இதுவரை எங்கும் வெளியில் தெரியாதவராக இருந்துவரும் ராதிகா மெர்ச்சன்டின் சகோதரி அஞ்சலி மெர்ச்சன்ட் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். ஆனந்த் அம்பானியை திருமணம் செய்து கொண்ட ராதிகா மெர்ச்சன்ட்டின் அக்காதான் அஞ்சலி மெர்ச்சன்ட். பிரபல தொழிலதிபர் வீரென் மெர்ச்சன்ட்டின் முதல் மகள்.
வீரென் மெர்ச்சன்ட் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ ஆவார். என்கோர் ஹெல்த்கேர் நிறுவனம் ஒரு உலகளாவிய பிரபலமான பார்மாசூட்டிகல் கம்பெனியாகும். என்கோர் ஹெல்த்கேரில் ராதிகாவும், அஞ்சலியும் டைரக்டர்களாக உள்ளனர்.

என்கோர் ஹெல்த்கேர் பார்மாசூட்டிகல் லிமிடெட் நிறுவனத்தில் அஞ்சலியின் கேரியர் தொடங்கியது. கம்பெனியில் அவர் பிசினஸ் டெவலப்மென்ட் பொதுமேலாளராக சேர்ந்தார். பின்னர் அவர் மார்க்கெடிங் மற்றும் கிளையன்ட் அவுட்ரீச் எக்ஸிகியூடிவ் மேனேஜராக ஆனார்.
2021இல் அவர் கம்பெனியின் போர்டில் சேர்க்கப்பட்டார். நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தில் அஞ்சலி கவனம் செலுத்தி வருகிறார்.
என்கோர் ஹெல்த்கேர் பார்மாசூடிகல் லிமிடெட் தவிர அஞ்சலி தனிப்பட்ட முறையிலும் தொழில் செய்து வருகிறார்.
அவர் மைலூன் மெட்டல்ஸ் இணை நிறுவனராகவும் டிரைபிக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் உள்ளார். டிரைபிக்ஸ் கம்பெனி ஒரு ஹேர் ஸ்டைலிங் மற்றும் டிரீட்மென்ட் கிளப்புகளின் செயின் ஆகும். இதில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான ஆலியா பட், தபூ உள்ளிட்டோர் வாடிக்கையாளராக உள்ளனர்.
மும்பையின் கதீட்ரல் அண்டு ஜான் கன்னோன் ஸ்கூல் மற்றும் இகோலி மாண்டியாலே வேர்ல்டு ஸ்கூலிலும் அவர் பள்ளிப் படிப்பை முடித்தார். மேற்படிப்பை அவர் வெளிநாடுகளில் படித்தார். தொழில்முனைவில் அவர் டிகிரி படிப்பை அமெரிக்காவின் மசாசுசேட்ஸ் பாப்சன் கல்லூரியில் படித்தார்.லண்டன் பிசினஸ் ஸ்கூலில் அவர் எம்பிஏ பட்டம் பெற்றார்.
இது தவிர சீ புரோகிராமில் அவர் படித்த டிரான்பார்மேடிவ் செமஸ்டர் கல்வி மூலம் 12 நாடுகளின் கலாசாரங்களை அறிந்து கொண்டதோடு உலக பொருளாதாரம், மொழிகள், சர்வதேச கல்வியை அறிந்து கொண்டார்.
2020இல் தொழிலதிபர் அமான் மஜிதியாவை திருமணம் செய்து கொண்டார். என்கோர் ஹெல்த் பார்மாசூடிகல் லிமிடெட்டில் அமான் மஜிதியா அசோசியேட் டைரக்டராக உள்ளார்.
அஞ்சலியின் சொத்து மதிப்பு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும் அவரது என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தில் சுமார் ரூ.2000 கோடி அவருக்குச் சொந்தமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications