இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோவுக்கு சொந்தமான இன்டர் குளோப் ஏவியேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஒரு பெரிய நிர்வாக மாற்றம் நடந்துள்ளது. இந்த நிறுவனத்தை ஆரம்பித்த இருவரில் ஒருவரான ராகேஷ் கங்வால், இப்போது தன் வசம் இருந்த பங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக விற்று வருகிறார். இதன் காரணமாக, இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் அமைப்பே மாறிவிட்டது.
இண்டிகோ நிறுவனத்தை ராகேஷ் கங்வால் மற்றும் ராகுல் பாட்டியா ஆகிய இருவர்தான் சேர்ந்து தொடங்கினார்கள். தற்போது ராகுல் பாட்டியா, இன்டர் குளோப் எண்டர்பிரைசஸ் மூலமாக நிறுவனத்தின் பிரதான உரிமையாளராக தொடர்கிறார்.

ராகேஷ் கங்வால் விலகல் : முன்பு முக்கியப் பங்குதாரராக இருந்த ராகேஷ் கங்வால், சமீப காலமாக தன் குடும்பத்தின் பெயரில் இருந்த பங்குகளை விற்பனை செய்துவிட்டார். இதனால், இப்போது நிறுவனத்தில் அவரது பங்கு 13.5% மட்டுமே உள்ளது. இவரின் மொத்தச் சொத்து மதிப்பு சுமார் ரூ.48,000 கோடி ஆகும்.
ராகுல் பாட்டியா ஆதிக்கம் : ராகுல் பாட்டியாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.67,000 கோடி ஆகும். அவர் இப்போது நிறுவனத்தின் முக்கிய உரிமையாளராக தொடர்ந்து இருந்து வருகிறார்.
ஒரே நேரத்தில் ரூ. 11,000 கோடி விற்பனை : ராகேஷ் கங்வால் கடந்த சில ஆண்டுகளாகவே, இண்டிகோ மீதான தனது முதலீட்டை குறைத்து வருகிறார். 2025 ஆம் ஆண்டில், அவர் ஒரு பெரிய விற்பனை (Block Deal) ஒப்பந்தம் மூலம் தனது பங்குகளில் 5.7% சதவீதத்தை விற்றார். இந்தச் பங்கின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.11,000 கோடி ஆகும்.
முன்பு ராகேஷ் கங்வாலின் பங்கு 30 முதல் 35% வரை இருந்தது. ஆனால், தற்போது இது 13.5% ஆக சரிந்துவிட்டது. இந்த மாற்றத்தால், ராகுல் பாட்டியா தலைமையிலான குழு நிறுவனத்தின் முக்கிய கட்டுப்பாட்டை முழுமையாகப் பெற்றுள்ளது.
நிறுவனத்தின் செயல்பாடு : இண்டிகோ நிறுவனம் ஒருபுறம் பங்கு விற்பனையை எதிர்கொண்டாலும், மறுபுறம் அதன் செயல்பாடுகளை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இண்டிகோ தற்போது 434 விமானங்களை கொண்டு இயங்குகிறது. ஒரு நாளைக்குச் சுமார் 2,300 விமான சேவைகளை இயக்குவதன் மூலம், இண்டிகோ இந்தியாவின் மிகப் பெரிய உள்நாட்டு விமான நிறுவனமாக தொடர்கிறது. ராகேஷ் கங்வால் படிப்படியாக வெளியேறும் நிலையில், ராகுல் பாட்டியாதான் இண்டிகோவின் எதிர்காலத்தை வழிநடத்தும் முக்கியத் தலைவராக இருப்பார் என்று சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததால், நாடு முழுவதும் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து 5-வது நாளாக இந்த பிரச்சனை இருப்பதால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் சில நாட்களுக்கு விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications