அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வாகி இருக்கும் நிலையில் துணை அதிபராக ஜேடி வான்ஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். எனவே அமெரிக்க துணை அதிபரை அனைவரும் இந்தியாவின் மருமகன் என குறிப்பிடுகின்றனர்.
குடியரசு கட்சி சார்பாக மீண்டும் ஒருமுறை போட்டியிட்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் டிரம்ப். இதன் மூலம் அமெரிக்காவின் 47வது அதிபராக அவர் பதவியேற்க இருக்கிறார். தனது வெற்றியை தொடர்ந்து ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் உரையாடினார்.

அப்போது அவரது மனைவி மற்றும் தேர்தலில் அவருக்காக செயல்பட்டவர்கள் என அனைவரும் மேடையில் இருந்தனர். அதிபராக பதவி ஏற்க இருக்கும் டிரம்ப் துணை அதிபரையும் அழைத்து அறிமுகம் செய்து வைத்தார். 38 வயதான ஜே டி வான்ஸ் தான் அமெரிக்க துணை அதிபராக இருக்க போகிறார்.
ஜே டி வான்ஸுக்கும் இந்தியாவுக்கு ஒரு நெருங்கிய பந்தம் இருக்கிறது. இவரது மனையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா சிலுக்குரி ஆவார். உஷா இந்தியாவில் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்.
உஷாவின் தாத்தா சென்னையில் பணியாற்றியவர் என சொல்லப்படுகிறது. உஷா சிலுக்குரியின் பெற்றோர் 1970களில் அமெரிக்காவின் சான் டியாகோ நகருக்கு குடி பெயர்ந்து விட்டனர். ஜே டி வான்ஸும், உஷாவும் காதல் செய்து திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது அமெரிக்காவின் துணை அதிபராகி இருக்கும் ஜே டி வான்ஸ் அமெரிக்காவின் மிக இளம் வயது துணை அதிபர் என்ற பெருமை பெற்றுள்ளார். தற்போது இவருக்கு 40 வயதாகிறது. எழுத்தாளர், அரசியல் வாதி, கடற்படை வீரர் என பன்முகம் கொண்டவர்.
யேல் சட்டப்பள்ளியில் பயிலும் போது தான் இவர் உஷாவை சந்தித்ததாக தெரிகிறது. சில காலம் கார்ப்பரேட் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். 2016ஆம் ஆண்டில் இவர் Hillbilly Elegy என்ற புத்தகத்தை எழுதினார் அது 2020இல் படமாகவும் எடுக்கப்பட்டது.
ஜே டி வான்ஸை மேடையில் அறிமுகம் செய்து வைத்த டொனால்ட் டிரம்ப், இவருக்கு நான் முதன் முதலில் வாழ்த்து தெரிவிக்கும் நபராக இருக்க போகிறேன், இனி நான் இவரை துணை அதிபர் ஜே டி வான்ஸ் என அழைக்கலாம், அவரது மனைவி அழகான பெண்மணி உஷாவுக்கும் வாழ்த்து என்ற டிரம்ப் கூறினார்.
இதனை அடுத்து பேசிய வான்ஸ் அதிபர் தன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி என்றார். அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக பணியாற்றும் முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை உஷா சிலுக்குரி வான்ஸுக்கு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications