உலகளவில் அதிக ஊதியம் பெறும் இந்திய வம்சாவளி தலைமை நிர்வாக அதிகாரிகளில் ஒருவராகவும், உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான Novartis இல் தலைவராகவும் இருப்பவர் தான் வசந்த் நரசிம்மன் அவர்கள்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வசந்வசந்த் நரசிம்மன் அவர்களின் பெற்றோர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இவரது பெற்றோர் 1970 களில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்துள்ளனர். 1976ல் அமெரிக்காவின் Pittsburgh நகரில் பிறந்தார் நரசிம்மன்.
வசந்த் நரசிம்மன் அவர்களின் தாய் அமெரிக்க அரசு மின் மற்றும் எரிவாய் நிறுவனத்தின் முன்னாள் அணுசக்தி பொறியியலாளராகவும், இவரது தந்தை Hoeganaes நிறுவனத்தின் நிர்வாகியாகவும் இருந்துள்ளனர்.
Novartis தலைமைச் செயல் அதிகாரி!
வசந்த் நரசிம்மன் தற்போது உலகின் மிகப்பெரிய மருத்துவ நிறுவனங்களில் ஒன்றான Novartis இல் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். இவர் 2018 ஆம் ஆண்டு Novartis நிறுவனத்தின் CEO வாக பொறுப்பேற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபர் ஆவார்.
வாரத்திற்கு 1 கோடி சம்பளம்!
Novartis இல் இவர் பதவியேற்றதும் இவரின் வார சம்பளம் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 1 கோடி என தெரிகிறது. வருடத்திற்கு 1.9 மில்லியன் டாலரை அடிப்படை சம்பளமாக பெற்றுள்ளார். 2018 இல் நரசிம்மன் அவர்கள் Novartis இல் சிஇஓவாக பதவியேற்ற பின்பு அந்நிறுவனத்தின் மார்க்கெட் கேப் சுமார் 185 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
பட்டப்படிப்பு!
நரசிம்மன் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உயிரியல் அறிவியலில் இளங்கலை பட்டத்தையும், ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியிலிருந்து முதுகலையையும், ஜான் எஃப். கென்னடி பள்ளியிலிருந்து பொதுக் கொள்கையில் (master's degree in public policy) முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
மருத்துவத் துறையில் பயணம்!
வசந்த் நரசிம்மன் சாண்டோஸ் என்ற சர்வதேச நிறுவனத்தில் பயோஃபார்மாசூட்டிகல்ஸ் & ஆன்காலஜி இன்ஜெக்டபிள்ஸின் உலகளாவிய தலைவராக பணியாற்றியுள்ளார்.
அதன்பின் 2005 இல் நோவார்டிஸில் சேர்ந்தார். அதன்பின் கடினமான உழைப்பின் பலனாய் 2014 முதல் 2016 வரை, நோவார்டிஸ் மருந்துகளுக்கான உலகளாவிய மேம்பாட்டுத் தலைவராக பணியாற்றினார்.
முக்கிய பதவி
2016 முதல் 2018 வரை, அந்நிறுவனத்தின் உலகளாவிய மருந்து மேம்பாட்டுத் தலைவர் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி என்ற பதவியை வகித்தார். செப்டம்பர் 5, 2017 அன்று, நோவார்டிஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜோசப் ஜிமெனெசுக்குப் பிறகு இவர் நியமிக்கப்பட்டார்.
பார்ச்சூன் 40 இல் இடம்பெற்றவர் (fortune 40 under 40)!
உலகின் பிரபல நாளிதழான ஃபார்ச்சூன் இல் 2015 ஆம் ஆண்டு வெளியிட்ட 40 வயதில் சாதித்தவர்கள் பட்டியலில் வசந்த் நரசிம்மனும் ஒருவராக இருந்தார்.
பிரபல குழுக்களின் உறுப்பினர்!
இவர் அமெரிக்க தேசிய மருத்துவ கழகத்தின் உறுப்பினராகவும், ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் உறுப்பினர்கள் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். மேலும் ஆப்பிரிக்க பார்க்ஸ் என்ற ஒரு இலாப நோக்கற்ற பாதுகாப்பு அமைப்பு மற்றும் அமெரிக்காவின் மருந்து ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியாளர்களின் குழுக்களிலும் இவர் பணியாற்றி வருகிறார்.
குடும்ப வாழ்க்கை!
நரசிம்மன் சிருஷ்டி குப்தா என்பவரை ஹார்வர்டில் நடைபெற்ற ஆசிய கலாச்சாரத் திருவிழா ஒன்றில் சந்தித்து அதன்பின் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications