ஒவ்வொரு வருடமும் சம்பள உயர்வுக்காக காத்திருக்கும் மக்களுக்கு கடந்த வருடத்திற்கான சம்பள உயர்வு மே மாதம் முதல் பல நிறுவனங்கள் அறிவித்து வருகிறது. அடுத்த சில வாரத்தில் நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் அளிக்க உள்ளது.
இந்த வருடம் சம்பள உயர்வு குறித்த ஆய்வுகளை பார்க்கும் போது கலவையான விமர்சனங்களே வருகிறது. ஒரு சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அள்ளிக்கொடுத்திருந்தாலும், பல நிறுவனங்கள் மிகவும் குறைவான சம்பள உயர்வையே கொடுத்துள்ளது. இன்னும் சில நிறுவனங்கள் சம்பள உயர்வையே கொடுக்காமல் ஊழியர்களை ஏமாற்றியுள்ளது.

மறுபுறம் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் குறிப்பாக தலைமை நிர்வாக அதிகாரிகள், நிர்வாக இயக்குனர்களின் சம்பளம் மட்டும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதுப்போன்ற சம்பவங்கள் இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகளவில் நடக்கிறது. அந்த வகையில் உலகளவிலும் இந்தியாவிலும் அதிக சம்பளம் வாங்கும் உயர் அதிகாரி யார்..?
உலகளவிலும் அதிக சம்பளம் வாங்கும் உயர் அதிகாரி பட்டியலில் டாப் 5 பேர் கொண்ட பட்டியலில் 5வது இடத்தில் இருப்பவர் டாம் சீபெல் இன்று உலக நாடுகள் வியந்து பார்க்கும் AI தொழில்நுட்பத்தில் அசத்தும் மென்பொருள் நிறுவனமான C3.AI நிறுவனத்தின் தலைவர் தான் இவர். டாம் சீபெல் சம்பளம் 343 மில்லியன் டாலர். சத்ய நாடெல்லாவின் சம்பளம் 54.9 மில்லியன் டாலர் மட்டுமே.
அமெரிக்காவில் எலக்ட்ரிக் வாகன நிறுவனங்களின் சிஇஓ பெரிய அளவிலான தாக்கத்தை சந்தையில் ஏற்படுத்தியுள்ளனர். இதன் மூலம் ஆடம்பர எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான லூசிட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிஇஓ பீட்டர் ராவ்லின்சன் 575 மில்லியன் டாலர் சம்பளத்துடன் 4வது இடத்தில் உள்ளார்.
இன்று கேமிங், AI பிரிவின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் NVIDIA நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ-வான ஜென்சென் ஹூவாங் 509 மில்லியன் டாலரை சம்பளமாக பெற்றுள்ளார். எலக்ட்ரிக் வாகனங்களுக்கான Rivian நிறுவனத்தின் சிஇஓ Robert Scaringe 2.3 பில்லியன் டாலரை சம்பளமாக பெற்றுள்ளார், இதல் பங்குகளும் அடக்கம்.
முதல் இடத்தில் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்-ன் சம்பளம், பங்குகள் ஆகியவற்றின் வாயிலாக 10.1 பில்லியன் டாலராக உள்ளது. எலான் மஸ்க் தான் தலைமை வகிக்கும் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், டிவிட்டர் ஆகிய நிறுவனத்தில் இருந்து பங்குகளாக பெற்றுள்ளது.
இந்தியாவை பொருத்த வரையில் தியரி டெலாபோர்ட் 2023 ஆம் நிதியாண்டின் போது 10 மில்லியன் டாலர், அதாவது சுமார் 82.2 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தை பெற்றுள்ளார். இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக் 2023 நிதியாண்டில் மொத்தம் 56.4 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார். ஹிந்துஸ்தான் யூனிலீவர் சிஇஓ சஞ்சீவ் மேத்தா 2023 ஆம் நிதியாண்டில் 22.36 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications