இந்தியாவின் முதல் பைலட் யார் என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் ஜேஆர்டி டாடா என்பார்கள். இந்த பதிலில் பாதி தான் உண்மை. ஜேஆர்டி டாடா முதல் சிவிலியன் கமர்ஷியல் பைலட்தான் ஆனால் முதலில் பறந்த இந்தியர் அல்ல. அப்படி என்றால் வேறு யார்?
பதிலை அறிய நீங்கள் கூகுள் செய்தால் உங்கள் கேள்வியில் உள்ள வார்த்தைகளுக்கு ஏற்ப பல விதமான பதில்கள் கிடைக்கும். சில இணைய தளங்கள் ஜெஹாங்கீர் ரத்தன்ஜி டாதாபோய் டாடா, சில ஷிவ்கர் பாபுஜி டால்பாடே என்றும் மேலும் சில புருஷோத்தம் மேக்ஜி கபாலி என்றும் பதில் தருகின்றன. ஆனால் அனைத்துமே தவறு.

1929 பிப்ரவரியில் ஜேஆர்டி டாடா கமர்ஷியல் பைலட் லைசன்ஸ் நம்பர் 1ஐ வாங்கினார். எனவே அவர் அதற்கு முன்பு சில வாரங்களுக்கு பயிற்சி எடுப்பதற்காக பறந்திருக்கலாம். 1928இல் அவர் முதன் முதலாகப் பறந்திருக்கலாம்.
இனி எஸ்பி டால்பாடே (SB Talpade) பற்றி பார்க்கலாம்.
சுதந்திர வேட்கையுடன் இருந்த டால்பாடே வேத பாடங்களை வைத்து ஒரு பறக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்ததாகக் சிலர் கூறுகின்றனர். அவர் ரைட் சகோதரர்களுக்கு 8 வருடங்களுக்கு முன்பாக பறந்ததாகக் கூறுகின்றனர்.
இதை யாராவது நிரூபித்தால் சந்தோஷமாக இருக்கும். ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. அவரைப் பற்றி ஒரு திரைப்படம் தயாரித்து வெளியானது. ஆனால் சினிமாவை ஒரு ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.

புஜ் - தி பிரைடு ஆப் இந்தியா என்ற பதிவைப் பார்த்தால் வரலாற்றுப் பிழைகளுடன் தியாகத்தை வைத்து வியாபார நோக்கில் இருப்பதை பார்க்கலாம். எந்தவொரு விஷயம் என்றாலும் அதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்று அறிவியல் பாடத்தில் பள்ளிக்கூடத்தில் படித்திருப்போம்.
துரதிர்ஷ்டவசமாக டால்பாடேயின் பறந்த அனுபவம் பற்றி எந்த செய்தி ஊடகங்களிலோ அல்லது வேறு யாருமோ பதிவு செய்யவில்லை. அதுவும் அந்த சம்பவம் மனிதர் ஓட்டிய விமானமா அல்லது ஆளில்லா விமானமா என்றுகூடத் தெரியாது.
எனவே எஸ்பி டால்பாடே முதல் விமானி என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. புருஷோத்தம் மேக்ஜி கபாலியின் விஷயத்தில் அவர்தான் முதல் இந்திய பைலட். ஜேஆர்டி டாடாவிக்குப் பின் ஒராண்டு கழித்து அவர் விமானி லைசன்ஸைப் பெற்றுள்ளார். ஆனால் ஜேஆர்டி டாடா பாரிஸில் பிறந்த இந்திய குடிமகன். அவருக்கு பிரெஞ்சு மூதாதையர் இருந்துள்ளனர்.
இதை வைத்து என்ன கூறமுடியும். எப்படியிருந்தாலும் மற்ற இந்தியர்கள் எல்லாம் கபாலியையும் ஜேஆர்டியையும் முந்தி பறந்தவர்கள். முதல் இந்திய விமானி 1916 ஆம் ஆண்டு பறந்துள்ளார். அப்போது ஜேஆர்டி டாடாவுக்கு வயது 12. அந்த விமானி பின்னர் போர் விமானி ஆனார்.
1857 ஆம் ஆண்டு சிபாய் புரட்சி எனப்படும் முதல் சுதந்திரப் போருக்குப் பின்னர் இந்திய வீரர்களை பிரிட்டிஷார் ஒதுக்கி வைத்தனர். ஆனால் முதல் உலகப் போர் அவர்களை மேலும் மேலும் இந்தியர்களை படையில் சேர்க்க வைத்தது. சிப்பாய்களாக மட்டுமே சேர்க்கப்பட்டனர் அதிகாரிகளாக அல்ல.
முதல் உலகப் போர் சமயத்தின்போது ராயல் விமானப் படை மிகவும் சிறியதாக இருந்தது. அது ராயல் பிளையிங் கார்ப்ஸ் என அழைக்கப்பட்டது. அந்தக் காலத்தில் ஒரு விமானியின் ஆயுட்காலம் தீவிரமாகப் பணி செய்யும்போது 6 வாரங்கள் மிஞ்சாது. எனவே அவர்களுக்கு கூடுதல் விமானிகள் அத்தியாவசியமாகத் தேவைப்பட்டது.
இருப்பினும் இந்தியர்களை சேர்ப்பதற்கு பிரிட்டிஷார் மறுத்தனர். ஏனென்றால் விமானப் படை விமானிகள் அதிகாரிகள் அந்தஸ்து கொண்டவர்கள்.
போரில் பங்கு பெற வேண்டும் என்ற ஆர்வத்துடன் அவர் பிரிட்டிஷ் படையில் சேர்ந்தார். ஏற்கெனவே அவர் பயிற்சி விமானி என்பதால் அவரை ராயல் பிளையிங் கார்பஸில் 1917 ஆம் ஆண்டு சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது.
1918 இல் அவர் 23 ஆம் நம்பர் ஸ்குவாட்ரனில் பெர்டாங்கில்ஸில் பிரான்ஸில் சேர்க்கப்பட்டார். 1918 ஜூனில் அவர் ஒரு ஜெர்மனி உளவு விமானத்தை தாக்கினார். தனது சோப்வித் டால்பின் பைபிளேனை வைத்து அந்த விமானத்தை தாக்கி அழித்தார். பின்னர் 3 நாள் கழித்து அவரது விமானம் விழுந்து நொறுங்கியதில் அவர் இறந்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 23.
அவர் மும்பையில் 1894 அக்டோபர் 24ஆம் தேதி பிறந்தார். இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் சட்டம் படித்தார். சாகஸக்காரராக இருந்த அவர் பறக்கக் கற்றுக் கொண்டு ராயல் ஏரோ கிளப்பில் 1916 ஆகஸ்ட்டில் சான்றிதழ் பெற்றார். சந்தேகேமயில்லாமல் லெப்டினன்ட் ஸ்ரீ கிருஷ்ணா சந்தா வெலிங்கர்தான் முதல் இந்திய பைலட்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications