ரத்தன் டாடா - நோயல் டாடா வாய்க்கா தகராறு.. தேடி வந்த முக்கிய பதவி.. இனி ராஜவாழ்க்கை தான்..!!

டாடா குழுமத்தில் 66 சதவீத பங்குகளை வைத்திருக்கும் டாடா டிரஸ்ட் அமைப்பின் தலைவராக ரத்தன் டாடாவுக்கு பின்பு, அவருடைய சகோதரர் நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நவல் எச் டாடா மற்றும் சிமோன் என் டாடா ஆகியோரின் மகன் ஆவார். மேலும் ரத்தன் டாடாவின் சகோததர் ஆவார்.

டாடா டிரஸ்ட் அமைப்பின் தலைவர்கள் ஒவ்வொரு முறையும் டாடா குடும்பத்தின் உறுப்பினர் அல்லது பார்ஸ் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்து வருகின்றனர், அந்த வகையில் இந்த முறையும் ரத்தன் டாடாவுக்கு பின்பு பார்சி சமுகத்தையும், டாடா குடும்பத்தையும் சேர்ந்த நோயல் டாடா நியமிக்கப்பட்டு உள்ளார். நோயல் டாடா சர் டோராபிஜி டாடா டிரஸ்டின் 11வது தலைவராகவும், சர் ரத்தன் டாடா டிரஸ்டின் 6வது தலைவராகவும் உள்ளார்.

ரத்தன் டாடா - நோயல் டாடா வாய்க்கா தகராறு.. தேடி வந்த முக்கிய பதவி.. இனி ராஜவாழ்க்கை தான்..!!


நோயல் டாடா ஒரு காலத்தில் டாடா சன்ஸின் தலைமைப் பதவிக்கு போட்டிப்போடும் வேட்பாளராகக் இருந்தார். ஆனால் அந்த பதவி நோயல் டாடாவின் மனைவியின் சகோதரரான சைரஸ் மிஸ்டிரிக்கு கிடைத்தது. மிஸ்டிரியின் சர்ச்சைக்குரிய வெளியேற்றைத் தொடர்ந்து, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) இன் அப்போதைய தலைவர் என் சந்திரசேகரன், டாடா சன்ஸின் தலைவரானார்.

இதற்கு முக்கியமான காரணம் கடந்த காலத்தில் ரத்தன் டாடா - நோயல் டாடா மத்தியிலான கசப்பான உறவு தான். என் சந்திரசேகரன் நியமனத்திற்கு பின்பு, நோயல் டாடா மற்றும் ரத்தன் டாடா மத்தியிலான பிரச்சனை சமரசம் செய்துள்ளதாக கூறப்படுகிறது, ரத்தன் டாடாவின் கடைசி காலத்தில் இருவரும் சற்று நெருக்கமாகவே இருந்தனர்.

இதன் வெளிப்பாடாகவே நோயல் டாடாவின் 3 பிள்ளைகளும் வெறும் நிறுவன பணியில் இருந்து நிர்வாக பணிக்கு மாற்றப்பட்டது. தற்போது ரத்தன் டாடாவின் மரணம் 100 நாடுகளில் செயல்படும் 165 பில்லியன் டாலர் வணிகப் பேரரசை சமாளிக்க டாடா டிரஸ்ட் அமைப்பின் தலைவரான ரத்தன் டாடா இறுதி சடங்கு முடிந்து 15 மணிநேரத்தில் இப்பதவி நோயல் டாடாவுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

யார் இந்த நோயல் டாடா?: டாடா குழுமத்தின் முக்கிய நபரான நோயல் டாடா, நான்கு தசாபதங்களாக டாடா இன்டர்நேஷனல் லிமிடெட்டின் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றி வருகின்றனர்.

அவர் டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களில் பல நிர்வாகக் குழு பதவிகளை வகிக்கிறார், அதில் டிரெண்ட், வோல்டாஸ் மற்றும் டாடா இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் தலைவராகவும், டாடா ஸ்டீல் மற்றும் டைட்டன் கம்பெனி லிமிடெட் ஆகியவற்றின் துணைத் தலைவராகவும் உள்ளார்.

அவரது சமீபத்திய நிர்வாகப் பணி டாடா இன்டர்நேஷனல் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநராக இருந்தது. அவரது தலைமையில், ஆகஸ்ட் 2010 முதல் நவம்பர் 2021 வரையிலான காலத்தில், நிறுவனத்தின் வருவாய் 500 மில்லியன் டாலரில் இருந்து 3 பில்லியன் டாலராக அதிகரித்தது.

டாடா இன்டர்நேஷனலுக்கு முன், நோயல் டாடா டிரெண்ட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநராக இருந்தார், இது ஒரு கடையிலிருந்து இன்று 700 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு விரிவடைய வழிவகுத்தார். அவர் சசெக்ஸ் பல்கலைக்கழகம் (யுனைட்டட் கிங்டம்) இலிருந்து பட்டம் பெற்றவர் மற்றும் INSEAD இல் சர்வதேச நிர்வாகத் திட்டத்தை (IEP) முடித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+