ஒருவரது வருமானம் மற்றும் வாழ்க்கை நிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நடுத்தர வர்க்கம், உயர் நடுத்தர வர்க்கம், செல்வந்த உயர் வர்க்கம் என பல வகைகளாக பிரிக்கிறோம். ஆங்கிலத்தில் இதனை Middle class, Upper middle class, Affluent upper class என கூறுகிறோம்.
அந்த வகையில் உயர் நடுத்தர வர்க்கம் அதாவது அப்பர் மிடில் கிளாஸை எப்படி வரையறுக்கிறார்கள், அவர்களது வருமானம் , வாழ்க்கை நிலை ஆகியவை குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

அப்பர் மிடில் கிளாஸ் என்பது நடுத்தர வர்க்கத்திற்கும் செல்வந்த உயர் வர்க்கத்திற்கும் இடையே இருக்கக்கூடிய ஒரு சமூக பொருளாதார குழுவை பிரதிநிதித்துவம் செய்கிறது. இதற்கென ஒரு குறிப்பிட்ட வரையறை இல்லை என்றாலும் பொதுவாகவே உயர் வருமானம், மேம்பட்ட கல்வி, சிறந்த ஒரு வேலை மற்றும் தனித்துவமான வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கொண்டே இது வந்து வகைப்படுத்தப்படுகிறது.
பொதுவாக ஒருவர் எந்த பிரிவில் சேர்க்கிறார் என்பது அவரது வருமானம் மூலமே வரையறுக்கப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் அப்பர் மிடில் கிளாஸ் பிரிவில் வருகிறார்.
கல்வி மற்றும் தொழிலும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவருடைய கல்வி நிலை மற்றும் அவர் செய்யக்கூடிய வேலை ஆகிய இரண்டுமே அவர்கள் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதை தீர்மானிக்கிறத.
குறிப்பாக இந்தியாவில் முதுகலை பட்டம் படித்தவர்கள் இந்த பிரிவிற்குள் வருகிறார்கள். வேலைகளை பொருத்தவரை வொயிட் காலர் ஜாப் என சொல்லக்கூடிய வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவன நிர்வாகிகள் ஆகியோர் அப்பர் மிடில் கிளாஸ் பிரிவிற்குள் வருகிறார்கள். ஏனெனில் இந்த தொழில்கள் அவர்களது சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் இருக்கின்றன.
படிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். குறிப்பாக மேற்படிப்பு , முதுநிலை படிப்பு ஆகியவற்றுக்கு அதிக கவனம் கொடுப்பார்கள் . இது அவர்களின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் என்ற மனநிலை கொண்டவர்களாக இருப்பர்.
ஒரு நபர் எந்த வர்க்கத்தில் வருகிறார் என்பது அவர் தங்கியிருக்கும் ஊர் மற்றும் பகுதியை பொறுத்தும் அமையும். உதாரணமாக நகரப்பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட ஏரியாவை எடுத்து கொண்டால் அங்கே வசிப்பவர்கள் பெரும்பாலும் அப்பர் மிடிஸ் கிளாஸாக இருப்பார்கள்.
அதுமட்டுமின்றி ஊரை கொண்டும் இதனை முடிவு செய்யலாம். உதாரணமாக ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் ஒரு குடும்பம் ஒரு சிறிய நகரத்தில் உயர் நடுத்தர வர்க்கமாக இருக்கலாம் ஆனால் அவர்களே மும்பை , சென்னை , டெல்லி போன்ற பெருநகரப் பகுதியில் நடுத்தர வர்க்கமாக கருதப்படுவார்கள். எனவே ஒருவர் தங்கி இருக்கக்கூடிய ஊரும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications