யார் இந்த ராஜீவ் ரஞ்சன்.. ரிசர்வ் வங்கியின் நியமனத்திற்கு காரணம் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியம் அதன் நாணயக் கொள்கை குழுவின் உறுப்பினராக ராஜீவ் ரஞ்சனை நியமனம் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது.

ரஞ்சன் பணவியல் கொள்கைக் குழுவின் முன்னாள் அதிகாரியான ஓய்வுபெற்ற மிருதுல் சாகருக்கு பிறகு ரஞ்சன் பதவியேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கி வாரியத்தின் 595வது கூட்டம் ரிசர்வ் வங்கித் தலைவர் சக்தி காந்த தாஸ் தலைமையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது.

யார் யார்?

யார் யார்?

இந்த கூட்டத்தில் சதீஷ் மராத்தே, எஸ் குருமூர்த்தி, ரேவதி ஐயர் மற்றும் சச்சின் சதுர்வேதி உள்ளிட்டோரை தவிர, துணை ஆளுனர்கள் மகேஷ் குமார் ஜெயின், மைகேல் பத்ரா, எம் ராஜேஷ்வர் ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுடன் இந்த கூட்டத்தில் பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலாளர் அஜய் சேத்தும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் ரஞ்சன் நியமனம் குறித்து முக்கிய முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

யார் இந்த ராஜீவ் ரஞ்சன்?

யார் இந்த ராஜீவ் ரஞ்சன்?

ரஞ்சன் டெல்லி ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்-ல் முதுகலை பட்டமும், மும்பை பல்கலைக் கழக்கத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். அடுத்து வரும் ஜூன் 6 - 8 தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ள நாணய கொள்கைக் கூட்டத்தில் ஒரு பகுதியாக இருப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பணி அனுபவம்

பணி அனுபவம்

சென்ட்ரல் பேங்க் ஆப் ஓமனின் பொருளாதார நிபுணராக பணியாற்றியுள்ள ரஞ்சன், பொருளாதாரம் பற்றிய ஆய்வுகள், துறை வாரியான நிதி சார்ந்த ஆய்வுகள், குறிபாக நிதித்துறை, மானிட்டரி செக்டார், பொருளாதாரம் சார்ந்த ஆய்வுகள் என பலவற்றிலும் ஓமன் மத்திய வங்கிக்கு பெரும் துணை புரிந்துள்ளார். இங்கு 201 2 - 2015 வரையிலான 3 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

வேறு எங்கெல்லாம் பணி?

வேறு எங்கெல்லாம் பணி?

DEPR - ல் சர்வதேச நிதிபிரிவில் 1989- 1995ம் வரையிலான 6 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உண்டு.

இது தவிர ரிசர்வ் வங்கியின் DEIO துறையில் 2011 - 2004ல் பணிபுரிந்துள்ளார்.

2004 - 2007 மற்றும் 2010 - 2012ல் சர்வதேச உறவுகள் பிரிவின் தலைவராகவும், G20, OECD, ADB, SAARC, உலக வங்கி மற்றும் பலதரப்பு நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கும் குழுவில் ரிசர்வ் வங்கியில் பணியாற்றிய அனுபவமும் உண்டு.

கடந்த 2017 முதல் தற்போது வரையில் பொருளாதாரம் மற்றும் ஆராய்ச்சி துறையின் (DEPR) தலைவராகவும் இருந்துள்ளார். DEPR ஆனது மத்திய வங்கியின் பணவியல் கொள்கை மற்றும் ஆராய்ச்சி செயல்பாட்டுடன் தொடர்புடையது.

மொத்தத்தில் நிதித் துறையில் பல்வேறு அனுபவங்களை கொண்ட ரஞ்சனின் பங்களிப்பு என்பது மிக முக்கியமானதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Who is this Rajiv Ranjan? RBI board approved rajiv ranjan as MPC member

Who is this Rajiv Ranjan? RBI board approved rajiv ranjan as MPC member/யார் இந்த ராஜீவ் ரஞ்சன்.. ரிசர்வ் வங்கியின் நியமனத்திற்கு காரணம் என்ன?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X