முகேஷ் அம்பானியும், அவரது மனைவி நீதா அம்பானியும் இளைய மகள் ஆனந்த் அம்பானி வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை அளிக்க வேண்டும் என்பதற்காகவும், அவருடைய தந்தை திருபாய் அம்பானியின் வாழ்க்கைக்கு புதிய பரிமாணம் கொடுக்கும் வகையில் அவர் பிறந்த குஜராத்தின் ஜாம்நகரை 3 நாள் ஜாம் ஜாம் என மாற்றியுள்ளார்.
ஜாம்நகர் என்றால் ரிலையன்ஸ், ரிலையன்ஸ் என்றால் ஜாம்நகர் என்று இருந்த நிலை மாறி 3 நாளில் ஒட்டுமொத்த உலகின் பார்வையை ஜாம்நகருக்கு திருப்பியுள்ளார் முகேஷ் அம்பானி. விமான நிலையம் முதல் உணவு வரையில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஆடம்பரம்.

இந்த 3 நாள் விழாவில் ஆனந்த் அம்பானியை கரம் பிடிக்கும் ராதிகா மெர்ச்சன்ட் உலகளவில் பிரபலமானார். அம்பானி வீட்டு மருமகள் என்பதைத் தாண்டி யார் இந்த ராதிகா..?
இந்திய பணக்காரர்களில் ஒருவரும், தொழிலதிபருமான என்கோர் ஹெல்த்கேர் சிஇஓ வீரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள் தான் ராதிகா மெர்ச்சன்ட். 1994 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி பிறந்தார் ராதிகா

வீரேன் மெர்ச்சன்ட், ஷய்லா மெர்ச்சன்ட்டின் மூத்த மகள் ராதிகா மெர்ச்சன்ட். ராதிகா தனது பள்ளிப்படிப்பை கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளி மற்றும் மும்பையில் உள்ள எகோல் மொண்டியல் வேர்ல்ட் பள்ளியில் முடித்தார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.
படிப்பை முடித்த பின்பு, பிற பணக்கார தொழிலதிபர்கள் குடும்பத்தைப் போலவே வீரேன் மெர்ச்சன்ட்-ம் தனது மகளை வர்த்தகத் துறையில் அனுபவம் பெற வேண்டும் என்பதற்காக மருந்து நிறுவனமான என்கோர் ஹெல்த்கேரின் நிர்வாகக் குழுவில் இயக்குநராக நியமித்தார்.

ஆனால் இதற்கு முன்பு ராதிகா மெர்ச்சன்ட் 2017 இல், தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு, அவர் Isprava Groupல் பணியில் சேர்ந்தார், இது ஒரு ஆடம்பர ஹாலிடே ஹோம் டெவலப்பர் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் நாதிர் கோத்ரேஜ், ஆனந்த் பிரமல் மற்றும் டாபர் இந்தியாவின் பர்மன் குடும்பம் ஆகியோர் முதலீடு செய்துள்ளனர்.
ராதிகா மெர்ச்சன்ட் தனது பள்ளிப் படிப்பை மும்பையின் புகழ்பெற்ற கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளி மற்றும் எகோல் மொண்டியல் வேர்ல்ட் பள்ளியில் முடித்தார். மேலும் ராதிகா மெர்ச்சன்ட் பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார், இவர் குரு பாவனா தாக்கரின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெற்றுள்ளார்.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் ராதிகா மெர்ச்சன்ட்டின் அரங்கேற்றம் விழாவை அம்பானி குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். ராதிகா மெர்ச்சன்ட் சுமார் 8 ஆண்டுகளாகப் பரதநாட்டியம் கற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு 3 நாள் நிகழ்ச்சியை போலவே அமீர் கான், கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான், சகாரிகா காட்கே, ரன்வீர் சிங் மற்றும் சல்மான் கான் எனப் பல முக்கிய நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
ராதிகா மெர்ச்சன்ட் பரதநாட்டியம் மட்டுமின்றி, மலையேற்றம், நீச்சல் போன்றவற்றிலும் அவருக்கு ஆர்வம் உண்டு. வீரேன் மெர்ச்சன்ட்டின் நிகர மதிப்பு சுமார் ரூ.755 கோடி. ஆனால் அவரின் மகளான ராதிகா மெர்ச்சன்ட்டின் நிகர மதிப்பு சுமார் ரூ.10 கோடி மட்டுமே.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியை முடித்தார் மற்றும் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கிரீன் எனர்ஜி வர்த்தகத்தை வழிநடத்துகிறார்.
மேலும் அவர் ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் மற்றும் ஜியோ பிளாட்ஃபார்ம்கள் போன்ற இணை நிறுவனங்களின் பல துணை நிறுவனங்களில் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications