இந்தியாவில் நாம் அருந்தக்கூடிய பெப்சி, 7அப், மிரிண்டா போன்ற பானங்கள் மற்றும் கேஎஃப்சி, பீட்சா அட் உள்ளிட்ட கடைகளையும் ஒரே ஒரு நிறுவனம் தான் நிர்வாகம் செய்து வருகிறது. இதற்கு பின்னணியில் இருப்பவர் ரவி ஜெய்பூரியா.
மார்வாரி குடும்பத்தை சேர்ந்த ரவி ஜெய்பூரியாவுக்கு சிறு வயது முதலே தொழிலில் ஆர்வம். அமெரிக்கா சென்று தொழில் மேலாண்மை பிரிவில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் 1985ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய இவர் தொழில் உலகில் கால்பதித்தார். இவருடைய நோக்கம் இந்தியாவில் உணவு மற்றும் பானங்கள் பிரிவை கைப்பற்ற வேண்டும் என்பது தான். அப்போது உணவு மற்றும் பானங்கள் பிரிவை சேர்ந்த பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டியதை அறிந்தார்.

இதற்காகவே வருண் பீவரேஜஸ், தேவயானி இன்டர்நேஷனல் ஆகிய இரண்டு நிறுவனங்களை உருவாக்கினார். இதன் மூலம் இந்திய தொழில்துறையில் தவிர்க்க முடியாத நபராக உருவெடுத்து இருப்பவர்தான் ரவி ஜெயபூரியா. ஆர் ஜே கார்ப்ரேஷன் என்ற பெயரில் மிகப்பெரிய தொழில் குழுமத்தை இந்தியாவில் நிறுவினார். அதன் கீழ் வருண் பீவரேஜஸ் என்ற துணை நிறுவனத்தை உருவாக்கி பெப்சிகோ நிறுவனத்தின் அனைத்து பொருட்களையும் இந்தியாவில் விற்பனை செய்ய தொடங்கினார்.
அதேபோல தேவயானி இன்டர்நேஷனல் என்ற பெயரில் இவர் நடத்திவரக்கூடிய நிறுவனம்தான் இந்தியாவில் கேஎஃப்சி, பீட்சா ஹட், கோஸ்ட் காபி உள்ளிட்ட கடைகளை நடத்தி வருகிறது. எனவேதான் ரவி ஜெயபூரியாவை தொழில்துறை சார்ந்த அனைவரும் இந்தியாவின் கோலா கிங் என அழைக்கின்றனர். கிட்டதட்ட 30 ஆண்டுகளாக தொழில் துறையில் தவிர்க்க முடியாத ஒரு நபராக திகழ்ந்து வருகிறார். குறிப்பாக உணவு மற்றும் பானங்கள் துறையில் இவருடைய நிறுவனம் தான் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
தெற்காசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவில் உணவு மற்றும் பானங்கள் , பால் சம்பந்தப்பட்ட தொழில்களை தொடங்கி பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளார். 1991 ஆம் ஆண்டு தேவயானி இன்டர்நேஷனல் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய உணவக நிறுவனமாக இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் இந்தியா, தாய்லாந்து, நேபாளம் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் 1900 உணவகங்களை நடத்தி வருகிறது.
ஆர்ஜி கார்ப்பரேஷன் கார்ப்பரேட் நிறுவனத்தின் கீழ் 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் வருண் பீவரேஜஸ். இந்தியாவில் பெப்சிகோ நிறுவனத்திற்கு சொந்தமான பெப்சி, 7அப், மிரிண்டா, டிராபிகானா பானங்களையும் மற்றும் அக்வாஃபீனா குடிநீர் தொழிலையும் வருண் பீவரேஜஸ் நிறுவனம் தான் நிர்வகித்து வருகிறது. இந்த நிறுவனம் இந்தியா மட்டும் இல்லாமல் நேபாளம், இலங்கை நாடுகளிலும் பெப்சிகோ நிறுவன பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
தற்போது 14.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பு கொண்ட நபராக இருக்கிறார். இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் இவர் 14 ஆவது இடத்தில் இருக்கிறார். தொழில்துறை சம்பந்தப்பட்ட பல்வேறு விருதுகளை வாங்கி இருக்கிறார். இவருடைய இரண்டு நிறுவனங்களின் மொத்த மதிப்பு 1.38 லட்சம் கோடி ரூபாய் ஆகும். தற்போது மகன் வருண் மற்றும் மகள் தேவயானியையும் தொழில் உலகில் பிரகாசிக்க வைத்திருக்கிறார். வெளிநாட்டு நிறுவனங்களையும் இந்தியர்களின் உணவு தேவையையும் இணைக்கும் பாலமாக செயல்பட்டு மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications