இந்திய ஐடி சேவை துறையில் அதிகப்படியான தடுமாற்றங்களை எதிர்கொண்டு வரும் விப்ரோ நிறுவனத்தில் தொடர்ந்து ஐடி ஊழியர்கள் வெளியேறி வரும் வேளையில் தற்போது சிஇஓ-வே வெளியேறியுள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
தியரி டெலாபோர்ட் தனது சிஇஓ பதவியை ராஜினாமா செய்துள்ள வேளையில், புதிய சிஇஓ மற்றும் எம்டி-யாக நியமிக்கப்பட்ட ஸ்ரீனி பாலியா யார் என்ற கேள்வி தான், ஐடி ஊழியர்கள் மத்தியில் முக்கியமானதாக உள்ளது.

1992 இல் விப்ரோவில் சேர்ந்து, விப்ரோவின் நுகர்வோர் வணிகப் பிரிவின் தலைவர் மற்றும் பிசினஸ் அப்ளிகேஷன் சர்வீசஸின் உலகளாவிய தலைவர் உட்படப் பல தலைமைப் பதவிகளை வகித்துள்ளார். தற்போது விப்ரோ நிறுவனத்தின் அமெரிக்காஸ் 1 வர்த்தக பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார்.
ஸ்ரீனி பாலியா தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு தனது விரிவான நிறுவன மற்றும் தொழில் அறிவையும், முக்கியமான தொழில்நுட்ப மாற்றங்களின் மூலம் தனது தலைமைத்துவத்தின் கீழ் செய்த சாதனைகளையும் கொண்டு வருகிறார்.
ஸ்ரீனி பாலியா தற்போது அமெரிக்காஸ்-1 பிரிவின் கன்சல்டிங் மற்றும் சேவைகளின் தலைவராக இருப்பது மட்டும் அல்லாமல், விப்ரோவில் 32 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
"எங்கள் நிறுவனம் மற்றும் தொழில்துறைக்கு இந்த முக்கியமான தருணத்தில் விப்ரோவை வழிநடத்த ஸ்ரீனி ஒரு சிறந்த தலைவர். அவரது வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை, வளர்ச்சி மனப்பான்மை, வலுவான செயல்படுத்தும் கவனம் மற்றும் விப்ரோவின் மதிப்புகள் மீதான அவரது அர்ப்பணிப்பு, வளர்ச்சி மற்றும் லாபத்தின் அடுத்த அத்தியாயத்தில் நுழையும்போது ஸ்ரீனி பாலியா சரியான பொருத்தமாக உள்ளார்" என்று விப்ரோ தலைவர் ரிஷாத் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸில் பொறியியலில் இளங்கலைப் பட்டம் மற்றும் மேலாண்மைப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்ற பாலியா, நியூ ஜெர்சியில் இருந்து ரிஷாத் பிரேம்ஜி-க்கு ரிப்போர்ட் செய்வார்.
ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலின் லீடிங் குளோபல் பிசினஸ் எக்சிகியூட்டிவ் புரோகிராம் மற்றும் மெக்கில் எக்சிகியூட்டிவ் இன்ஸ்டிடியூட்டில் அட்வான்ஸ்டு லீடர்ஷிப் ப்ரோகிராம்-ல் பட்டம் பெற்றுள்ளார் என்று விப்ரோ நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications