மார்ச் மாதத்தில் நாட்டின் மொத்த விற்பனை விலைப்பணவீக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் 0.20 சதவீதமாக இருந்த மொத்த விற்பனை விலைப் பணவீக்கம், மார்ச் மாதத்தில் 0.53 சதவீதமாக உயர்ந்துள்ளது. காய்கறிகள், உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம் என்று வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் மொத்த விற்பனை விலைப்பணவீக்கம் எதிர்மறை அளவில் இருந்தது. ஆனால் நவம்பர் மாதத்தில் 0.26 சதவீதம் என பாசிடிவ் வளர்ச்சி பதிவாகி இருந்தது. மார்ச் 2023 நிலவரப்படி மொத்த விற்பனை விலைப்பணவீக்கம் 1.41 சதவீதமாக இருந்தது.

உணவுப் பொருட்களின் பணவீக்கம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது சற்று அதிகரித்து 6.88 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்தில் 5.42 சதவீதமாக இருந்தது. மேலும் காய்கறிகளின் மீதான பணவீக்கம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் (-) 2.39 சதவீத என பணவாட்டம் நிலையில் இருந்ததுடன் ஒப்பிடும் போது 2024 ஆண்டு மார்ச் மாதத்தில் 19.52 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உருளைக்கிழங்கின் மொத்த விலை பணவீக்கம் கடந்த ஆண்டு -25.59 சதவீத என்ற சரிவைக் கண்ட நிலையில், இந்த ஆண்டு 52.96 சதவீதம் அதிகரித்துள்ளது. வெங்காயத்தின் WPI பணவீக்கம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் (-) 36.83 சதவீதமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 56.99 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உலகளவில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்ததன் காரணமாக, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கச்சா எண்ணெய் பிரிவின் பணவீக்கம் 10.26 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இது (-)23.53 சதவீத சரிவில் இருந்தது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) கடந்த வாரம் வெளியிட்ட தரவுகளின்படி, நாட்டின் உணவு பிரிவின் மொத்த பணவீக்கம் (Food Basket) மார்ச் மாதம் 8.52 சதவீதமாக உள்ளது. இது பிப்ரவரி மாதம் 8.66 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இவை அனைத்தையும் விட முக்கியமாக நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாத நிலையில் உணவு பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏப்ரல் மாதத்தில் உணவு பணவீக்கம் மேலும் உயர வாய்ப்புகள் அதிகம், மேலும் கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் மழை பெய்து வந்தாலும் இது பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கும் அளவுக்கு உணவுப் பொருட்கள் உற்பத்தியை மேம்படுத்துமா என்றால் அதற்கான வாய்ப்புகள் குறைவு தான்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications