உலகளவில் முன்னணியில் இருக்கும் ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் CHATGPT. இந்த நிறுவனம் முதன்முறையாக இந்தியாவில் ஒருவரை பணிக்கு எடுத்துள்ளது. ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் புயலை கிளப்பியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் CHATGPT தான்.
CHATGPT செயலி செயல்படத் தொடங்கியதில் இருந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் திறன்களை கண்டு மக்கள் வாயடைத்து போயுள்ளனர். கலந்துரையாடல் அடிப்படையிலான CHATGPTஐ ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகம் செய்ததை அடுத்து அதற்கு போட்டியாக கூகுள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஜெனரேட்டிவ் ஏஐ செயலிகளை அறிமுகம் செய்தன.

ஆனால் அவற்றால் CHATGPTக்கு இணையாக போட்டியிட முடியவில்லை. தற்போது ஓபன் ஏஐ நிறுவனம் முதன்முறையாக இந்தியாவில் அதன் ஊழியர் ஒருவரை நியமனம் செய்திருப்பது ப்ளூம்பர்க் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிய வந்துள்ளது.
பிரக்யா மிஸ்ரா, 39 வயதான இவர் ட்ரூ காலர் மற்றும் மெட்டா ஆகிய நிறுவனங்களில் பணி அனுபவம் பெற்றவர். அவர் ஓபன் ஏஐ நிறுவனத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையிலான தகவல் தொடர்புகளுக்கு ஒரு பாலமாக செயல்படுவார் என தெரிகிறது.
இந்த மாத இறுதியில் அவர் பணியை தொடங்குவார் என சொல்லப்படுகிறது. இந்தியாவில் விரைவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான ஒழுங்குமுறைகள் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கு முன்பு ஓபன் ஏஐ தலைமை செயல் அதிகாரி என சாம் ஆல்ட்மென் இந்தியாவிற்கு வருகை தந்திருந்தபோது அரசு சேவைகளையும் செயற்கை நுண்ணறிவுகளையும் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தி இருந்தார்.
குறிப்பாக சுகாதாரத்துறையில் செயற்கை நுண்ணறிவையும், சேவைகளையும் ஒருங்கிணைக்க வேண்டியது மிக மிக அவசியம் என அவர் கூறியிருந்தார். எனவே ஓபன் ஏஐ நிறுவனம் தங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அரசு சேவைகளோடு இணைப்பதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளதாகவும், அதற்காகவே ஒரு ஊழியரை இந்தியாவில் நியமனம் செய்துள்ளதாகவும் தெரிகிறது.
ஓபன் ஏஐ நிறுவனம் நியமித்துள்ள பிரக்யா மிஸ்ரா இதற்கு முன்பு ட்ரூ காலர் நிறுவனத்தில் அரசு துறைகளுடன் இணைந்து செயலாற்றுவது, முதலீட்டாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களோடு இணைந்து செயல்படும் துறைக்கு தலைமை வகித்து வந்தார்.
அதற்கு முன்பாக மெட்டா நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். அப்போது வாட்ஸ் அப்பில் பரவும் போலி செய்திகளை தடுப்பதற்கான பணிகளை முன்னெடுத்தவர். டெல்லி பல்கலைகழகம், சர்வதேச மேலாண்மை நிறுவனம், லண்டன் பொருளாதார பள்ளி ஆகியவற்றில் மேற்படிப்பை முடித்தவர் பிரக்யா மிஸ்ரா. மிகச்சிறந்த கோஃல்ப் வீரரான இவர், 1998 முதல் 2007 வரை சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார்.
story written by: Devika
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications