதி திவாரியின் பங்கும் முக்கியமானது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்கனவே விவேக்குமார் மற்றும் ஹர்திக் சதீஷ் சந்திர ஷா ஆகிய இரண்டு பேர் தனி செயலாளராக உள்ள நிலையில் நிதி திவாரியும் தனி செயலராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலாளராக அவருடைய தினசரி நிர்வாக பணிகளை கையாள இருக்கிறார். பிரதமர் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டங்கள், அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் அவருடைய வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் உள்ளிட்ட பணிகளை இவர் மேற்பார்வையிட இருக்கிறார்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications