டிவிட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க் நிர்வாகத்திலும், ஊழியர்கள் மத்தியில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருகிறார்.
குறிப்பாக ஊழியர்களின் பணி திறன் மற்றும் நிர்வாக முடிவுகளை எடுப்பதில் இருக்கும் பிரச்சனைகளைச் சரி செய்வதில் டெஸ்லா மேனேஜர்கள் உடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
டிவிட்டர் நிறுவனத்தில் பலர் மாற்றத்தை ஏற்றுக்கொண்டு தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்கள், அதேபோல் பலர் மாற்றத்தையும், நெருக்கடியையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்த பராக் அகர்வால் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், புதிய சிஇஓ யார் என்ற கேள்விக்குப் பதில் அளித்துள்ளார் எலான் மஸ்க்
டிவிட்டர்
டிவிட்டர் நிறுவனத்தில் இருந்து தனக்கு வந்த ஈமெயிலை ஸ்கிரீனஷாட் எடுத்து பதிவிட்ட எலான் மஸ்க், இதில் டிவிட்டர் நிறுவனத்தில் இருக்கும் அனைத்து மேனேஜர்களும் அடுத்த 30 நாட்களுக்கு ஊழியர்களை எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும், எப்படி வர்த்தகத்திலும், வேலையிலும் தாக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதை M101 என்ற கட்டாயமாக அனைவரும் பயில வேண்டிய கோர்ஸ், அடுத்த 30 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
எலான் மஸ்க்
இந்த ஈமெயில் முன்னாள் நிர்வாகக் குழுவின் கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட கோர்ஸ் ஈமெயில் இதைக் கலாய்த்த எலான் மஸ்க் Management 201 கோர்ஸ் (தனது நிர்வாகத்தின் கீழ் உருவாக்கப்படும் கோர்ஸ்) கட்டாயம் உற்சாகமூட்டுவதாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
Chief Twit பதவி
இந்த நிலையில் @WholeMarsBlog என்ற டிவிட்டர்வாசி, எலான் அடுத்தச் சில காலத்திற்கு நீங்கள் தான் சிஇஓ-வாக இருக்கப்போகிறீர்களா..? என்று கேட்டார். இதற்கு எலான் மஸ்க் என்னுடைய பதவி தற்போது Chief Twit, இது டிவிட்டர் கணக்கில் பயோ-வில் கூட உள்ளது, ஆனால் யார் சிஇஓ என்பதில் எவ்விதமான ஐடியாவும் இல்லை எனத் தெரிவித்தார்.
சிஇஓ லிஸ்ட்
ஆனால் டிவிட்டரை வாங்கும் முன் புதிய டிவிட்டர் சிஇஓ-வாக நியமிக்க எலான் மஸ்க் சிலரை தேர்வு செய்து பட்டியலிட்டு உள்ளதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழ்நிலையில் டிவிட்டரின் சிஇஓ பதவி காலியாக-வே இருக்கும், டிவிட்டர் நிர்வாகக் குழுவின் மீது நம்பிக்கை வரும் வரையில் எலான் மஸ்க் நேரடியாக நிர்வாகம் செய்வார் எனத் தெரிகிறது.
டிவிட்டரில் மோசமான விஷயம்
அதைத் தொடர்ந்து அடுத்த டிவீட்டில் @spideycyp_155 என்பவர் எலான் மஸ்க் தற்போது டிவிட்டரில் மோசமாக இருக்கும் விஷயம் எது என நீங்க நினைக்கிறிங்க எனக் கேட்டார். அதற்கு எலான் மஸ்க் சற்றும் யோசிக்காமல் ஒருவர் செய்யும் கோடிங்-ஐ 10 பேர் நிர்வாகம் செய்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
10 பேர்
இதற்கு இன்னோருவர் கட்டுமான பணியில் ஒருவர் பணியாற்றி வருவதைச் சுற்றி நின்று 10க்கும் அதிகமானோர் பார்ப்பதை போன்ற புகைப்படத்தைப் பதிவிட்டு இது போலவா எனக் கேட்டார். இதற்கு எலான் மஸ் கிட்டத்தட்ட இதேபோல் தான் என்றும் பதில் அளித்துள்ளார்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications