தமிழக சட்டமன்ற தேர்தல் களமானது சூடுபிடித்துள்ள வேலையில், அனைவரின் பார்வையும் இது வரை உச்ச நட்சத்திரமான இருந்த விஜய் மீது தான் இருந்தது. ஆனால் தற்போது ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் ஒரு பெண்மணி. அவர் தான் லீமா ரோஸ் மார்ட்டின்.
இவர் தான் இன்றைய இன்றைய நிலையில் தமிழகத்தின் நம்பர் 1 கோடீஸ்வர வேட்பாளர். அதிமுக சார்பில் லால்குடி தொகுதியில் களமிறங்கியுள்ளார் லீமா. யார் இவர், இவரின் பின்னணி என்ன? இவரின் அரசியல் பின்புலம் என்ன? மற்ற அரசியல்வாதிகளையே மிரள வைத்துள்ள இவர் லட்சிய ஜனநாயக கட்சியில் இருந்தவர். தற்போது அதிமுகவில் இணைந்து ஏன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்? விரிவாக பார்ப்போம்.

அதிமுகவில் கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி முன்னிலையில் இணைந்த லீமாவுக்கு, மகளிர் அணி இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த சூழலில் தான் தற்போது ஒரே மாதத்தில் தான் சட்டமன்ற தேர்தலிலும் களமிறங்குகிறார். ஏற்கனவே லால்குடியில் முகாமிட்டு தனது அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக மக்களை ஈர்க்கும் வகையில் இலவச பொருட்களை வழங்கியதாக சர்ச்சையில் சிக்கியவர், எப்படி 1000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு, அப்படி இவர் என்ன செய்கிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த 2006, 2011, 2016, 2021ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று லால்குடி சட்டமன்ற தொகுதி திமுகவின் வசமே உள்ளது. இந்த நிலையில் தான் லால்குடி தொகுதியில் லீமாவை களமிறக்கியுள்ளது அதிமுக.
யார் இவர்?
லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மனைவி தான் லீமா ரோஸ். இவர் தான் தற்போது தமிழக சட்டமன்ற வேட்பாளர்களில் அதிக சொத்து மதிப்பு கொண்ட வேட்பாளர். அவர்கள் தாக்கல் செய்துள்ள தேர்தல் பிரமாண பத்திரத்தின் படி, அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு 5,000 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்பது தெரிய வந்துள்ளது.
அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் படி, லீமாவின் பெயரில் நகைகள் உள்ளிட்ட 139.62 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், நிலம் மற்றும் கட்டிடங்கள் உள்ளிட்ட 909.94 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளன. அவரது கணவர் சாண்டியாகோ மார்ட்டின் சொத்து மதிப்பு 3,262 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், 887.36 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளன. அவரின் மகன் ஜோஸ் டைசன் மார்ட்டின் பெயரில் 225.56 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், 439.21 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2024 - 25ம் நிதியாண்டில் லீமா ரோஸின் வருமானம் 9.82 கோடி ரூபாய் எனவும், சாண்டியாகோவின் வருமானம் 11.39 கோடி ரூபாயாகவும், அவருடைய மகள் ஜோஸின் வருமானம் 18.56 கோடி ரூபாய் ஆகும். லீமா ரோஸின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், புதுச்சேரியைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் லட்சிய ஜனநாயக கட்சி (LJK) என்ற அரசியல் கட்சியின் தலைவராக இருந்தவர். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தேர்தல் மேலாண்மை மற்றும் பிரச்சார பிரிவின் பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, லீமா ரோஸின் மருமகன் ஆவார்.


Click it and Unblock the Notifications