மும்பை: இந்தியர்களால் மிகவும் விரும்பப்பட்ட மற்றும் மரியாதைக்குரிய தொழிலதிபரான ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக காலமானார். சமூகம் சார்ந்த தன்னுடைய பணிகளுக்காக மக்களால் போற்றப்படும் ஒரு தொழிலதிபராக இருந்தவர் தான் ரத்தன் டாடா.
அனைவரும் அறிந்தபடி டாடா குழுமத்தை ஆள்வது டாடா சன்ஸ் தான், ஆனால் உண்மையில் டாடா சன்ஸ்-ல் அதிகப்படியான பங்குகளை வைத்திருப்பது டாடா டிரஸ்ட்.

ரத்தன் டாடாவின் மறைவிக்கு பிறகு டாடா டிரஸ்ட்க்கு யார் தலைமை ஏற்பார் என்ற ஒரு கேள்வி எழுந்தது. ரத்தன் டாடாவின் மறைவை தொடர்ந்து டாடா குழுமம் சார்ந்த அறக்கட்டளைகளை நிர்வகிக்கும் தலைவராக யார் பொறுப்பேற்க போகிறார் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனிடையே நோயல் டாடா நியமிக்கப்பட்டார்.
165 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட டாடா குழுமத்தின் பெரும்பாலான பங்குகள் டாடா குழுமத்திற்கு உட்பட்ட அறக்கட்டளை நிறுவனங்களுக்கு சொந்தமாக இருக்கின்றன. டாடா குழுமத்தின் பெரும்பாலான பங்குகள் டாடா டிரஸ்ட் நிறுவனங்கள் வசம் உள்ளது. இதன் தலைவர் பொறுப்பு மிகவும் முக்கியமானது.
Sir Dorabji Tata Trust மற்றும் Sir Ratan Tata Trust ஆகிய இரண்டும் மொத்தமாக 66 சதவீத பங்குகளை டாடா குழுமத்தில் கொண்டுள்ளன. எனவே தான் டாடா குழுமத்தின் பிரதானமான பங்குதாரர்களாக இந்த அறக்கட்டளைகள் செயல்படுகின்றன. முன்னதாக டாடா சன்ஸ் குழுமத்திற்கும் டாடா டிரஸ்ட் நிறுவனங்களுக்கும் ரத்தன் டாடாவே தலைவர் பதவியில் இருந்து வந்தார். 2022 ஆம் ஆண்டு அந்த அமைப்பு மாற்றப்பட்டது. டாடா சன்ஸ் தலைவராக என். சந்திரசேகரனும், டாடா டிரஸ்ட்களின் தலைவராக ரத்தன் டாடாவும் நியமனம் செய்யப்பட்டனர்.
டாடா குழுமத்தில் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் சுமார் 66 சதவீத பங்குகளை வைத்திருப்பது டாடா டிரஸ்ட். இதை தொடர்ந்து அதிகப்படியான பங்குகளை வைத்திருப்பது பல்லோன்ஜி மிஸ்திரி குடும்பம், இக்குடும்பம் டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனத்தில் சுமார் 18 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications