இந்தியாவை சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனத்தின் இருமல் மருந்துகளான Ambronol, DOK-1 max ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்த மருந்து நிறுவனத்தின் தயாரிப்பகள் தர நிர்ணயக் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மரியான் பயோடெக் நிறுவனம் தங்களின் இருமல் மருந்துகளின் பாதுகாப்பு தரம் குறித்து எந்த விதமான உத்தரவாதமும் உலக சுகாதார அமைப்புக்கு தரவில்லை என்ற நிலையில் தான், இப்படி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது இந்திய மருத்துவ துறையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
யாரும் பயன்படுத்த வேண்டாம்
உஸ்பெகிஸ்தானின் சுகாதார அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வில் இந்த இரு மருந்துகளில் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிலான, டைஎத்திலின் க்ளைக்கால், எத்திலீன் க்ளைக்கால் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஹூ தெரிவித்துள்ளது. இந்த இருமல் மருந்தானது வேறு நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வரப்படுகின்றது. இதற்கிடையில் உஸ்பெகிஸ்தான் ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், இந்த இரண்டு மருந்துகளையும் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.
19 குழந்தைகள் இறப்பு
கடந்த டிசம்பரில் இந்த இருமல் மருந்தை அருந்தியதால், தங்கள் நாட்டை சேர்ந்த 19 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் அரசு கடுமையாக குற்றம் சாட்டியிருந்தது.
உயிரிழந்தை குழந்தைகள் 2 - 7 நாட்கள் வரையில் அன்றாடம் இந்த மருந்தினை 5 ml வரையில் அருந்தியுள்ளனர். அவர்களுக்கு தினசரி 3 - 4 முறை கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மருந்தகங்கள் மூலம் பரிந்துரை
இந்த மருந்துகளை பெற்றோர் உள்ளூர் மருந்துகடைக்காரர்களின் பரிந்துரையின் பேரில் கொடுத்துள்ளனர். குழந்தைகள் உயிரிழப்புக்கு பிறகு அனைத்து மருந்துகளும் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது உலக சுகாதார அமைப்பு Ambronol, DOK-1 max என்ற இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
காம்பியா சம்பவம்
முன்னதாக கடந்த அக்டோபர் மாதத்தில் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்து, 6 குழந்தைகள் பலியாகியனர். அந்த சமயத்தில் உலக சுகாதார அமைப்பு இது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த துயர சம்பவத்திற்கு காரணம் மெய்டன் பார்மா நிறுவனமே என்றும் கூறப்படுகின்றது.
இந்திய நிறுவனங்களின் எதிர்காலம் என்ன?
சர்வதேச அளவில் மிகப்பெரிய மருந்து ஏற்றுமதியாளராக இருந்து வரும் இந்தியாவுக்கு இது பாதிப்பினை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகின்றது. பொதுவாக இருமல் மருந்து என்பது அவசியம் தேவைப்படும் ஒன்றாக உள்ளது. குறிப்பாக குழந்தைகள் இருமலால் சிரமப்படும்போது, அவசியம் அவர்களுக்கு தேவைப்படுகின்றது. அதன் காரணமாக இதனை நேரிடையாக மருத்துவரை கேட்காமல் மருந்தகங்களில் வாங்குவது கூடாது. பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் வாங்கி உட்கொள்ள கூடாது. இது பெரும் ஆபத்தினை விளைவிக்கலாம்.
மருத்துவர்களை நாடுங்கள்
மருத்துவர்கள் பொதுவாக உடல்நிலையை பரிசோதித்த பிறகே சரியானதொரு மருந்தை பரிந்துரை செய்வார்கள். இது இருமல் மருந்துக்கு மட்டும் அல்ல, அனைத்து மருந்துகளுக்கும் பொருந்தும். ஆக ஏதேனும் பிரச்சனை எனில் நீங்களாக மெடிக்கல் சென்று மருந்துகளை வாங்கி அருந்தாமல், மருத்துவரை நாடுவது மிக நல்லது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications