முகேஷ் அம்பானியின் 3வது சம்மந்தி.. யார் இந்த வீரேன் மெர்சன்ட்..?

முகேஷ் அம்பானி-யின் இளைய மகனான அனந்த் அம்பானி மற்றும் என்கோர் ஹெல்த்கேர் தலைமை நிர்வாக அதிகாரி வீரேன் மெர்சன்ட்-ன் மகளான ராதிகா மெர்சண்ட்-ன் ரோகா விழா அதாவது நிச்சயதார்த்த விழா ராஜஸ்தான் மாநிலத்தின் ஸ்ரீநாத்ஜி கோவிலில் நடந்தது.

அனந்த் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் நியூ எனர்ஜி வர்த்தகத்தை மொத்தமாக நிர்வாகம் செய்ய உள்ளார். ரிலையன்ஸ் குழுமத்தில் அடுத்தப் பெரிய வர்த்தகப் பிரிவாகப் பார்க்கப்படும் நியூ எனர்ஜி வர்த்தகம் அனந்த் அம்பானி-யின் மாமனார், இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி-யின் 3வது சம்மந்தி ஆகியுள்ளார் வீரேன் மெர்சன்ட்.

யார் இந்த வீரேன் மெர்சன்ட்..?

ராதிகா மெர்சண்ட்

ராதிகா மெர்சண்ட்

ஈஷா அம்பானி திருமணம் முடிந்த நாள் முதல் அனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் நெருங்கி பழகுவதும், அம்பானி வீட்டின் அனைத்து குடும்ப நிகழ்ச்சியிலும் ராதிகா மெர்சண்ட் மற்றும் அவரது குடும்பம் மொத்தமும் கலந்துகொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக இருவரும் நெருங்கிப் பழகி வரும் நிலையில் தற்போது இரு வீட்டார் முன்னிலையில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றுள்ளது.

அம்பானி வீட்டுக்கு சம்மந்தி

அம்பானி வீட்டுக்கு சம்மந்தி

அம்பானி வீட்டுக்கு சம்மந்தி ஆவது சாதாரண விஷயம் இல்லை. ஒருபக்கம் பணத்தின் வலிமை, மாபெரும் வர்த்தகச் சாம்ராஜ்ஜியம், குடும்ப விவகாரம், நிறுவனத்தின் எதிர்காலத்தில் அவர்களின் பங்கு எனப் பல விஷயங்கள் உள்ளது. இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் 3வது சம்பந்தியாகியுள்ள வீரேன் மெர்சன்ட் யார்..?

வீரேன் மெர்ச்சன்ட்

வீரேன் மெர்ச்சன்ட்

என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் துணைத் தலைவராக இருக்கும் வீரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள் தான் ராதிகா மெர்ச்சன்ட். இந்த என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிலும் ராதிகா மெர்ச்சன்ட் உள்ளார்.

 வீரேன் மெர்ச்சன்ட் நிறுவனங்கள்

வீரேன் மெர்ச்சன்ட் நிறுவனங்கள்

வீரேன் மெர்ச்சன்ட் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் சிஇஓ-வாக மட்டும் அல்லாமல் என்கோர் நேச்சுரல் பாலிமர்ஸ், என்கோர் பிசினஸ் சென்டர், என்கோர் பாலிஃப்ராக் தயாரிப்புகள், ZYG பார்மா மற்றும் சைதர்ஷன் வணிக மையங்கள் ஆகிய நிறுவனங்களின் டைரெக்டர் ஆகவும் உள்ளார்.

755 கோடி ரூபாய் சொத்து

755 கோடி ரூபாய் சொத்து

வீரேன் மெர்ச்சன்ட்-ன் மொத்த சொத்து மதிப்பு 755 கோடி ரூபாய், முகேஷ் அம்பானி-யின் 89.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு என்றாலும், அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் இருவரும் நீண்ட கால நட்பில் இருந்த நிலையில் இவருவரின் மன ஒத்துப்போய்த் தற்போது திருமணத்திற்கு வந்துள்ளது.

முதல் சம்மந்தி

முதல் சம்மந்தி

முகேஷ் அம்பானியின் முதல் சம்மந்தி ரசெல் மேத்தா. ரசெல் மேத்தா மற்றும் மோனா மேத்தா அவர்களின் இளைய மகள் தான் ஸ்லோகா மேத்தா. இப்போது முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் மனைவி.

ரசெல் மேத்தா

ரசெல் மேத்தா

ரசெல் மேத்தா நிர்வாகம் செய்து வந்த பி அருண்குமார் அண்ட் கோ-வாக இருந்த நிறுவனம் தான் தற்போது ரோஸ் ப்ளூ டைமென்ட்ஸ் ஆக மாற்றியுள்ளது. இந்நிறுவனத்தின் வர்த்தகம் பெல்ஜியம், இஸ்ரேல், ஜப்பான், அமெரிக்கா மற்றும் சீனா என 12க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளது. ரசெல் மேத்தா மற்றும் மோனா மேத்தா தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர் இதில் இளைய மகள் தான் ஸ்கோகா மேத்தா.

2வது சம்மந்தி

2வது சம்மந்தி

ஹெல்த்கேர் துறையில் நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் பிராமல் குரூப் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அஜய் பிராமல் தான் முகேஷ் அம்பானியின் 2வது சம்மந்தி. இஷா அம்பானியின் மாமனார் ஆவார்.

அஜய் பிராமல்

அஜய் பிராமல்

இந்தப் பில்லியனர்கள் பட்டியலில் இருக்கும் அஜய் பிராமல் மற்றும் ஸ்வாதி பிராமல் தம்பதிக்கு ஆனந்த் பிராமல், நந்தினி பிராமல் ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் ஆனந்த் பிராமல்-ஐ காதலித்துத் திருமணம் செய்துள்ளார் இஷா அம்பானி.

பிராமல் குரூப்

பிராமல் குரூப்

பிராமல் குரூப் நிறுவனம் தற்போது ஹெல்த்கேர், லைப் சையின்ஸ், மருந்து கண்டுபிடிப்பு, ஹெல்த்கேர் இன்பர்மேஷன் மேனேஜ்மென்ட், ஸ்பெஷாலிட்டி கிளாஸ்பேக்கிங், நிதியியல் சேவை, ரியல் எஸ்டேட் ஆகிய துறையில் சிறந்து விளங்குகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+