கொரோனவின் தாக்கம் சிறியது தான்..அதைவிட பெரிய சோதனை காத்திருக்கு..!

பெய்ஜிங்: உலகத்தினை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவினால் பல நூறு பேர் இறந்துள்ள நிலையில், பல ஆயிரம் பேர் தாக்கப்பட்டுள்ளனர்.

அதிலும் தற்போது சீனாவைத் தவிர, மற்ற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் இந்த கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸின் மிகப்பெரிய தாக்குதலுக்கு உலக நாடுகள் தயாராக இல்லை என்றும் WHO எச்சரித்துள்ளது.

கொரோனாவினால் தாக்கம்

கொரோனாவினால் தாக்கம்

சீனாவின் கொரோனா வைரஸின் மிகப்பெரிய தாக்குதலுக்கு மத்தியில், பல ஆயிரம் மக்கள் இந்த கொடிய வைரஸின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் சீனாவின் முக்கிய நகரங்களில் வர்த்தகம், பள்ளிக் கூடங்களும், மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கட்டளையிடுவது சீனாவில் கோபத்தைத் தூண்டியுள்ளது. ஆனால் இது பரவலை தடுக்க வழிவகுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

இது ஒரு கொடிய தொற்று நோய்

இது ஒரு கொடிய தொற்று நோய்

இந்த புதிய சுவாச தொற்று ஒரு புறம் எனில், இந்த விரைவான பரவலை தடுக்க சீனாவின் விரைவான தைரியமான அணுகுமுறை விரைவாக இந்த வைரஸ் அதிகரித்து வரும் போக்கை காட்டுகிறது. மேலும் இது ஒரு கொடிய தொற்று நோய் என்பதில் சந்தேகம் இல்லை. சீனாவின் ஹூபே மாகாணத்தில் தொடங்கிய இந்த தொற்று நோயானது, இதுவரையில் 2,700 பேருக்கும் மேற்பட்டோரை காவு கொண்டுள்ளது.

குறைந்து வருகிறதா கொரோனா தாக்கம்

குறைந்து வருகிறதா கொரோனா தாக்கம்

டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த கொடிய வைரஸால், 77,000 பேருக்கு மேல் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் தற்போது சீனாவில் தற்போது இதன் தாக்கம் சற்று குறைந்து வருவதாக கூறப்படுகிறது. சீனா எடுத்து வரும் அசாதரண நடவடிக்கையால், சீனாவில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மற்ற நாடுகளில் அதிகரிப்பு

மற்ற நாடுகளில் அதிகரிப்பு

எனினும் சீனாவில் குறைந்துள்ளதாக கூறப்பட்டாலும், மற்ற நாடுகளில் தற்போது ஆதிக்கம் செய்ய தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக இத்தாலி, ஈரான், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக இத்தாலியில் 150 கொரோனா வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இத்தாலியில் 10 நகரங்களை பூட்டியுள்ளதாகவும், மேலும் பல முக்கிய நகரங்களில் பள்ளிகளை மூடியுள்ளதாகவும், விளையாட்டு நிகழ்வுகளை ரத்து செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பங்கு சந்தைகள் வீழ்ச்சி

பங்கு சந்தைகள் வீழ்ச்சி

இந்த நிலையில் ஈரானில் இந்த கொடிய வைரஸால் 12 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் தென் கொரியாவில் 231 பேர் கொரோனாவால் தாக்கம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு மாதத்திற்கு மேலாக சீனாவை முடக்கிய வைரஸ் இப்போது உலகின் ஒவ்வொரு பகுதியையும் தொடக்கூடிய ஒரு தொற்று நோயாக மாறி அச்சுறுத்துகிறது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட பல பங்கு சந்தைகள் திங்கட்கிழமையன்று வீழ்ச்சி கண்டுள்ளன.

பரந்த விளைவை ஏற்படுத்தலாம்

பரந்த விளைவை ஏற்படுத்தலாம்

சீனாவில் ஏற்கனவே நிலைகொண்டுள்ள கொரோனாவால் பொருளாதார சீர்குலைவால் முதலீட்டாளர்கள் கவலைப்படுவதால், அவை பரந்த விளைவை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா பங்கு சந்தைகள் திங்கட்கிழமையன்று பலத்த வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளன. மேலும் ஐரோப்பிய பங்கு சந்தைகள் மோசமான நாளையே பதிவு செய்துள்ளனர். S&P 500 குறியீடு 3% வீழ்ச்சி கண்டுள்ளது. இதே போல் டவ் ஜோன்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சி கண்டுள்ளது.

கடுமையான வரம்புகள்

கடுமையான வரம்புகள்

ஜனவரியின் பிற்பகுதியில் இருந்து சீனா அரசாங்கம் 760 மில்லியன் மக்களை அதன் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர்களை, மாறுபட்ட கண்டிப்புகளின் அடிப்படையில் குடியிருப்பு பூட்டுதல்களின் கீழ், நுழைவாயில்களைக் கட்டுவதற்கான சோதனைச் சாவடிகள் முதல் வெளியில் செல்வதில் கடுமையான வரம்புகள் வரை பல முக்கிய நகரங்களில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாதிப்பு குறைந்துள்ளது

பாதிப்பு குறைந்துள்ளது

இதனால் இரண்டாவது நாளாக சீனாவின் பாதிப்பு குறைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் மூத்த அதிகாரி லியாங் வன்னியன் சீனா இன்னும் வெற்றியை அறிவிக்க தயாராக இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது என்றும் ஒர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை அமல்படுத்துவது சாத்தியமா?

இதை அமல்படுத்துவது சாத்தியமா?

எனினும் சீனாவின் கட்டுப்பாடுகள் நிச்சயம் வேலை செய்கிறது என்று ஹாங்காங் பல்கலைக் கழகத்தின் பொது சுகாதார ஆய்வக அறிவியல் பிரிவின் தலைவர் லியோ பூன் தெரிவித்துள்ளார். எனினும் இதே போன்ற கொள்கைகளை மற்ற நாடுகளிலும் பயன்படுத்துவது சாத்தியமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மோசமான பொது நெருக்கடி

மோசமான பொது நெருக்கடி

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமையன்று சீனாவின் தலைவர் ஜி ஜின்பிங் ஒர் அறிக்கையில், இந்த தொற்று நோய் நாட்டின் மிக மோசமான பொது நெருக்கடி என்றும் கூறியுள்ளார். மேலும் வுகான் மற்றும் ஹூபேயில் ஏற்பட்ட வெடிப்பை கட்டுப்படுத்துவதோடு, தொற்று நோய் பெய்ஜிங்கிற்கும் பரவாமல் தடுப்பதும் நாட்டின் மிக முக்கிய இலக்கு என்றும் கூறியுள்ளார்.

உண்மையான சோதனை

உண்மையான சோதனை

கொரோனாவினால் பல நூறு உயிர்கள் பலியாகியிருந்தாலும், உண்மையான சோதனை ஆரம்பிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் சீனா மிகப்பெரிய பொருளாதார தாக்கத்தினை எதிர்கொள்ளக்கூடும். அது சீனாவில் இரண்டாவது முறையாக கொரோனா தாக்கம் ஏற்படுவதை போல மோசமாகவும், அது சீனாவுக்கு சோதனையாக இருக்கும் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+