அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் டொனால்டு ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கி சூடு மூலம் அவரை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. அவரை கொலை செய்ய முயற்சித்தது பென்சில்வேனியா பெத்தேல் பூங்காவைச் சேர்ந்த 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. யார் இந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்?
யார் இந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்?: டிரம்ப் பிரச்சாரத்தின் போது, தனது ஆதரவாளர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவர் இருந்த மேடையில் இருந்து 130 கெஜம் தொலைவில் உள்ள ஒரு உற்பத்தி ஆலையின் கூரையின் மீது தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் இருந்துள்ளார்.

மேலும் அங்கிருந்து க்ரூக்ஸ் பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. க்ரூக்ஸின் ஷாட்கள் டிரம்பின் காதை காயப்படுத்தியது. துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயமடைந்த நிலையில், ஒரு அப்பாவி பார்வையாளரின் உயிர் பறிபோனது.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ட்ரம்ப் முழு உடல் நலத்தோடு இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. நடந்து முடிந்த இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக ட்ரம்ப்பிற்கு இன்னும் ஆதரவு பெருகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சந்தேகிக்கப்பட்ட 2 நபர்கள் சீக்ரெட் சர்வீஸ் வீரர்கள் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
டொனால்ட் டிரம்ப் தனது உரையின் போது காதில் துப்பாக்கியால் சுடப்பட்டதால், அவரது முகத்தில் ரத்தம் வழிந்தது. அவர் வெளிவருவதற்கு முன்பே அவரது பாதுகாவலர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர்.
டிரம்ப் பிரச்சார செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் கூறுகையில், "இந்த கொடூரமான செயலின் போது விரைவாக நடவடிக்கை எடுத்ததற்காக சட்ட அமலாக்கத் துறைக்கு நன்றி தெரிவித்தார். அவர் நலமாக உள்ளார், உள்ளூர் மருத்துவ மனையில் பரிசோதிக்கப்பட்டு வருகிறார் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் "பென்சில்வேனியாவில் நடந்த இந்த சம்பவத்திற்கு விரைவாக பதிலடி கொடுத்த சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தான் பேசிக் கொண்டிருக்கும்போது சட்டென கேட்ட சத்தம் அவருடைய கவனத்தை ஈர்த்ததாகவும், பேரணியில் கொல்லப்பட்ட குடும்பத்திற்கும், மோசமாக காயமடைந்த மற்றொரு நபரின் குடும்பத்திற்கும் எனது ஆறுதலை தெரிவிக்க விரும்புகிறேன் என்றும், இது போன்ற ஒரு செயல் நம் நாட்டில் நடக்க கூடாது. கடவுள் ஆசிர்வதிக்கட்டும் இந்த அமெரிக்காவை" என்று கூறி உணர்ச்சி போங்க பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.
டொனால்ட் ட்ரம்ப் ஜோ பைடன் குறித்து பேசிக் கொண்டிருக்கும்போது தான், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறி உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications