டெல்லியின் புகழ்பெற்ற இடங்களில் கன்னாட் பிளேஸ் முக்கியமான ஒன்று. இதனை சிபி என்றும் அழைக்கின்றனர். டெல்லியிலேயே பிறந்த வளர்ந்தவர்களுக்கு ஆகட்டும் அல்லது வெளியூர்களில் இருந்து டெல்லி வந்து செல்பவர்கள் ஆகட்டும் கன்னாட் பிளேஸில் ஒவ்வொருவருக்கும் ஒரு நினைவு இருக்கும்.
இந்த கன்னாட் பிளேஸுக்கு யார் உரிமையாளர் என்பதை பற்றி ஆய்வு செய்யும் போது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.

டெல்லியின் ஷாப்பிங் பேரடைஸ்: டெல்லியின் ஷாப்பிங் பேரடைஸ் எனப்படும் கன்னாட் பிளேஸில் கிடைக்காத பொருட்களே இல்லை. ஒரு நாள் முழுவதும் நாம் பொழுதை கழித்தால் கூட போர் அடிக்காது,வெளியூர்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் விசிட் அடிக்கும் ஓர் இடம், வியாபாரிகளுக்கோ இங்கு ஒரு கடை வைத்துவிட்டால் போதும் லைஃப் செட்டில்டு.
5 ஆண்டுகளில் கட்டி முடிப்பு: 1929ஆம் ஆண்டு இந்தியா பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்த போது டெல்லியில் கன்னாட் பிளேஸ் கட்டப்பட்டது. 5 ஆண்டுகளில் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றன.
பிரிட்டன் ராயல் குடும்பத்தை சேர்ந்த டியூக் ஆஃப் கன்னாட் அண்ட் ஸ்டார்த் ஏர்ன் (Duke of Connaught and Strathearn) பெயரை கொண்டு இந்த இடத்திற்கு கன்னாட் பிளேஸ் என பெயர் வைக்கப்பட்டது.
இந்த இடத்தை அமைப்பதற்கான ப்ளூபிரிண்டை தயாரித்தது பிரிட்டனை சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர் ராபர்ட் டார் ரஸல். இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற இடங்களின் கட்டடங்கள், ராயல் கிரஸெண்ட் மற்றும் தி ரோமன் கொலாசெம் ஆகியவற்றின் வடிவமைப்பை கொண்டு இதனை வடிவமைத்தார் ராபர்ட்.
சொற்ப ரூபாய்க்கு குத்தகை: இந்தியா சுதந்திரம் அடைந்த பின், கன்னாட் பிளேஸ் என்பது வியாபார மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கான பகுதியாக மாறியது. தற்போது உலகின் மிக முக்கிய ஷாப்பிங் ஹப்களில் ஒன்றாக உள்ளது.
இங்குள்ள கடைகளுக்கு எல்லாம் யார் உரிமையாளர் என்ற சந்தேகம் பலருக்கும் எழும். நாட்டின் தலைநகரின் முக்கியமான பகுதி லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பகுதியில் உள்ள சொத்து என்றால் கண்டிப்பாக இதன் மதிப்பு பல கோடிகளாக இருக்கும்.
இது தொடர்பான தேடுதலின் போது குவோரா இணைய பக்கத்தில் சில பதில் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அதாவது கன்னாட் பிளேஸிற்கு ஒரு உரிமையாளர் மட்டுமல்ல. பல உரிமையாளர்கள் கொண்ட ஒரு சொத்து இது.
சட்ட ரீதியாக பார்க்கப் போனால் இந்த இடத்தில் உண்மையான உரிமையாளர் இந்திய அரசு. ஆனால் சுதந்திர அளிப்பதற்கு முன்பு பிரிட்டிஷ் அரசு, இந்த இடத்தை பலருக்கும் வாடகைக்கு கொடுத்தது.
சில நூறு ரூபாய்களுக்கே இங்குள்ள கடைகள் மற்றும் கட்டடங்கள் வாடகை மற்றும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. ஒரு நபர் 50 கடைகள் வரை கூட குத்தகைக்கு எடுத்து கொண்டார்களாம். பின்னர் இவர்களே இதற்கு உரிமையாளர்களாகவும் மாறிப் போகினர்.
ஆண்டுக்கு 10% வாடகை உயர்வு: பழைய டெல்லி வாடகை சட்டத்தின் படி சுதந்திரத்திற்கு முன்னர் வாடகைக்கு விடப்பட்ட சொத்துகளுக்கு ஆண்டுக்கு 10 சதவிகிதம் வாடகையை உயர்த்தி கொள்ளலாம்.
உதாரணமாக 100 ரூபாய்க்கு கடை வாடகைக்கு எடுத்திருந்தால், அடுத்த ஆண்டில் வாடகை 110 ரூபாயாகி இருக்கும். இப்படி ஆண்டுக்கு 10 சதவிகிதம் வாடகை உயர்வு என்றால் தற்போது வரை உரிமையாளர்களுக்கு மிக சொற்ப தொகையே வாடகை வருமானமாக கிடைக்கிறது.
ஆனால் இங்கு கடை வைத்திருக்கும், ஸ்டார் பக்ஸ், பீட்சா ஹட் போன்றவை பல லட்சங்களில் வருமானம் ஈட்டுகின்றன. அப்படியெனில் கன்னாட் பிளேஸில் கடை வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தை விட அதன் உரிமையாளர்களுக்கு கிடைக்கும் வருமானம் மிக குறைவு தான்.
Story Written by : Devika
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications