டிசிஎஸ் நிறுவனத்தின் நாசிக் அலுவலகத்தில் இந்து பெண்கள் டார்கெட் செய்யப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பூதாகரமாக வெடித்திருக்கிறது. இந்த சூழலில் பெண் ஒருவர் தான் இந்த ஒட்டுமொத்த சம்பவத்திற்கும் மாஸ்டர் மைண்டாக செயல்பட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் செயல்பட்டு வரக்கூடிய டிசிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான bpo அலுவலகத்தில் குறிப்பிட்ட சில ஆண் ஊழியர்கள் பெண் ஊழியர்கள் மீது பாலியல் தொந்தரவு செய்வதாகவும், கட்டாயம் மதமாற்றம் செய்வதாகவும், மூளை செலவு செய்து அவர்களை கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. தொடர்ச்சியாக புகார்கள் வந்ததை அடுத்து காவல்துறையினர் மஃப்டியில் இந்த அலுவலகத்திற்கு சென்று 40 நாட்கள் வேலை செய்திருக்கின்றனர்.

உணவக, மீட்டிங் ரூம் உட்பட அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கண்காணிப்பு நடத்திய போது தான் ஒரு குறிப்பிட்ட சில ஊழியர்கள் குழுவாக செயல்பட்டு நிதி ரீதியான சிக்கல் இருப்பவர்கள் வாழ்க்கை ரீதியான சிக்கல் இருப்பவர்கள் என பெண் ஊழியர்களின் தனிப்பட்ட விவரங்களை தெரிந்து கொண்டு அவர்களை டார்ச்சர் செய்து இஸ்லாமிற்கு மாறினால் உன்னுடைய பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என கூறியும் அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வீடியோ எடுத்து வைத்துக் கொண்டும் மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததும் தெரிய வந்திருக்கிறது.
நாட்டின் முன்னணி நிறுவனத்தினால் இப்படி? என அனைவரும் அதிர்ச்சி அடைந்து இருக்கக்கூடிய சூழலில் இந்த ஒட்டுமொத்த நிகழ்வுக்கும் பெண் ஒருவர் தான் மூளையாக செயல்பட்டு இருக்கிறார் என்பதுதான் இன்னும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி. அவரை லேடி கேப்டன் என அழைக்கிறார்கள். அவர்தான் இதே அலுவலகத்தில் ஹெச்ஆர் மேலாளராக வேலை செய்து வந்த நிதான கான். இவர் ஹெச்.ஆர் வேலையில் இருந்ததால் தனக்கு சாதகமாக செயல்படக்கூடிய ஆண்களை அலுவலகத்திற்குள் வேலைக்கு கொண்டுவர முடிந்திருக்கிறது. அதேபோல எந்தெந்த பெண் ஊழியர்களுக்கு என்ன மாதிரியான பிரச்சினைகள் யாரை எளிதாக இலக்காக்கலாம் என்பதெல்லாம் அவருக்கு தெரிந்திருக்கிறது. இதனை பயன்படுத்தி அவர் இந்த ஒட்டுமொத்த நிகழ்வுக்கும் தலைவியாக செயல்பட்டு இருக்கிறார்.

அவரை எட்டாவது குற்றவாளியாக காவல் துறையினர் சேர்த்து இருக்கின்றனர். தற்போது இவர் தலைமறைவாக இருக்கிறார் முதலில் இவர் அலுவலகத்தில் வேலை செய்யக்கூடிய பெண்களிடம் நட்பு ரீதியாக பழகுவாராம். அதன் பிறகு அவர்களின் நம்பிக்கையை வளர்த்துக் கொள்வாராம். அதன் மூலம் அவர்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை இஸ்லாம் மத சடங்குகளுக்குள் அழைத்து வருவாராம்.
என்னுடன் சேர்ந்து நமாஸ் செய், என்னை போல நீயும் ஒரு நாள் ஹிஜாப் அணிந்து பார் என கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை மூளைச் செலவு செய்வாராம். அந்த குறிப்பிட்ட பெண் ஊழியருக்கு தான் மூளைச்சலவை செய்யப்படுகிறோம் மதமாற்றம் செய்யப்படுகிறோம் என்பதையே உணர முடியாத வகையில் மிகச்சரியாக திட்டமிட்டு படிப்படியாக இதனை அவர் செய்து வந்திருக்கிறார். நட்பால் முடியாததை ஆண் ஊழியர்களை கொண்டு பாலியல் துன்புறுத்தல் மூலம் சாதிக்க முற்பட்டுள்ளார்.
மும்பையின் பீவண்டி நகரை சேர்ந்த நிதா கான் ஜனவரி மாதமே பணியை விட்டு சென்று விட்டதாகவும் அவர் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரை கண்டுபிடிப்பதற்காகவே சிறப்பு படையினர் அமைக்கப்பட்டுள்ளனர். நிதா கானுக்கு இவ்வாறு மத மாற்றம் செய்ய பணம் கொடுக்கப்பட்டதா, வெளிநாட்டு தொடர்பு உள்ளதா என விசாரிக்கப்பட்டு வருகிறது. இவரை கைது செய்து விசாரிக்கும் போது பல தகவல்கள் வெளிவருவது உண்மை.


Click it and Unblock the Notifications