உலகெங்கிலும் நில உரிமை என்பது அதிகாரம் மற்றும் கௌரவத்தின் அடையாளமாக இன்றளவும் பார்க்கப்படுகிறது . ஒரு மன்னரின் பலம் அவர் எவ்வளவு பெரிய நிலத்திற்கு உரிமையாளராக இருக்கிறார் என்பதை கொண்டு தான் முன்பெல்லாம் கணக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலத்தை கைப்பற்றுவதற்காக தான் உலகம் முழுவதும் பல்வேறு போர்கள் நடந்திருக்கின்றன. நம் இந்தியாவிலேயே நிலங்களை கைப்பற்றுவதற்கு என பல்வேறு போர்கள் நடந்திருக்கின்றன.

ஆனால் தற்போது இந்தியாவின் யார் அதிக நிலம் வைத்திருக்கிறார்கள் அவற்றின் மதிப்பு என்னென்ன என்பதை நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் அதிக நிலத்தை வைத்திருப்பது மத்திய அரசுதான். அரசாங்க நில தகவல் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களின்படி, இந்தியாவில் மத்திய அரசுக்கு சொந்தமாக சுமார் 15,531 சதுர கிலோ மீட்டர் நிலம் இருக்கிறது.
இதனை 116 பொதுத்துறை நிறுவனங்களும் 51 அமைச்சகங்களும் பயன்படுத்தி வருகின்றன. இதனை நாம் ரயில்வேதுறை, எரிசக்தி துறை, ராணுவம் என பல துறைகள் பிரித்தி பயன்படுத்தி வருகின்றன.
இந்தியாவில் மத்திய அரசுக்கு அடுத்ததாக அதிகமான சொத்துக்களை வைத்திருப்பது யார் தெரியுமா? கத்தோலிக்க திருச்சபை. ஆம் கத்தோலிக்க திருச்சபை தான் இந்தியாவில் அரசுக்கு அடுத்த இடத்தில் அதிக நிலத்தை வைத்திருக்கின்ற ஒரு அமைப்பாக இருக்கிறது.
இந்தியா முழுவதும் கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமாக கிட்டத்தட்ட 7 கோடி ஹெக்டேர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் தேவாலயங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் என ஏராளமான கட்டிடங்கள் உள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பீடு செய்யப்படுகிறது.
இந்தியாவில், இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை மூலமாக கத்தோலிக்க திருச்சபை நிர்வாகம் செய்யப்படுகிறது. இந்த தரவுகளின் படி இந்திய கத்தோலிக்க திருச்சபையின் கீழ் இந்தியாவில் 2457 மருந்தகங்கள் ,240 மருத்துவ மற்றும் நர்சிங் கல்லூரிகள் ,28 பொதுக்கல்லூரிகள், 5 பொறியியல் கல்லூரிகள், 3,765 மேல்நிலைப் பள்ளிகள் , 7,319 தொடக்கப்பள்ளிகள் மற்றும் 1,387 நர்சரி பள்ளிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
1927 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்து ஆங்கிலேயர்கள் இந்திய தேவாலயங்கள் சட்டம் என்ற சட்டத்தின் அடிப்படையில் நிலங்களை கையகப்படுத்த தொடங்கினர் .இந்தியா முழுவதும் கிறிஸ்தவ மதத்தை பரப்பும் நோக்கத்துடன் தான் இந்த சட்டம் இயற்றப்பட்டது.
இதனால் இந்தியாவின் குக் கிராமங்களில் கூட தேடி தேடி கிறிஸ்தவ மதத்தலங்கள் அமைக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியாவில் இருந்த கத்தோலிக்க திருச்சபைக்கு தேவையான நிலத்தின் பெரும் பகுதியை பிரிட்டிஷ அரசிடம் இருந்து பெற்றது கத்தோலிக்க திருச்சபை.
Story Written by: Devika
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications