டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா மறைவுக்கு பின்னர், அவரது பதவிக்கும், அதிகாரத்திற்கும் யார் வாரிசாக வரலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் ரத்தன் டாடா-வின் சகோதரர் நோயல் நவல் டாடா பெயரும் அடிபடுகிறது. இதனால் என்.சந்திரேசகரன் பதவிக்கு ஆபத்து வருமா என்றால் நிச்சயம் இல்லை.
டாடா சாம்ராஜ்ஜியத்தின் மொத்த ஹோல்டிங் நிறுவனமாக இருக்கும் டாடா சன்ஸ்-க்கு என் சந்திரசேகரன் தலைமை வகிக்கும் வேளையில், இதில் அதிகப்படியான பங்கு இருப்பை கொண்டிருக்கும் நிறுவனமான டாடா டிரஸ்ட் அமைப்பைத் தான் இதுநாள் வரையில் ரத்தன் டாடா நிர்வாகம் செய்து வந்தார். தற்போது இந்த பதவியைத் தான் நோயல் டாடா கைப்பற்ற உள்ளார். இது மட்டும் அல்லாமல் நோயல் டாடா - எமிரிட்டஸ் சேர்மன் என்ற பதவியும் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோயல் டாடா கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக டாடா குழுமத்தில் பல்வேறு துறையில், பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். இவர் நவல் டாடா மற்றும் சிமோன் டாடா-வின் மகன், ரத்தன் டாடா மற்றும் ஜிம்மி டாடா-வின் சகோதரர் ஆவார். ரத்தன் டாடா மற்றும் ஜிம்மி டாடா-வின் தாயார் வேறு, நோயல் டாடா தாயார் வேறு.
நோயல் டாடா டாடா குழுமத்தின் பல நிறுவனங்களின் இயக்குநராக உள்ளார். அவற்றில் ட்ரெண்ட், டாடா இன்டர்நேஷனல் லிமிடெட், வோல்டாஸ், டாடா இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் தலைவராகவும், டாடா ஸ்டீல் மற்றும் டைட்டன் நிறுவனங்களின் துணைத் தலைவராகவும் உள்ளார்.
நோயல் டாடா தற்போது சர் ரத்தன் டாடா டிரஸ்ட் மற்றும் சர் டோராபிஜி டாடா டிரஸ்ட் ஆகியவற்றின் டிரஸ்டியாகவும் உள்ளார். அவரது கடைசி நிர்வாகப் பொறுப்பு டாடா குழுமத்தின் வர்த்தகம் மற்றும் விநியோகம் பிரிவான டாடா இன்டர்நேஷனல் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநராக இருந்தது.
அவர் 2010 ஆகஸ்ட் முதல் 2021 நவம்பர் வரை அந்தப் பொறுப்பில் இருந்தார். அப்போது நிறுவனத்தின் வருவாயை 500 மில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிகரித்தார்.
டாடா இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு முன்பு நோயல் டாடா ட்ரெண்ட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநராக இருந்தார். அவர் 1998ல் ஒரு கடையுடன் தொடங்கிய ட்ரெண்ட் நிறுவனத்தை இன்று 700க்கும் மேற்பட்ட கடைகளாக விரிவுபடுத்தியதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.
நோயல் டாடா சசெக்ஸ் பல்கலைக்கழகம் (UK) பட்டம் பெற்றுள்ளார். INSEAD இல் சர்வதேச நிர்வாக திட்டத்தையும் முடித்துள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் டாடா குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகம் நோயல் டாடாவின் மூன்று குழந்தைகளை தனது ஐந்து தொண்டு நிறுவனங்களின் இயக்குநராக நியமித்தது. இது டாடா டிரஸ்ட்களின் தலைமைத்துவத்தில் முக்கியமான மாற்றத்தை குறிக்கிறது. ஏனெனில் பல ஆண்டுகளுக்குப் பிறகு டாடா குடும்பத்தின் இளைய உறுப்பினர்கள் இந்த முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
நோயல் டாடாவின் அனுபவம் மற்றும் டாடா குழுமத்தில் உள்ள தொடர்புகள் அவரை இந்த முக்கிய பதவிக்கு வலுவான போட்டியாளராக ஆக்குகிறது. ஆனால் ரத்தன் டாடாவின் வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த முடிவை டாடா சன்ஸில் குறிப்பிடத்தக்கப் பங்கு வைத்திருக்கும் டாடா டிரஸ்ட்கள் எடுக்கும். டாடா டிரஸ்ட்-ல் அதிகாரம் டாடா குடும்பத்தினரிடம் உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications