இந்தியாவில் திரைத்துறை ரசிகர்கள் எப்படி கோடிக்கணக்கில் இருக்கிறார்களோ அதற்கு நிகரான ரசிகர்கள் கிரிக்கெட் விளையாட்டிற்கும் இருக்கிறார்கள் . கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான போட்டி என வந்தால் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் அந்த போட்டியில் தான் இருக்கும். அதனால் தான் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் சினிமா சூப்பர் ஸ்டாரர்களுக்கு இணையான ரசிகர்களையும் அந்தஸ்தையும் பெற்றுள்ளனர்.
இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் அதிக புகழ் பெற்றவர்களா அல்லது பாலிவுட் நட்சத்திரங்கள் அதிக புகழ் பெற்றவர்களா என்ற விவாதம் அடிக்கடி எழுவதுண்டு. சினிமா பெரியதா? அல்லது கிரிக்கெட் பெரியதா என்ற விவாதமும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் எழுவதை நாம் பார்க்கலாம்.

இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஹன்சா என்ற அமைப்பு ஆன்லைன் வாயிலாக ஒரு சர்வே நடத்தி அந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் 36 நகரங்களை சேர்ந்த 4000 பேரிடம் இந்த அமைப்பு ஒரு ஆய்வினை நடத்தி இருக்கிறது. சினிமா மற்றும் கிரிக்கெட்டை சேர்ந்த மொத்தம் பத்து நட்சத்திரங்களின் பெயர்களைக் கொண்டு ஒரு பட்டியலை இந்த நான்காயிரம் பேரிடமும் வழங்கி இந்தியாவில் யார் புகழ் பெற்றவர்களாக இருக்கின்றனர் என்ற பட்டியலை தயாரித்துள்ளது.
இந்தியாவில் சினிமாவை விட மக்களுக்கு கிரிக்கெட் நட்சத்திரங்கள் தான் அதிகமாக மக்களிடம் பிரபலம் அடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது .இந்த 10 பேர் கொண்ட பட்டியலில் முதல் மூன்று இடங்களை கிரிக்கெட் நட்சத்திரங்கள் தான் பிடித்துள்ளனர். நான்காவது இடத்திலிருந்து தான் திரை நட்சத்திரங்களுக்கு கிடைத்திருக்கிறது.
முதலிடத்தில் விராட் கோலி இருக்கிறார், இரண்டாவது இடத்தில் மகேந்திர சிங் தோனியும் மூன்றாவது இடத்தில் சச்சின் டெண்டுல்கரும் பிடித்துள்ளனர். மகேந்திர சிங் தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார், சச்சின் டெண்டுல்கர் விளையாட்டிலேயே இல்லை இருந்தாலும் இவர்கள் தொடர்ந்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நட்சத்திரங்களாக மின்னுகின்றனர்.
இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பது பாலிவுட் நட்சத்திரமான ஷாருக்கான். ஐந்தாவது இடத்தில் அக்ஷய் குமார், ஆறாவது இடத்தில் அமிதாப்பச்சன் ஆகியோர் உள்ளனர். ஏழாவது இடத்தில் அல்லு அர்ஜுன் இருக்கிறார் .
எட்டாவது இடத்தில் சல்மான் கானும் ஒன்பதாவது இடத்தில் ரித்திக் ரோஷனும் இருக்கின்றனர். இந்த பட்டியலில் தீபிகா படுகோனே பத்தாவது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் புகழ்பெற்ற 10 நட்சத்திரங்களில் இடம் பிடித்திருக்கும் ஒரே பெண் தீபிகா படுகோனே தான்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications