டி-மார்ட் சங்கிலியின் நிறுவனர் ராதாகிஷன் தமனியின் விடாப்பிடியான உழைப்பு, அர்ப்பணிப்போடான தொழில்முனைவு அந்த நிறுவனத்தை உச்சாணிக் கொம்புக்குக் கொண்டு சென்றது.
1992இல் நாட்டையே உலுக்கிய ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை மோசடிக்கு நடுவே பங்குச்சந்தையில் பெரும் சாதனையாளராக ராதாகிஷன் தமனி விளங்கினார்.

2000இல் ராதாகிஷன் தமனி டி-மார்ட்டை தொடங்கி இந்திய தொழில்சந்தையில் புதிய சகாப்தத்தை உருவாக்கினார். ஹைப்பர் மார்க்கெட் செக்டாரில் புதிய வளர்ச்சியை உருவாக்கினார். வாடிக்கையாளர்களை மையமாக வைத்து தொடங்கப்பட்ட இந்த சங்கிலி பெரும் வெற்றியைப் பெற்றது.
தமனியின் தலைமையின்கீழ் டி-மார்ட்டின் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்க்கெட் இந்திய ரீடைல் வணிகத்தில் புதிய தடத்தைப் படைத்தது.
அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லிமிடெட்டுக்கு சொந்தமான குறைந்த விலை சில்லறை விற்பனையாளர்களில் டிமார்ட் ஒன்றாகும். இது டி மார்ட், டி மார்ட் மினிமேக்ஸ், டி மார்ட் பிரீமியா, டி ஹோம்ஸ், டச் ஹ்ர்பர் உள்ளிட்ட பல்வேறு துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் அவென்யூ சூப்பர்மார்க்கெட் லிமிடெட்டுக்கு சொந்தமாகும்.
அவர் தனது சொந்த ஹைப்பர் மார்க்கெட் சங்கிலியான டிமார்ட்டைத் தொடங்க 2000 ஆம் ஆண்டில் பங்குச் சந்தையை விட்டு வெளியேறினார், 2002 இல் போவாயில் முதல் கடையை நிறுவினார். 2010 ஆம் ஆண்டில் சங்கிலி 25 கடைகளைக் கொண்டிருந்தது, அதன் பிறகு நிறுவனம் வேகமாக வளர்ந்து 2017 இல் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. 2020 இல், 16.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் நான்காவது பணக்கார இந்தியராக ராதாகிஷன் ஆனார்.
ஐடிஎப்சியின் டாப் 200 சுயதொழில் முனைவோர் பட்டியலில் அவென்யூ சூப்பர்மார்க்கெட் முதலிடத்தைப் பிடித்தது. அதன் சந்தை மதிப்பு ரூ.2,33,188 கோடி ஆகும்.
அவரது சொந்த வெற்றி தவிர தமனியின் செல்வாக்கு புதிய தலைமுறை தொழில்முனைவோரான ஜிரோதா, பேடீஎம், சோமாட்டோ, பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களுக்கு உத்வேகமாக இருந்தது. நாட்டின் வளர்ச்சிக்கு பெருமளவு பங்களிப்பை தந்தது.
இந்தியா முழுவதும் உள்ள தொழில்முனைவோருக்கு அவர் ஊக்கமளித்தார்.
ஸ்டாக் மார்க்கெட்டின் பிக் புல் எனக் கூறப்பட்ட ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அளித்த பேட்டி ஒன்றில் எனக்கு ராதாகிருஷ்ணனின் புத்திசாலித்தனம் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். எனக்கு தெரிந்தவரையில் அவர் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய முதலீட்டாளர்களில் ஒருவர்.
அவர் பெரிய ஆய்வுகளில் எல்லாம் ஈடுபடவில்லை. எல்லாமே அவரது பரந்த சிந்தனையின் மூலம் அவருக்கு வாய்த்தது. எனக்கு 100 வணிக உதத்திகள் தெரியும் என்றால் அதில் 60 உத்திகள் ராதாகிருஷ்ணனிடமிருந்து கற்றுக் கொண்டதாக இருக்கும் என்றார்.
சந்ததையில் ராதாகிருஷ்ணனின் மதிப்பு ரூ.1.44 கோடி என்ற நிலையில் அவரது சாதனையை யாராலும் மறுக்க முடியாது. அவரது சாதுர்யமான முதலீடுகள் அவரை பங்குச்சந்தையில் ஒரு முன்னோடியாக ஆக்கியுள்ளது. 2021இல் மும்பை மலபார் ஹில்ஸ் பகுதியில் அவர் வாங்கிய ரூ.1000 கோடி வீடு அவரை மீடியாவில் பேசவைத்தது.
Story written by: I.jayachandran
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications